10 TH STD TAMIL POTHUKATTURAI KANINIYIN PAYANPAADU கணினியின் பயன்பாடு

 13. கணினி

பொருளடக்கம்

v முன்னுரை

v தோற்றமும் வளர்ச்சியும்

v இணையம்

v இணையதள வசதி

v கணினிவழிக் கல்வி

v பயன்படும் துறைள்

v உலகம் உள்ளங்கையில்

v முடிவுரை


முன்னுரை

          இருபதாம் நூற்றாண்டின் இணையற்றா கண்டுபிடிப்புகளுள் ஒன்று கணினி. இதை முறையாக இயக்கினால் மனித மூளையைப் போன்று ஆயிரம் மடங்கு துல்லியமாகச் செயல்படும். இத்தகைய கணினியின் தோற்றம், வளர்ச்சி, செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

தோற்றமும் வளர்ச்சியும்

          பாரிஸ் நகரைச் சேர்ந்தபிளேஸ் பாஸ்டல்என்பவர் கணக்கிடும் கருவியா மணிச்சட்டகத்தைக் கண்டுபிடித்தார். இதுவே, கணினி கண்டுபிடிப்பிற்கு அடிப்படை. 1833இல் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தசார்லஸ் பாப்பேஜ்  என்பவர் முதன்முதலில் கணினியை வடிவமைத்தார். இவரே கணினியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இணையம்

          இணையம்  என்ற சொல்லிற்கு வித்திட்டவர்ஜான் பாஸ்டல்என்ற அமெரிக்கர் ஆவார். உலகம் முழுவதிலும் உள்ள கணினியை இணைத்து இணையத்தை உருவாக்கினார். இதன் மூலம் உலகின் அனைத்து துறைச்சார்ந்த செய்திகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

இணையதள வசதி

          இணையதள வசதி அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. இந்த இணையதள வசதியைப் பெற கணினி, மாற்றி, தொடர்மென்பொருள் முதலியன தேவை. மேலும், இணையதள வசதி வழங்குனரிடம் தனிக் கணக்கொன்று உருவாக்கி, சந்தா தொகை செலுத்த வேண்டும். இணையதள வசதியை கம்பிமாற்றி மூலமோ செயற்கைக்கோள் மூலமோ பெறலாம்.

கணினிவழிக் கல்வி

          கணினியைப் பயன்படுத்தி கற்கும் கல்வியே கணினிவழிக் கல்வி ஆகும். கணினி வழிக் கல்வி பெற இணையதள வசதியோடு நம் ஐயங்களை அனுப்புவதற்கும் பெருவதற்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும். இன்று முகத்தைப் பார்த்து உடனுக்குடன் பேசும் வசதி கணினிவழிக் கல்வியை எளிதாக்கிவிட்டது. கணினி மூலம் மொழிப்பாடம் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் கற்கலாம்.

பயன்படும் துறைகள்

          இன்று கணினி பயன்படாத துறையே இல்லை. அறிவியல், வணிகம், தொழில்நுட்பம், மருத்துவம், வானவியல் முதலான அனைத்துத் துறைகளிலும் கணினி பயன்படுத்தப்பட்டு வேலை பளு குறைகிறது.

உலகம் உள்ளங்கையில்

          தொலைத்தொடர்புத் துறையில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட முன்னேற்றத்தைவிட கடந்த இருநூற்றாண்டுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் அதிகம். அதிலும் இணையதள வசதி கைப்பேசி வழியே நம் கைகளிலே உலவுகிறது. இன்று வீட்டிலிருந்தபடியே உலகத்தைப் பார்க்கவும் படிக்கவும் இரசிக்கவும் முகிகிறது.

முடிவுரை

          இந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பான கணினியில் அறிவை வளர்த்துக்கொள்வோம். ‘ஆயுதம் செய்வோம்என்று பாரதி கூறியதை எளிமையாக்குவோம்!

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்...

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை