10.ஆம் வகுப்பு தமிழ்
பகுபத உறுப்பிலக்கணம்
1.
பொறித்த - பொறி + த் + த் +அ
பொறி – பகுதி
த் - சந்தி
த்- இறந்தகால இடைநிலை
அ- பெயரெச்ச விகுதி
2.
உரைத்த – உரை + த் + த் + அ
உரை - பகுதி
த்- சந்தி
த் - இறந்த காலஇடைநிலை
அ- பெயரெச்ச
விகுதி
3.வருக - வா(வரு) + க
வா - பகுதி
வரு எனத் திரிந்தது விகாரம்
க- வியங்கோள்
வினைமுற்று விகுதி
4.
மலைந்து - மலை + த்(ந்) + த் +உ
மலை – பகுதி த் -
சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை உ-
வினையெச்ச விகுதி
5.
பொழிந்த - பொழி + த் (ந்) + த் + அ
பொழி - பகுதி
த் - சந்தி 'ந்' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை அ
-பெயரெச்ச விகுதி
6.
கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ
கிளர் - பகுதி
த்- சந்தி
த் ’ந்’ ஆனது விகாரம்
த் - இறந்தகால
இடைநிலை அ- பெயரெச்ச விகுதி
7.தணிந்தது - தணி + த்(ந்) + த் + அ+து
தணி - பகுதி, த் - சந்தி
த்(ந்) -ந் ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - சாரியை,
து –படர்க்கை வினைமுற்று
விகுதி
8.
பதிந்து - பதி +த்(ந்) + த் +உ;
பதி - பகுதி
த் - சந்தி (ந் -ஆனது
விகாரம்)
த் - இறந்தகால இடைநிலை
உ-வினையெச்ச விகுதி
9.
மயங்கிய - மயங்கு + இ(ன்) + ய் + அ
மயங்கு - பகுதி
இ(ன்) - இறந்தகால இடைநிலை; 'ன்'
புணர்ந்து கெட்டது.
ய் -உடம்படுமெய்
அ - பெயரெச்ச விகுதி
10.அறியேன் - அறி + ய் + ஆ + ஏன்
அறி - பகுதி
ய் -சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை
புணர்ந்து கெட்டது
ஏன் - தன்மை ஒருமை
வினைமுற்று விகுதி
11.
ஒலித்து - ஒலி +த்+த்+உ
ஒலி - பகுதி;
த் -சந்தி;
த்- இறந்தகால
இடைநிலை;
உ - வினையெச்ச விகுதி