ANNUAL EXAM 6 TH STD TAMIL QUESTION PAPER AND ANSWER KEY 2024 RANIPET DISTRICT

முழு ஆண்டுப்பொதுத் தேர்வு-2024 , 

இராணிப்பேட்டை , வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய

இங்கே சொடுக்கவும்

                                                      6.ஆம் வகுப்பு தமிழ்- விடைக்குறிப்புகள்

) பலவுள் தெரிக                                                                                                                     6X1=6

வி.எண்

விடைகள்

மதிப்பெண்

1

. அமைதி

1

2

. சிற்பக்கூடம்

1

3

. நூல்+ஆடை

1

4

. மணிபல்லவத்தீவு

1

5

. மதுரை

1

6

. உரிச்சொல்

1

) பொருத்துக                                                                                                                                          4X1=4

7

இலக்கிய மாநாடு - சென்னை

1

8

தமிழ்நாட்டின் சொத்து - பாரதியார்

1

9

குற்றாலம் - அருவி

1

10

தமிழ்க்கையேடுஜி.யு.போப்

1

) ஐந்து வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடையளி                                                               5X2=10

11

மனிதநேயத்துடன் வாழ்பவர்களால்தான் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது

2

12

இறந்த உடலுக்கு உயிர்கொடுத்து எழுப்புதல்

2

13

      1937 ஆம் ஆண்டு சென்னையில் இலக்கிய மாநாடு ஒன்று ந டைபெற்றது.

அம்மாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை வகித்தார் ..வே.சாமிநாதர் வரவேற்புக் குழுத்தலைவராக இருந்தார் . .வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள் மகிழ்ந்தார் .”இந்தப் பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண் டும் என்னும் ஆவல் உண்டாகிறதுஎன்று கூறினார்

2

14

வள்ளுவர்.காளிதாசர்,கம்பர்

2

15

பெயர்ச்சொல் 6 வகைப்படும். அவை:

1. பொருட்பெயர்

2. இடப்பெயர்

3. காலப்பெயர்

4. சினைப்பெயர்

5. பண்புப்பெயர்

6.தொழிற்பெயர்

2

16

அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால் இன்பநிலை வந்து சேரும்.

2

17

    இல்லாதவர்க்குத் தருவதே ஈகை ஆகும். மற்றவை எல்லாம் பயனை எதிர்பார்த்துச்     செய்பவை ஆகும்.

2

) மூன்று  வினாக்களுக்கு மட்டும் ஓரிரு தொடர்களில் விடையளி                                                       3X4=12

     18

  எங்குபார்த்தாலும் வெண்மணல் குன்றுகள்,பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்களின் இடையே பொய்கைகள் என மிக அழகாகக் காட்சியளித்தது.

4

19

ü  அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணைமிகுந்த சான்றோர்க்குத் தொணடு செய்ய வேண்டும்.

ü  அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக ஆக்கிவிட்டால் இன்பநிலை வந்து சேரும்.

ü  எல்லாரும் இன்பமாக வாழவேண்டும்.அதைத்தவிர வேறெதையும் நினைக்க மாட்டேன்.

2

20

தலைப்பு: அன்பு (மாதிரி)

    அன்று ஒரு நாள் மாலைப் பொழுதில் முகிலன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தான். அங்கு  ஒரு நாய்க்குட்டி கத்தும் சத்தம் கேட்டது. அவன் சுற்று முற்றும் பார்த்தான் ஆனால், அவன் கண்ணில் நாய்க்குட்டி படவே இல்லை. ஆனாலும், சத்தம் கேட்டது. அவன் அருகில் உள்ள குழிக்குள் எட்டிப் பார்த்தான். கத்தும் சத்தம் அங்கிருந்துதான் வந்தது. அதில் ஒரு நாய்க்குட்டி விழுந்து கிடந்தது. அதன் மேல் சிறிது அடிபட்டிருந்தது. அதனைக் கண்ட முகிலன் அந்தக் குட்டியை வெளியே எடுத்து அதற்கு முதலுதவி செய்தான் அந்தக் குட்டிக்கு உரிமையாளர் யாரும் அருகில் இல்லாமையால் அந்தக் குட்டியைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று பால் ஊற்றினான். அந்த நாய்க்குட்டியும் வயிறாரக் குடித்த பின் அங்கேயே தூங்கியது. சிறு நேரத்திற்குப் பின் எழுந்து தன்னைப் பாதுகாத்த முகிலனைப் பார்த்து வாலாட்டியது.

2

21

    ஓர் எழுத்து தனித்தோ,ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்.

   இலக்கண அடிப்படையில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என நான்கு வகைப்படும்.

2

22

ü  தீய செயல்களைச் செய்யக்கூடாது.

ü  பிற உயிர்களைக் கொல்லக் கூடாது.

ü  இப்பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றும் எண்ணங்களை விடுதல் வேண்டும்.

2

) அடிமாறாமல் எழுதுக                                                                                                                         2+4=6

     23

பகுத்துண்டு  பல்லுயிர்  ஓம்புதல்  நூலோர்

தொகுத்தவற்றுள்  எல்லாம்  தலை.

2

24

புல்வெளி  யெல்லாம் பூக்காடாகிப்

புன்னகை செய்த பொற்கா லம்!

கல்லைக்கூட காவிய மாக்கிக்

கட்டி நிறுத்திய கலைக்கூடம்!

 

புதுமைகள் செய்த தேச மிது

பூமியின் கிழக்கு வாசலிது!

 

அன்னை நாட்டின் அமுத சுரபியில்

அன்னிய நாடுகள் பசிதீர

அண்ணல் காந்தியின் சின்னக் கைத்தடி

அறத்தின்  ஊன்று கோலாக

புதுமைகள் செய்த தேசமிது

பூமியின் கிழக்கு வாசலிது!

4

) அனைத்து வினாக்களுக்கும்  விடையளி                                                                                           10X1=10

     25

 . அறக்கட்டளை    . தன்னார்வலர்

4

26

அன்பு ,ஆடு ,இரக்கம், ஈதல்,உயிர், ஊக்கம், எளிமை, ஏது, ஐந்து, ஒழுக்கம் ,ஓசை, ஔவை

2

27

ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது.

2

28

கரத்தில் தொடங்கும் மூன்றெழுத்துச்சொல்  எதை எழுதியிருப்பினும் மதிப்பெண் வழங்கலாம்

 

2

29

1. திங்கள் நிலா, கிழமை,மாதம்

2. ஓடு  - ஓடுதல், மண் ஓடு

2

 

30

ü  அரம் கூர்மையாக இருந்தது

ü  அறம் செய்தல் மனிதருக்கு அழகு

 

31

1.இரக்கம்  2. பயம்

 

32

ரு உஉ அ  , ரு , 0

 

33

செடிகொடிகள் வளர நீர் தேவை ( மாதிரி)

 

34

பகுத்துண்டு  பல்லுயிர்  ஓம்புதல்  நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

 

) ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி                                                                                              1X6=6

     35

v  வேலுநாச்சியார் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்தார்.

v  காளையார் கோவிலில் நடந்த போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரிடம் போரிட்டு மரணம் அடைந்தார்.

v  வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார்.

v  அம்முயற்சிக்கு ஐதர் அலி படைகளை அனுப்பி உதவினார்.

v  காளையார் கோவிலில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற போரில் வேலுநாச்சியாரின் கூட்டுப்படை ஆங்கிலேயரைத் தோற்கடித்தது.

v  இப்போரில் மருது சகோதரர்கள்,குயிலி,உடையாள் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர்.

v  இறுதியாக அனைவரது ஒத்துழைப்புடன் வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டெடுத்தார்.

6

24

முன்னுரை:

    மாரி என்பவர் காலணி தைக்கும் ஒரு தொழிலாளி அவர் பசியால் வாடிக் கொண்டிருந்தார். திடீரென ஒரு விசித்திர காலணியின் மூலம் செல்வந்தர் ஆனார் அதன் கதையை காண்போம்.
மாரி:
      திரையரங்கு வாசலில் அவர் காலடி தைத்துக் கொண்டிருப்பவர். அன்றைக்குப் பலத்த மழை. தேநீர் குடிப்பதற்கு கூட காசு இல்லை. அன்றுதான் அந்த அதிசயம் நடந்தது.
சிறுமியின் காலனி:
       திரையரங்கின் வலப்புற சந்துலிருந்து சிறுமி ஒருத்தி அவர் அருகில் வந்து ஒரு காலணியை கொடுத்து தைத்து வைக்கும்படி கூறிவிட்டுச் சென்றாள். காலனி குடித்து விட்டுச் சென்ற சிறுமி மாலை ஆகியும் வரவில்லை.
மாரியின் ஏமாற்றம்:
      மாரி அடுத்த நாளும் அந்த காலணியைத் துடைத்து திரையரங்குக்குக் கொண்டு சென்றார். அன்றும் அச்சிறுமி காலணியை வாங்க வரவில்லை. இப்படியே பல நாட்கள் கழிந்தன.
மாரியின் மனைவி:
       மாரியின் மனைவி ஒருநாள் அந்த காலணியை அணிந்து பார்த்தார். அளவில் சிறியதாக இருந்தாலும் அது அவரது கால்களுக்குப் பொருந்தியது. சிறுமியின் காலணி  அவரது மனைவிக்கு பொருந்தியதை எண்ணி வியந்தார்.

காலணி, செல்வம் சேர்த்தது:

      அக்காலணியை அணிந்தபோது ஒரு புதுவித உணர்வை ஏற்படுத்தியது.இதை அறிந்த மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விநோதமான காலணியை அணிந்து பார்த்து விட்டுச்சென்றனர். காலப்போக்கில் மக்கள் காலணியை அணிந்து பார்க்கப் பணம் தரத்தொடங்கினர்.மாரியிடம் செல்வம் பெருகியது.

சிறுமி மீண்டும் வந்தாள்:

     தனது செல்வ வாழ்விற்குக் காரணமான அச்சிறுமியை ஒருமுறையேனும் பார்க்க வேண்டும் என்று மாரி விரும்பினார்.ஒருநாள் இரவு காலணியைக் கொடுத்த அந்தச் சிறுமி சற்று வளர்ந்த நிலையில் மாரியிடம் காலணியைக் கேட்க,மாரியும் தந்தார். ஆனால் அவளிடம் இருந்த பழைய காலணி சரியாக இருந்தது. மாரியிடம் இருந்த காலணி அவளது மற்றொரு பாதத்திற்குப் போதவில்லை.

முடிவுரை:

   நம்முடைய எண்ணங்களை பொறுத்து தான் நம்முடைய வாழ்க்கை அமைகிறது. நாம் மகிழ்ச்சி தரும் எண்ணங்களை நினைத்து வாழ்ந்தால் நமக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையே கிடைக்கும். துன்பம் தரும் எண்ணங்களை நினைத்து வாழ்கின்றவர்களுக்கு துன்பமான வாழ்க்கையே கிடைக்கும்.

6

) கடிதம்/கட்டுரை எழுதுக                                                                                                                        1X6=6

     37

    

தேசிய ஒருமைப்பாடு

முன்னுரை:

            மக்கள் அனைவரிடமும் அமைதி, சகிப்புத்தன்மை, மனித நேயம், மத, இன நல்லிணக்கம் ஆகியவை இருந்தால்தான் தேசிய ஒருமைப்பாடு நிலைத்திருக்கும். தேசிய ஒருமைப்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்பதைக் காண்போம்.

வேற்றுமையில் ஒற்றுமை:

      இந்தியா பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல சாதிகள் என்று வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வில் ஒன்று பட்டிருக்கிறது. அனைவரையும் இணைக்கின்ற மனிதச் சங்கிலியாக தேசிய ஒருமைப்பாடு திகழ்கிறது. இதைத்தான் பாரதி,

       “ முப்பது கோடி முகமுடை யாள்உயிர் 

         மொய்ம்புற ஒன்றுடையாள்”  - என்று பாடினார்.

தேசிய ஒருமைப்பாடு-சுதந்திரத்தின் அடித்தளம்:

    இன்று நாம் அனுபவிக்கும் சுதந்தரம் எளிதாகக் கிடைத்ததில்லை. ஒருமைப்பாட்டு உணர்வு என்னும் உரமிட்டு, கண்ணீரும் செந்நீரும் சிந்தி, எண்ணற்றோர் இன்னுயிர்த் தியாகம் செய்து சொல்ல முடியாத துன்பங்களுக்கு உள்ளாக்கிப் பெற்றதாகும். இவ்வாறு பெற்ற விடுதலைக்கு அடித்தளமாக அமைந்தது தேசிய ஒருமைப்பாடே ஆகும்.

முடிவுரை

    நாம் ஒவ்வொருவரும் தேசிய ஒருமைப்பாட்டையும் உலக ஒருமைப்பாட்டையும் கடைப்பிடித்து வாழ வேண்டும். அப்பொழுதுதான் 

  “எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்” என்ற பாரதியின் கனவு நனவாகும்.

ஒருமைப்பாட்டை வளர்ப்போம்!   உலக அரங்கில் உயர்வோம்!

6

பதிப்பகத்தாருக்குக் கடிதம்

அனுப்புநர்

   வா. வெண்மதி,

   மாணவர் செயலர்,

   அரசினர் உயர்நிலைப் பள்ளி,

   தணிகைப்போளூர்,

   இராணிப்பேட்டை மாவட்டம்-631003.

பெறுநர்

   தமிழ்நிலா பதிப்பகம்,

   4, வள்ளுவர் தெரு,

   மதுரை-2.

ஐயா,

   பொருள் : தமிழ்-தமிழ் அகராதிகள் அனுப்பக்கோருதல் சார்பாக.

      வணக்கம். எங்கள் பள்ளி நூலகத்திற்காக தமிழ்-தமிழ் அகராதிகள் பத்துப் படிகள் தேவைப்படுகின்றன. எனவே மேற்கண்ட முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அகராதிகளை அனுப்புமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி ஐயா!!

இணைப்பு:

  1.வங்கியில் பணம் செலுத்தியதற்கான வரைவோலை நகல்.

                                                                                                                                              இப்படிக்கு,

                                                                                                        தங்கள் பனிவுடைய

                                                                                                                   வா. வெண்மதி,


                                                                                                                                     

இடம் : தணிகைப்போளூர்,

நாள் : 09-03-2024


உறைமேல் முகவரி:

தமிழ்நிலா பதிப்பகம்,

4, வள்ளுவர் தெரு,

மதுரை-2.

 

 

 

 

6

 பதிவிறக்கம் செய்ய


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை