காலாண்டுத் தேர்வு - மாதிரி வினாத்தாள் - 2 2024-2025
10.ஆம் வகுப்பு தமிழ் நேரம்: 3 மணி நேரம் 100 மதிப்பெண்கள்
பகுதி-1 (மதிப்பெண்கள்:15)
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க: 15X1=15
1.
கேட்டவர் மகிழப் பாடிய
பாடல் இது – தொடரில்
இடம் பெற்றுள்ள தொழிற்பெயரும்,
வினையாலணையும் பெயரும்
முறையே __________
அ)
பாடிய;கேட்டவர் ஆ)
பாடல்;பாடிய இ)
கேட்டவர்;பாடிய
ஈ) பாடல்;கேட்டவர்
2.
முறுக்கு மீசை வந்தார். தடித்தச் சொல்லுக்கான
தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை ஆ) உவமைத் தொகை இ) அன்மொழித் தொகை ஈ) உம்மைத் தொகை
3. காசிக்காண்டம்
என்பது
__________
அ) காசி நகரத்தின் வரலாற்றைப்
பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும்
மறுபெயர்
இ) காசி நகரத்தின் பெருமையைப்
பாடும் நூல் ஈ) காசி நகரத்திற்கு
வழிப்படுத்தும் நூல்
4.
பாரத ஸ்டேட் வங்கியின்
உரையாடு மென்பொருள் எது?
அ)
துலா ஆ)
சீலா இ)
குலா ஈ)
இலா
5.
குலசேகர ஆழ்வார்
“ வித்துவக்கோட்டம்மா”
என்று ஆண் தெய்வத்தை
அழைத்துப் பாடுகிறார். பூனையார்
பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.
– ஆகிய தொடர்களில் இடம்
பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ)
மரபு வழுவமைதி,திணை
வழுவமைதி ஆ)இட
வழுவமைதி,மரபு
வழுவமைதி
இ)
பால் வழுவமைதி,திணை
வழுவமைதி ஈ)
கால வழுவமைதி,
இட வழுவமைதி
6.
வட்டத்தொட்டி
– இலக்கணக் குறிப்பு
தருக.
அ)
வினைத் தொகை ஆ)
உம்மைத் தொகை இ)
பண்புத் தொகை ஈ)
உவமைத் தொகை
7.
நாலெழுத்தில் கண்
சிமிட்டும். கடையிரண்டில்
நீந்திச் செல்லும்.___________
அ)
விண்மீன் ஆ)
புதுமை இ) காடு ஈ)
நறுமணம்
8.
நாலாயிரத் திவ்விய
பிரபந்தத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
____________
அ)
105 ஆ) 100 இ)
175 ஈ)
583
9. குளிர்
காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் _______
அ)
முல்லை,குறிஞ்சி,மருத
நிலங்கள் ஆ)
குறிஞ்சி,பாலை,நெய்தல்
நிலங்கள்
இ)
குறிஞ்சி,மருதம்,நெய்தல்
நிலங்கள் ஈ)
மருதம்,நெய்தல்,பாலை
நிலங்கள்
10.
தூக்குமேடை
என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர்
வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?
அ) தூக்கு மேடை நாடகத்தில்
நடித்தவர் யார்? ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர்
எப்போது வழங்கப்பட்டது?
இ)
தூக்கு மேடை என்பது
திரைப்படமா? நாடகமா? ஈ) யாருக்குப்
பாராட்டு விழா நடத்தப்பட்டது
11.
”இங்கு நகரப் பேருந்து
நிற்குமா?”
என்று வழிப்போக்கர்
கேட்டது_____வினா. “ அதோ,அங்கே
நிற்கும்” என்று
மற்றொருவர் கூறியது
___________ விடை.
அ)
ஐய வினா,வினா
எதிர் வினாதல் ஆ)
அறிவினா,மறை
விடை
இ)
அறியா வினா,சுட்டு
விடை ஈ)
கொளல் வினா,
இனமொழி விடை
பாடலைப்
படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“ விசும்பில்
ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கரு
வளர் வானத்து
இசையில் தோன்றி
உரு
அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து
வளி கிளர்ந்த
ஊழி ஊழ் ஊழியும் “
12.
ஊழ் ஊழ்
– இலக்கணக் குறிப்பு
அ.
இரட்டைக் கிளவி ஆ.
பண்புத் தொகை இ.
அடுக்குத் தொடர் ஈ.
வினைத் தொகை
13.
பாடலின் ஆசிரியர்
அ.
கீரந்தையார் ஆ.
பூதஞ்சேந்தனார் இ.
நப்பூதனார் ஈ.
குலசேகராழ்வார்
14.
பாடலில் உணர்த்தப்படும்
கருத்து
அ.
தத்துவக் கருத்து ஆ.
அறிவியல் செய்தி இ.
நிலையாமை ஈ.
அரசியல் அறம்
15.
விசும்பு
, இசை
, ஊழி
– பாடலில் இச்சொற்கள்
உணர்த்தும் பொருள்கள் முறையே
அ.
காற்று,
ஓசை,
கடல் ஆ.
மேகம்,
இடி,
ஆழம் இ.
வானம்,
பேரொலி,யுகம் ஈ.
வானம்,காற்று,காலம்
பகுதி-2 (மதிப்பெண்கள்:18) பிரிவு-1
எவையேனும் நான்கு
வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளி: (21 கட்டாயவினா) 4X2=8
16. விடைக்கேற்ற
வினா அமைக்க.
அ.
ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை
வேறொரு மொழியில் வெளியிடுவது மொழி பெயர்ப்பு
ஆ.
மருந்தே ஆயினும் விருந்தொடு
உண் என்று கூறியவர் ஒளவையார்.
17.
வசனகவிதை
– குறிப்பு வரைக
18. மாஅல்
– பொருளும் இலக்கணக்
குறிப்பும் தருக.
19 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு
அடுக்கிய
கோடிஉண் டாயினும்
இல்
– இக்குறளில்
வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.
20. . வருங்காலத்தில்
தேவையெனக் கருதுகின்ற செயற்கை நுண்ணறிவு பொதிந்த இரண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்
குறிப்பிடுக.
21. பொருள்
– என முடியும் குறளை
எழுதுக.
பிரிவு-2
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: 5X2=10
22. “எழுது
என்றாள் “ என்பது
விரைவு காரணமாக “ எழுது
எழுது என்றாள் “ என
அடுக்குத் தொடரானது.”சிரித்துப்
பேசினார்” என்பது
எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
23. இந்த
அறை இருட்டாக இருக்கிறது. மின்விளக்கின்
சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?
இதோ...இருக்கிறதே!
சொடுக்கியைப் போட்டாலும்
வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா?இல்லையா?
- மேற்கண்ட
உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.
24.
பகுபத உறுப்பிலக்கணம் தருக : அமர்ந்தான்
25. தஞ்சம்
எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய
அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
26. கீழ்க்காணும்
சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.
கல்,
புல்,
ஆடு,
பழம்
27 பழமொழியை
நிறைவு செய்க:-
1.
உப்பில்லாப்_____________ 2. ஒரு
பானை_______________
28. தொடர்களில்
உள்ள எழுவாயைச் செழுமை செய்க.
அ.
மரத்தை வளர்ப்பது
நன்மை பயக்கும். ஆ. கல்வியே
ஒருவருக்கு உயர்வு தரும்.
பகுதி-3 (மதிப்பெண்:18) பிரிவு-1
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க: 2X3=6
29. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக்
காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
30.
ஜெர்மனியில் ஓர் ஆண்டில்
பிற மொழிகளிலிருந்து
5000 நூல்கள்
வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி
அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம்
ஆங்கிலம்,
இரண்டாமிடம்
மலையாளம்.
மொழிபெயர்ப்பினால்
புதிய சொற்களை உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.
அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில்
எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?
ஆ. தமிழ் நூல்கள் எந்த
மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?
இ. மொழிபெயர்ப்பின் பயன்
என்ன?
31. தமிழ்
மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்து கொண்ட இரண்டினை எழுதுக
பிரிவு-2 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய
வினா)
32. தமிழழகனார் தமிழையும்
கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.
33. கூத்தனைக்
கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?.
34. அ)
“ வாளால் அறுத்து
“ எனத் தொடங்கும் பெருமாள்
திருமொழி அடிமாறாமல் எழுதுக
(அல்லது
)
ஆ)
“வெய்யோன்”
எனத் தொடங்கும் கம்பராமாயணம்
பாடலை எழுதுக.
பிரிவு-3 2X3=6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:
35.
நேற்றிரவு பெய்த மழை
எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன்
நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்” என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச்
சென்றேன்.துள்ளிய குட்டியைத்
தடவிக்கொடுத்து,”என்னடா விளையாட வேண்டுமா?” என்று கேட்டு அவனை
அவிழ்த்துவிட்டேன்.என் தங்கை அங்கே வந்தாள்.அவளிடம்,” நீயும் இவனும் விளையாடுங்கள்” என்று கூறினேன்.அவிழ்த்துவிடப்பட்ட
இலச்சுமி தொட்டியிலிருந்த நீரைக் குடித்தாள்.
இப்பத்தியிலுள்ள
வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
36.
முயற்சி திருவினை
ஆக்கும் முயற்றின்மை
இன்மை
புகுத்தி விடும். – இக்குறட்பாவில்
அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
37. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்
கோலோடு நின்றான் இரவு
இக்குறளில்
பயின்று வரும் அணியை விளக்குக.
பகுதி-4(மதிப்பெண்:25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க: 5X5=25
38. அ)
மன்னன் இடைக்காடனார்
என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்?
விளக்கம் தருக.
(
அல்லது
)
ஆ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
39. மாநில அளவில் நடைபெற்ற “ மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான
கட்டுரைப் போட்டியில் வெற்று பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(
அல்லது
)
ஆ.
பள்ளி ஆண்டுவிழா மலருக்காக
நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை
நூலுக்கான மதிப்புரை எழுதுக
குறிப்பு
– நூலின்
தலைப்பு – நூலின்
மையப்பொருள் – மொழிநடை-
வெளிப்படுத்தும் கருத்து
- நூலின் நயம்
– நூல் கட்டமைப்பு
- சிறப்புக்கூறு
– நூல் ஆசிரியர்.
40.
படம் உணர்த்தும் கருத்தை
கவினுற எழுதுக.
41.
அமுதன் தன் தந்தை
மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான்.
அவரும் அமுதனிடம்
200/- ரூபாயும்,
15. காந்தி தெரு,
குமாரபாளையம்,நீலகிரி
மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார்.
கிளை நூலகத்திற்கு
சென்ற அமுதனாக, தேர்வர்
தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட
நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ)
பள்ளியிலும் வீட்டிலும்
நீங்கள் நடந்துக் கொள்ளும் விதம் பற்றி எழுதுக.
(
அல்லது
)
ஆ)
மொழிபெயர்க்க:-
Kalaignar karunanidhi is known for his contributions to Tamil literature. His
contributions cover a wide range; poems, letters, screenplays, novels,
biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has
written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as
many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also
contributed to the Tamil language through art and architecture. Like the
Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the
construction of Valluvar Kottam he gave an architectural presence to
Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a
133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.
பகுதி-5 (மதிப்பெண்:24)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:
3X8=24
43. அ)
தமிழின்
இலக்கிய வளம் – கல்வி
மொழி – பிறமொழிகளில்
உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல்
கருத்துகள் – பிறதுறைக்
கருத்துகள் – தமிழுக்குச்
செழுமை –
மேற்கண்ட
குறிப்புகளைக் கொண்டு ‘ செம்மொழித்
தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை
‘ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக்
கட்டுரை எழுதுக.
(
அல்லது
)
ஆ)
உங்கள்
இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.
44. அ “ அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்குடன் விண்வெளிப் பயணம் “ என்னும் தலைப்பில் கற்பனைக் கதை ஒன்று எழுதுக.
( அல்லது )
ஆ ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
குறிப்பு : வெளிநாட்டிலிருந்து
உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே
தெரியும்.
ஆங்கில
இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்
45. அ)
“ சான்றோர் வளர்த்த தமிழ்
“ என்னும்
தலைப்பில் கட்டுரை எழுதுக
(
அல்லது
)
ஆ)
உங்கள்
பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.
வினாத்தாள் ஆக்கம் : திரு வெ,இராமகிருஷ்ணன்(தமிழ்விதை வலைதளம்) , தமிழாசிரியர் , சேலம் மாவட்டம்