10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL- 7

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-7


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1) சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடு

அ) உழவு, மண், ஏர், மாடு ஆ) மண், மாடு, ஏர், உழவு  இ) உழவு, ஏர், மண், மாடு   ஈ) ஏர்,உழவு,மாடு,மண் 

2) ”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்மாலவன் குன்றமும் வேலவன்  குன்றமும் குறிப்பது முறையே

அ)தி ருப்பதியும், திருத்தணியும்       ஆ) திருத்தணியும், திருப்பதியும்            

இ) திருப்பதியும், திருச்செந்தூரும்   ஈ) திருப்பரங்குன்றமும், பழனியும் 

3)”தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்த அரசன்என்னும் தொடர் உணர்த்தும் பொருள்

அ)மேம்பட்ட நிர்வாகத் திறன் பெற்றவர் ஆ) மிகுந்த செல்வம் உடையவர்                                         

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்   ஈ)நெறியோடு நின்று காவல் காப்பவர் 

4) இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------

அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல் இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

5) தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக  மா பொ சி கருதுவது------------

அ) திருக்குறள்  ஆ) புறநானூறு  இ) கம்பராமாயணம்  ஈ) சிலப்பதிகாரம் 

6) ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ.உ.சி தொடங்கிய கப்பல் நிறுவனம்--------

அ)சுதேசி  ஆ) தமிழக கப்பல் நிறுவனம்  இ) வ.உ.சி  ஈ) மாடன் இந்தியா 

7) சிலம்புச் செல்வர் என்று போற்றப்பட்டவர்---------

அ) இளங்கோவடிகள்   ஆ) பாவாணர்   இ) சுகி சிவம்  ஈ) ம பொ சி

8)மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாக திகழும் சங்க இலக்கியப் பாடல்கள்

அ)புறநானூறு   ஆ) பதிற்றுப்பத்து   இ) குறுந்தொகை   ஈ) அகநானூறு 

9) கைக்கிளை என்பது-------

அ) போர் அறம் ஆ) ஈகை பண்பு  இ) ஒருதலைக் காமம்   ஈ) பொருந்தாக் காமம்

10) ஆநிரை பற்றிய திணைகள்

அ) வெட்சி,கரந்தை   ஆ) பாடாண்,பொதுவியல்   இ) நொச்சி ,உழிஞை   ஈ) கைக்கிளை, பெருந்திணை

பாடலைப்படித்து வினாக்களுக்கு (வினா எண்:12,13,14,15) விடையளிக்க

"பகர்வனர் திரிதரு நகர வீதியும்;

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்

கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்"

1. மோனைச் சொற்களைத் தேர்க.

அ) பகர்வனர், கட்டு ஆ) வீதியும், நூலினும்  இ) பருத்தி, காருகர்  ஈ) பகர்வனர், பட்டினும்

2. காருகர் என்னும் சொல்லின் பொருள் -

அ) நெய்பவர் ஆ) சிற்பி இ) ஓவியர் ஈ) உமணர்

3. எதுகைச் சொற்களைத் தேர்க.

அ) பகர்வனர், திரிதரு ஆ) பட்டினும், கட்டு  இ) நூலினும், இருக்கையும் ஈ) திரிதரு, மயிரினும்

4. செய்யுள் இடம்பெற்றுள்ள நூல்

அ. நீதிவெண்பா ஆ. கம்பராமாயணம்  இ. சிலப்பதிகாரம்  ஈ. திருவிளையாடற் புராணம்

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28)   

1. பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட்டும் இவ்வணிகர்கள்

யாவர்?

விடை:       

# பாசவர்- வெற்றிலை விற்பவர்.

# வாசவர்- நறுமணப் பொருட்களை விற்பவர்கள்

#  பல்நிண வினைஞர்- பல்வகை இறைச்சிகளை விலை கூறி விற்பவர்கள்

# உமணர்உப்பு விற்பவர்

2. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

விடை: மன்னர் தம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் காலம் கடந்து உணர்த்த ,அவை அனைத்தையும் கல்லில் செதுக்கினார்கள். இதுவே மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கமாகும்.                            

