10 TH STD TAMIL POTHUKATTURAI NOOLAKAMUM ATHAN PAYANPAADUM நூலகமும் அதன் பயன்பாடும்

 14. நூலகம்

பொருளடக்கம்

v முன்னுரை

v பண்டைக்காலத்தில் நூலகத்தின் நிலை

v நூலகத்தின் தோற்றம்

v நூலகத்தின் பல்வேறு பெயர்கள்

v நூலகத்தின் பயன்கள்

v நூலகத்தைப் பயன்படுத்தும் முறை

v பொது நூலகத்துறை

v அண்ணா நூற்றாண்டு நூலகம்

v முடிவுரை

முன்னுரை

          நூலகம் என்று கூறியவுடனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணர்வு தோன்றும். நூலகங்களில் புத்தகங்கள் வரிசையாகவும் ஓர் ஒழுங்கான முறையிலும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி, அங்கு நிலவும் அமைதி, பல்வேறுத் துறைச்சார்ந்த புத்தகங்கள் தோற்றம் முதலியன நம்மை பரவசப்படுத்தும். அத்தகைய நூலகங்கள் பற்றி காண்போம்!

பண்டைக்காலத்தில் நூலகத்தின் நிலை

          பண்டைகாலத்தில் மக்கள் தம் எண்ணங்களையும் கருத்துகளையும் கற்பாறைகள், களிமண்பலகைகள், மரப்பட்டைகள், தோல்கள், பனையோலைகள் முதலியவற்றில் எழுதி வந்தனர். தாங்கள் அறிமுகப்படுத்திய பின்பும்கூட பண்டைகாலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் மக்களிடையே நூல்களின் பயன்பாடு குறைவாக இருந்தது.

நூலகத்தின் தோற்றம்

          கற்றவர்கள் புதிது புதிதாக நூலகளைப் படைத்ததனால் இலக்கியங்களும் இலக்கணங்களும் தோன்றி, மக்களீன் வாழ்க்கை நெறியை செம்மைப்படுத்தின. மக்களின் தேவைகளை நிறைவேற்ற பல்வேறு துறைசார்ந்த நூல்கள் எழுதப்பட்டு அவை அனைத்தையும் தொகுத்து நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.

நூலகத்தின் பல்வேறு பெயர்கள்

          புத்தகச்சாலை, ஏடகம், சுவடியகம், சுவடிச்சாலை, வாசகச்சாலை, படிப்பகம், நூல்நிலையம், பண்டாரம் முதலியன நூலகத்தின் பல்வேறு பெயர்களாகும்.

நூலகத்தின் பயன்கள்

          நூலகங்கள் இலக்கியம், இலக்கணம், தத்துவம், கணிதம், அறிவியல், வானியல், மருத்துவம் முதலிய அனைத்துத் துறைச்சார்ந்த அறிவையும் நமக்குத் தருகிறது.

நூலகத்தைப் பயன்படுத்தும் முறை

          நாம் நூலகத்தில் அமைதிக் காக்கவேண்டும். எடுக்கும் நூல்களையோ செய்தித்தாள்களையோ எடுக்கும் இடத்திலேயே வைக்க வேண்டும். நூல்களைக் கிழிக்கவோ மடிக்கவோ கூடாது. அதில் எதையும் எழுதவும் கூடாது. உறுப்பினர் ஆனபிறகு உறுப்பினர் அட்டையைக் கொடுத்து நமக்குத் தேவைப்படும் புத்தகங்களை எடுத்துக்கொண்டு செல்லலாம். அதை உரிய நேரத்தில் ஒப்படைத்து தேவைப்படும் வேறு புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

பொது நூலகத்துறை

          ஓர் அரசின் தலையாய கடமை தம்நாட்டில் வாழும் மக்களை அறிவுடையவர்களாக ஆக்குவதே. அதை நோக்கமாகக் கொண்டே ஊர்தோறும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. மாநில மைய நூலகங்கள், மாவட்ட நூலகங்கள், வட்டார நூலகங்கள் முதலியனவும் ஏற்படுத்தப்பட்டன.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

          2010 ஆம் ஆண்டு அண்ணாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.  அந்த நினைவைப் போற்றும் வகையில் சென்னைக் கோட்டூர்புரத்தில் எட்டு ஏக்கர் நிலப்பரப்பில் பெரியதோர் நூலகம் கட்டப்பட்டது. இதில் 11.5 இலட்சம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 1200பேர் உட்கார்ந்து படிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், இங்கு குளுகுளு வசதியுடன் கூடிய கணினி நூலகமும் உள்ளது.

முடிவுரை

          ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்என்பதைப்போல நூலகம் இல்லா ஊருக்கு அறிவு பாழாகும். இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நூலகங்களில் நாம் அமைதியைக் கடைபிடிப்பதோடு நூல்களைப் பயன்படுத்திச் சான்றோர் ஆவோம்!

 பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்...

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை