முதல் இடைப்பருவத்தேர்வு 2024
9.ஆம் வகுப்பு -தமிழ்
👉 இராணிப்பேட்டை மாவட்டம்
👉 வேலூர் மாவட்டம்
👉 காஞ்சிபுரம் மாவட்டம்
👉 திருவள்ளூர் மாவட்டம்
👉 செங்கல்பட்டு மாவட்டம்
👉 நாகப்பட்டிணம் மாவட்டம்
(6 மாவட்டங்களுக்கும் ஒரே வினாத்தாள்)
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
ஒன்பதாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
விடைக்
குறிப்புகள்
பகுதி – 1 |
||
வினா.எண் |
விடைக் குறிப்பு |
மதிப்பெண் |
1. |
இ.
சிற்றிலக்கியம் |
1 |
2. |
இ.
மோனை,எதுகை,இயைபு |
1 |
3. |
அ. கீழே |
1 |
4. |
ஆ.வந்துவிட்டான்,வரவில்லை |
1 |
5. |
இ. வளம் |
1 |
6. |
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு
ஏறுதழுவுதல் |
1 |
பகுதி – 2 |
||
7. |
தென்
திராவிட மொழிக்குடும்பம் |
2 |
8. |
இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும்
மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு
கண்ணி என்று பெயர்.வேற்றுமைத்
தொடர்
, விளித்தொடர் |
2 |
9. |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை |
2 |
10 |
நீர் இன்றி அமையாத உடல் உணவால் அமைவது; உணவையே முதன்மையாவும்
உடையது. எனவே உணவு
தந்தவர் உயிரைத் தந்தவர் ஆவர். |
2 |
11 |
மாடு
பிடித்தல்,
மாடு அணைதல், மாடு விடுதல், மஞ்சுவிரட்டு, வேலி மஞ்சுவிரட்டு, எருது கட்டி, காளைவிரட்டு, ஏறு
விடுதல், சல்லிக்கட்டு |
2 |
பகுதி – 3 |
||
12 |
திராவிட மொழிகள்: திராவிட
மொழிக் குடும்பம், நில அடிப்படையில் மூன்று வகைப்படும். தென்
திராவிட மொழிகள், நடு திராவிட மொழிகள், வடதிராவிட மொழிகள் இவற்றுள் எனக்குத் தெரிந்த மொழி தமிழ் ஆகும்.
அவற்றின் சிறப்பியல்புகளைக் காண்போம். தமிழ் மொழி: ü பல உலக நாடுகளில்
பேசப்படும் மொழியாகவும் சில நாடுகளில் ஆட்சி மொழியாகவும் தமிழ் திகழ்கிறது. ü திராவிட மொழிகளுள்
பிறமொழித் தாக்கம் மிகவும் குறைந்ததாகக் காணப்படும் மொழி தமிழ். |
3 |
13 |
தன்வினை : வினையின்
பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும். எ.கா:
பந்து உருண்டது. பிறவினை : வினையின் பயன் எழுவாயை
இல்லாமல் அடையாக வருவது பிறவினை எனப்படும். எ.கா. பந்தை உருட்டினான் காரணவினை : எழுவாய் தானே வினையை
நிகழ்த்தாமல் வினை நிகழ்வதற்குக் காரணமாக இருப்பது எ.கா.
பந்தை உருட்ட வைத்தான். |
2 |
14 |
அதனால் நாமும், நீரை அளவோடு பயன்படுத்தி வரும் தலைமுறைக்கு பாதுகாத்து வைக்க வேண்டும்.
|
2 |
15 |
v மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது. v இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது. v பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது. மரப்பட்டைகளி எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது |
2 |
16 |
ஏறுதழுவுதல், முல்லை நிலத்து
மக்களின் அடையாளத்தோடும், மருதநிலத்து வேளாண் குடிகளின்
தொழில் உற்பத்தியோடும், பாலை நிலத்து மக்களின் தேவைக்கான
போக்குவரத்துத் தொழிலோடும் பிணைந்தது. இதுவே வேளாண் உற்பத்தியின்
பண்பாட்டு அடையாளமாக நீட்சி அடைந்தது. |
2 |
பகுதி – 4 |
||
17 |
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே –
புத்திக்குள் உண்ணப்
படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம்
உண்டு விளம்பக்கேள் –
மண்ணில் குறம்என்றும்
பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு உறவுஎன்று
மூன்றுஇனத்தும் உண்டோ காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம்
குழைக்கரும்பு மாடெல்லாம் கருங்குவளைவயலெல்லாம் நெருங்குவளை கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல்அன்ன நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம் |
3 |
பகுதி – 5 |
||
18 |
ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத
என்னை எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி! முயற்சியைப்
பற்றி எழுதினேன்! அனைவரும்
இதன் அருமை அறிந்து நடக்க வேண்டும்! வாழ்க்கையில்
மேலும் உயர வேண்டும்! |
3 |
19 |
அ.
கரிகாலன் ஆ.1080 அடி இ.கல்லணை |
3 |
20. |
அ. முதுமையில்
இன்பம் ஆ. சொல்லாடாதே இ. இடமெல்லாம் சிறப்பு |
3 |
|
||
21 |
அ.
ஒவ்வொரு மலரும் இயற்கையாக மலரும்போது
சிறப்பினைப் பெறுகிறது. ஆ.
அதிகாலையில் நடைபயிற்சி செய்வது
அன்றைய நாள் முழுவதும் ஆசியைத் தரும் |
3 |
22 |
அ. பேரகராதி ஆ. நீர் மேலாண்மை இ. கூம்புக்கல் (அ) குமிழிக்கல் |
3 |
பகுதி – 6 |
||
23 அ. |
கடலூர், அன்புள்ள
நண்பன் எழிலனுக்கு, என் பிறந்தநாளை கடந்த மாதம்
15.10.21 அன்று கொண்டாடும் போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய்
அல்லவா?சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக இருந்தபோது பரிசுப்பொருளைப்
பிரித்து வியந்து போனேன். எஸ். இராமகிருஷ்ணன்
அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்”
புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட
கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள்
வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள்
குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு
கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக
நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள்
கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறுவர்களுக்கான கதைகள்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு
செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு
கதையும் ஒரு நீதியை எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க
வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா!
நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.
அன்புடன்,
பாலன். முகவரி:
1/3, தெற்குமாட வீதி, கடலூர் -
607001 |
7 |
|
ஆ. வரவேற்பு மடல் இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி,
தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம்
சோறு போடும்" "கந்தையானாலும்
கசக்கிக் கட்டு" "கூழானாலும்
குறித்துக் குடி" என்னும்
பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக
மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும்
குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து
எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த
பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு
வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி
அலுவலர் அவர்களே! நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம். நன்றி. இவண், இரா மணிமாறன், (மாணவர் செயலர்) |
7 |
24.அ |
முன்னுரை : நீர் இன்றி அமையாது என்னும் கருத்தைத் திருவள்ளுவர் தம் குறள்கள்
வாயிலாக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் அவருடைய கருத்துகளைக் காண்போம். வான் சிறப்பு : உணவு உற்பத்திக்கு அடிப்படை நீரே அது மட்டுமின்றி நீரே உணவாகவும்
இருக்கிறது என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
"துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை" என்று திருவள்ளுவர்
விளக்கியுள்ளார் மழையே ஆதாரம் : மழை நீரே மண்ணை வளம் பெறச் செய்கிறது. பயிர்களை விளைவிக்கிறது. எரி,
குளங்கள், வாய்க்கால் வழியாகப் பாசன வசதியை
ஏற்படுத்தி வேளாண்மையை வளமடையச் செய்கிறது. நீரே ஆதாரம் : நீர் இல்லாமல் எத்தகையோர்க்கும் உலக வாழ்க்கை அமையாது. அது போல
மழையில்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாது. வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில்
வீழ்ந்தால் அன்றி, உலகில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும்
காண முடியாது. முடிவுரை: தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த
நாம் எதிர்காலத் தலைமுறையின் நலனுக்காக, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவோம். |
7 |
ஆ. |
1. தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும்
ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப்
பயன்படுத்துவதும் உண்டு.
2. காளையை அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும்
ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும்
உண்டு.
3.அது வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல்
இருக்கிறது.
4. தமிழகத்தில் நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த
ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது.
5.நிகழ்வின் தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு
செய்வர்.
6.எவராலும் அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக்
கருதப்படும்.
7. அன்பையும் வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும்
இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர். |
7 |