3. வறுமையிலும் படிப்பின்மீது நா ட்டம்  கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

விடை: நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும் நூல்களையே வாங்குபவர் ம.பொ.சி.

4. புறத்திணை களில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

விடை: வெட்சி-கரந்தை  ,வஞ்சி-காஞ்சி ,நொச்சி-உழிஞை

5. பொருத்தமான இடங்க ளில் நிறுத்தக் குறியிடுக.

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறுதமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி.

விடை

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி, சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி,  சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி,  நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினை வூட்டி,  விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு  தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன்,  - ம.பொ.சி.

 6) பின்வரும் தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க.

வரப் போகிறேன்

இன்னும் சற்று நேரத்தில் வரப்போகிறேன்

இல்லாமல் இருக்கிறது

பெரும்பாலான கிணறுகளில் நீர் இல்லாமல் இருக்கிறது

கொஞ்சம் அதிகம்

இவனுக்கு குறும்பு கொஞ்சம் அதிகம்

முன்னுக்குப் பின்

பாலன் முன்னுக்குப் பின் முரணாக பேசுகிறான்

மறக்க நினைக்கிறேன்

சோகங்களை மறக்க நினைக்கிறேன்

 7) தொகைச் சொற்களைப் பிரித்து எழுதி,தமிழ் எண்ணுரு தருக

            மூவேந்தர்களால் நாற்றிசையும் போற்றி வளர்க்கப்பட்ட முத்தமிழே, உலக மொழிகளில் உயர்ந்ததென்ற செம்மாந்த கூற்றிற்கு, தமிழ் இலக்கியங்களில் அமைந்துள்ள இருதிணை அமைப்பே காரணமாகும். முப்பாலை முழுமையாகத் தந்த தமிழின் சிறப்பினை ஐந்திணைகளில் அழகுற விளக்குபவை சங்க இலக்கியங்கள். நானிலத்தில் பசித்தவருக்கு அறுசுவை உணவுபோல் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர்க்கு மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப் பெருமை சாற்றுகிறது.

தொகைச்சொற்கள்

பிரித்து எழுதுக

தமிழ் எண்ணுரு

மூவேந்தர்

மூன்று + வேந்தர்

நாற்றிசை

நான்கு + திசை

முத்தமிழ்

மூன்று + தமிழ்

இருதிணை

இரண்டு + திணை

முப்பால்

மூன்று + பால்

ஐந்திணை

ஐந்து + திணை

ரு

நானிலம்

நான்கு + நிலம்

அறுசுவை

ஆறு + சுவை

பத்துப்பாட்டு

பத்து + பாட்டு

0

எட்டுத்தொகை

எட்டு + தொகை

 6) ஊர்பெயர்களின் மரூஉவை எழுதுக:-       

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

ஊர் பெயர்

மரூஉ

புதுக்கோட்டை

புதுகை

கோயம்புத்தூர்

கோவை

கும்பகோணம்

குடந்தை

திருச்சிராப்பள்ளி

திருச்சி

நாகப்பட்டினம்

நாகை

திருநெல்வேலி

நெல்லை

உதகமண்டலம்

உதகை

புதுச்சேரி

புதுவை

மன்னார்குடி

மன்னை

மயிலாப்பூர்

மயிலை

சைதாப்பேட்டை

சைதை

தஞ்சாவூர்

தஞ்சை

 7) அகராதியில் காண்க:

1)     மிரியல்மிளகு

2)    வருத்தனைதொழில்

3)    அதசிசணல்

4)    துரிஞ்சில் - வௌவால்

8) கலைச்சொல் தருக:

1)    Consulate – துணைத்தூதரகம்

2)   Patent – காப்புரிமை

3)   Document - ஆவணம்

4)   Guild - வணிகக் குழு

5)   Irrigation - பாசனம்

6)   Territory – நிலப்பகுதி

மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 29 முதல் 37)

1. முதல்மழை விழுந்ததும்’ என்னவெல்லாம் நிகழ்வதாக கு.ப.ரா. கவிபாடுகிறார்?

விடை:

ü  மண்ணின் மேல்பக்கம் ஈரமானது.

ü  பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர்.

ü  மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று நிமிர்ந்து வளரும்

ü  உழவர் நம்பிக்கையுடன் உழுவர்.

2. அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.

விடை:

ü  வஞ்சித்திணை: மண்ணாசை கருதிப் போருக்குச் செல்வது.

ü  காஞ்சித்திணை:எதிர்த்துப் போரிடுவது.

3. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

விடை:

இடம்: இத்தொடர்  .பொ.சி  அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம்

          பெற்றுள்ளது.

பொருள்: எங்கள் தலையை கொடுத்தாவது  தலைநகரைக் காப்பாற்றுவோம்.

விளக்கம்: ஆந்திர மாநிலம் பிரியும்போது, சமயத்தில், செங்கல்வராயன்தலைமையில்  கூட்டப்பட்ட கூட்டத்தில்  

                 .பொ.சி அவர்கள் தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்என்று முழங்கினார்.

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1) மெய்க்கீர்த்தி பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக. (வினா எண்: 38)

விடை:

ü  மெய்க்கீர்த்திப் பாடல் சொல் நயம் , பொருள் நயம் மிக்கது

ü  இரண்டாம் இராசராசன் கருணையுடன் ஆட்சி செய்தான்

ü  மக்கள் அனைத்து நற்பண்புகளிலும் சிறந்து விளங்கினர்

ü  கல்வியில் சிறந்து விளங்கினர்.

ü  அவனது நாட்டில் எவ்வித குற்றங்களும் நடைபெறவில்லை.

ü  மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர்.

2)சிலப்பதிகாரம் மருவூர்ப்பாக்கம் வணிக வீதிகளை இக்கால வளாகங்களோடும் அங்காடிகளோடும்  ஒப்பிட்டு எழுதுக.    (வினா எண்: 38)

விளம்பரம்:

      சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம் கிடையாது. ஆனால் இன்றளவிலோ  வணிக வளாகங்களும்,வணிகநிறுவனங்களும்  பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர்.

பண்டமாற்று முறை:

      மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால் தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது.

அங்காடிகள்:

      சிலப்பதிகாரம் கூறும்   மருவூர்ப்பாக்கத்தில்பலவிதமான வணிகர்களும்  ஒரே இடத்தில் இருந்து விற்பனை செய்தனர்.

       ஆனால், இன்றைய சூழலில்  அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில் உள்ளன.

பல தொழில் செய்வோர்:

       மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும்  வாழ்ந்து வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்  பலர் உள்ளனர்.

வணிக வளாகங்கள்:

      மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில் நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது  வானுயர் கட்டடங்களுக்கு  இடம் பெயர்ந்து உள்ளது.

3)காட்சியைக்கண்டு கவினுற எழுதுக.    (வினா எண்: 40)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!



 4) கல்வெட்டுகள் நம் வரலாற்றைப் புலப்படுத்துபவை. இவற்றைப் பராமரிக்கவும்,பாதுகாக்கவும் உங்களால் இயன்ற செயல்களை பட்டியலிடுக.     (வினா எண்: 42)

1. கல்வெட்டுகளின் வழி அறியலாகும் செய்திகளை அனைவருக்கும் கூறுதல்.

2. கல்வெட்டுகளின் மதிப்பை குறைக்கும்படி எதுவும் கூற, அனுமதிக்காமை.

3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம் அடையச் செய்தல்.

4. கல்வெட்டுக்கள் வரலாற்றை அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல்.

5. கல்வெட்டு மன்னர்களைப் பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல்.

5)நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக.   (வினா எண்: 39)

அனுப்புநர்

                        அ அ அ அ அ,

                        100,பாரதி தெரு,

                        சக்தி நகர்,

                        சேலம் – 636006.

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்விதை நாளிதழ்,

,           சேலம் – 636001

ஐயா,

பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல்சார்பு

            வணக்கம். நான்  தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில்உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “  எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                                                                                இப்படிக்கு,

            1. கட்டுரை                                                                                                                             தங்கள் உண்மையுள்ள,

இடம் : சேலம்                                                                                                                            அ அ அ அ அ.

நாள் : 04-03-2021

 

பெறுநர்

            ஆசிரியர் அவர்கள்,

            தமிழ்விதை நாளிதழ்,

,           சேலம் – 636001

 

         

 

உறை மேல் முகவரி:

 6) மொழிபெயர்க்க:-    (வினா எண்: 42)

            Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

விடை: சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 43 முதல் 45)

2) நாட்டு விழாக்கள்- விடுதலைப் போராட்ட வரலாறு- நாட்டின்  முன்னேற்றத்தில் மாணவர் பங்கு குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாட்டுப்பற்று என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

(வினா எண்: 43)

நாட்டு விழாக்கள்:

        நமது நாட்டை எண்ணி பெருமை கொள்ள  எண்ணற்ற நாட்டு விழாக்கள் இருந்தாலும், விடுதலை நாள் விழாவும், குடியரசு நாள் விழாவும் அவை அனைத்திலும்  சிறந்தவையாகும்.

விடுதலைப் போராட்ட வரலாறு:

    பதினைந்தாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நம்மிடையே இருந்த ஒற்றுமையின்மையைப் பயன்படுத்தி,ஆங்கிலேயர் நம்மை அடிமைப்படுத்தினர்.எனவே மக்களிடையே விடுதலை வேட்கையை ஏற்படுத்தி வெள்ளையருக்கு எதிராக போராடத்  தூண்டினர்.

நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு:

        நாட்டுக்காக மாணவர்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. துன்பத்தில் மற்றவர்க்கு உதவுதல், வறுமை, கல்வியின்மை அறியாமை, சாதி மத வேறுபாடுகள், தீண்டாமை மூடப்பழக்கங்கள்,ஊழல் ஆகியவற்றிற்கு எதிராகக் குரல் கொடுத்தல்  ஆகிய பண்புகளை மாணவர்கள் பெற்றிருத்தல் மிகவும் சிறப்பு.

மாணவப் பருவமும், நாட்டுப் பற்றும்:

         மாணவர்கள் மக்களுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். அவர்கள் தங்களை சாரண சாரணியர் படை நாட்டு நலப்பணித் திட்டம் தேசிய பசுமைப்படை எனப் பல்வேறு வகையில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

2) எவரேனும் ஓர் அறிஞர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் உங்களைக் கவர்ந்த ஒன்றை அவரே சொல்வதைப்போல் தன்வரலாறாக மாற்றி எழுதுக.  (வினா எண்: 43)

விடை:

ü  என்னை மிகவும் கவர்ந்த அறிஞர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆவார். இங்கு அவரே சில நிகழ்வுகளைப்பற்றி கூறுவதைக் காண்போம்

ü  வறுமையால் எனது கல்வியை இழந்தேன். இருந்தாலும், கேள்வியறிவால் ஞானம் பெற்றேன்

ü  வறுமையிலும் நூல்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வமாய் இருந்தேன்

ü  தமிழர்களை ஒன்றிணைக்க முயன்றதற்காக ஆங்கிலேய அரசு என்னைச் சிறையில் அடைத்த்து.

ü  பல எல்லைப்போராட்டங்களை நடத்தினேன்.

ü  எனது போராட்டத்தால் திருத்தணியும், சென்னையும் தமிழகத்தோடு இணைந்தது.

3) உங்கள் ஊரில் கடின உழைப்பாளர் – சிறப்பு மிக்கவர் – போற்றத்தக்கவர் – என்ற நிலைகளில் நீங்கள் கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து எழுதுக.  (வினா எண்: 44)

விடை:

ü  எங்கள் ஊரில் நான் பார்த்து வியந்த கடின உழைப்பாளர் உணவகம் நடத்தும் சாரதா

ü  இரண்டு பெண்கள் இணைந்து அவ்வுணவகத்தை நடத்துவர்.

ü  அதிகாலையிலேயே அதற்கான வேலைகளைத் தொடங்கி விடுவார் சாரதா

ü  அனைத்து உணவுகளையும் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமாகவும், சுவையாகவும் வழங்க வேண்டும் என எண்ணுவார்.

ü  குறைந்த விலையில் அனைவரும் வயிராற உண்ணவேண்டும் என எண்ணுபவர்.

ü  செய்யும் தொழிலை தெய்வமாகக் கருதுபவர்

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்..
 

You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை