மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு
(BASELINE ASSESMENT)
வகுப்பு (9-12)
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு (Baseline Assessment) வருகின்ற ஜூன் மாதம் 19.06.2024 மற்றும் 2006.2024 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மற்றும் ஜூன் 18.06.2024 & 19.06.2024 ஆகிய தேதிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும். ஜூலை 0207.2024 & 03.07.2024 ஆகிய தேதிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 03.07.2024 & 04.07.2024 ஆகிய தேதிகளில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டி மதிப்பீடு நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
HI TECH LAB ல் நடத்துவதற்கான எளிய வழிமுறைகள்:
1. தலைமை ஆசிரியர் EMIS ID (அல்லது) பள்ளியின் UIDISE CODE ஐ பயன்படுத்தி http://locsrv.in:8080 என்ற இணையதள முகவரியில் உள் நுழைக.
2. அந்த வலைப்பக்கத்தில் உள்நுழைந்தவுடன் MANAGE என்பதைச் சொடுக்கி UPDATE CREDENTIALS என்பதை சொடுக்கவும். பிறகு LOGOUT செய்துவிடவும்.
3. மீண்டும் LOGIN செய்து MANAGE என்பதைச் சொடுக்கி FETCH EVENTS பிரிவில் உள்ள UPDATE என்பதைச்சொடுக்கவும்.பிறகு LOGOUT செய்துவிடவும்.
(இந்த மூன்று படிநிலைகளையும் முன்னர் நாளே செய்யலாம்)
வினாடி வினா நடைபெறும் நாளன்று ஆசிரியர் செய்ய வேண்டியது
4. தலைமை ஆசிரியர் EMIS ID (அல்லது) பள்ளியின் UIDISE CODE ஐ பயன்படுத்தி http://locsrv.in:8080 என்ற இணையதள முகவரியில் உள் நுழைக.
5. வினாத்தாட்கள் அதற்கான நிகழ்வுகளுடன் திரையில் தோன்றும். அதில் வரும் DOWNLOAD QP என்பதனை சொடுக்கவும்.
வினாடி வினா நடைபெறும் நாளன்று மாணவர் செய்ய வேண்டியது
6. மாணவர்கள் EMIS ID , PASSWORD ஐ பயன்படுத்தி http://locsrv.in:8080 என்ற இணையதள முகவரியில் உள் நுழைக. வினாடி வினாவைத் தொடங்க START என்பதைச்சொடுக்குக. அனைத்து கேள்விகளுக்கும் விடையளித்த பிறகு SUBMIT என்பதனைச் சொடுக்குக.
இறுதியாக ஆசிரியர் செய்ய வேண்டியது
7. அனைத்து மாணவர்களும் வினாடிவினாவை முடித்தபிறகு, தலைமை ஆசிரியர் EMIS ID (அல்லது) பள்ளியின் UIDISE CODE ஐ பயன்படுத்தி http://locsrv.in:8080 என்ற இணையதள முகவரியில் உள் நுழைக. அந்த வலைப்பக்கத்தில் உள்நுழைந்தவுடன் MANAGE என்பதைச் சொடுக்கி, SEND RESPONSES என்பதைச் சொடுக்கியவுடன் மாணவர்களது வினாடி வினா முடிவுகள் MAIN SERVER க்கு சென்றுவிடும்