IRATTAI SORKALUM PORULUM VINADI VINAA

    தமிழில் வழங்கும் இரட்டைச்சொற்களும், பொருளும்


(வினாடிவினாவிற்கான இணைப்பு பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ளது)

   தமிழர்தம் வாழ்வில் பட்ட அறிவை "பட்டறிவு'(அனுபவ அறிவு) என்பர். சொல்லும் பழமொழிகளைச் "சொலவடை' என்பர்.

   அதைப் போலவே, மக்கள் தம்மை மீறிப் பயன்படுத்தும் இரட்டைச் சொற்கள் ஏராளம். ஆனால், மக்கள் தாம் நினைத்துச் சொல்லும் இரட்டைச் சொல்லுக்கும், அதன் உண்மையான பொருளுக்கும் தொடர்பே இருக்காது. அவற்றின் உள்ளர்த்தமே உண்மையான பொருளாகும். சிலவற்றை நோக்குவோம் :
குண்டக்க மண்டக்க

குண்டக்க -இடுப்புப்பகுதி,

மண்டக்க - தலைப் பகுதி,

சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது,

வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது

அந்தி, சந்தி:

அந்தி - மாலை நேரத்திற்கும், இரவுக்கும் இடையில் உள்ள பொழுது..

சந்தி -இரவு நேரத்திற்கும், காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது..

அக்குவேர், ஆணிவேர்:

அக்குவேர் -செடியின் கீழ் உள்ள மெல்லியவேர்..
 
ஆணி வேர் செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்..

அரை குறை:

அரை -ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது..

குறை - அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது

அக்கம், பக்கம்:

அக்கம் - தன் வீடும், தான் இருக்கும் இடமும்..

பக்கம் - பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்..

இடக்கு முடக்கு:

இடக்கு - கேலியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்..

முடக்கு - கடுமையாக எதிர்த்து தடுத்து பேசுதல்..

அலுப்பு சலிப்பு

அலுப்பு - உடலில் உண்டாகும் வலி..

சலிப்பு - உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்,...

தோட்டம் துரவு, தோப்பு துரவு

தோட்டம் - செடி, கொடி கீரை பயிரிடப்படும் இடம்..

தோப்பு - கூட்டமாக இருக்கும் மரங்கள்..

துரவு - கிணறு..

காடு கரை :

காடு - மேட்டு நிலம் (முல்லை)..

கரை - வயல் நிலம் .( மருதம், நன் செய், புன்செய்)..

நத்தம் புறம்போக்கு

நத்தம் -ஊருக்குப் பொதுவான மந்தை...

புறம்போக்கு -ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்..

பழக்கம் வழக்கம்

பழக்கம் - ஒருவர் ஒரே செயலை பல காலமாக செய்வது..

வழக்கம் - பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்தது செய்வது..

சத்திரம் சாவடி :

சத்திரம் -இலவசமாக சோறு போடும் இடம்

சாவடி இலவசமாக தங்கும் இடம்..

கிண்டலும் கேலியும்:

கிண்டல் - ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குதல்

கேலி - எள்ளி நகைப்பது..

ஒட்டு உறவு :

ஒட்டு - இரத்த சம்பந்தம் உடையவர்கள்..

உறவு -கொடுக்கல் சம்மந்தமான வகையில், நெருக்கமானவர்கள்..

பட்டி தொட்டி :

பட்டி -கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர் )..

தொட்டி -மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்..

கடை கண்ணி :

கடை தனித்தனியாக உள்ள வியாபார நிலையம்...

கண்ணி -தொடர்ச்சியாக அமைந்த கடைகள், கடை வீதிகள்...

பேரும் புகழம் :

பேர் - வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்புப்பெருமை..

புகழ் - வாழ்விற்குப் பிறகும் நிலைப் பெற்றிருக்கும் பெருமை..

நேரம்.காலம் :

நேரம் - ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்து கெள்வது

காலம் ஒரு செயலைச்செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு..

கூச்சல், குழப்பம்:

கூச்சல் - துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம்...(கூ கூவுதல்)

குழப்பம் - துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தை கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்....

நகை,நட்டு

நகை - பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்)

நட்டு - சிறிய அணிகலன்கள் ..

பிள்ளை,குட்டி:

பிள்ளை -பொதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்..

குட்டி - பெண் குழந்தையைக் குறிக்கும்..

பங்கு, பாகம்:

பங்கு - கையிருப்பு.. பணம், நகை, பாத்திரம். ( அசையும் சொத்து).

பாகம் - வீடு, நிலம்.. அசையாத்சொத்து..

ஈவு, இரக்கம் :

ஈவு - (ஈதல்) கொடை கொடுத்தல், வறியவருக்கு உதவுதல்..

இரக்கம் - பிற உயிர்களின் மேல் அன்பு காட்டுதல்..

சூடு, சொரணை:

சூடு - ஒருவர் தகாதசெயல், சொல்லை செய்யும்போது உண்டாகும் மனக்கொதிப்பு..

சொரணை - நமக்கு ஏற்படும் மான உணர்வு..

விளக்கக் காணொளி👇



வினாடி வினாவில் பங்கேற்க 👇👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை