10 TH STD TAMIL QUARTERLY MODEL QUESTION PAPER -3 2024-2025


காலாண்டுத் தேர்வு மாதிரி வினாத்தாள் – 3 ,  2024

 மொழிப்பாடம்தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                           பத்தாம் வகுப்பு                                           மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

) சரியான விடையைத் தேர்வு செய்க                                                                                                                                                                       15×1=15

1. பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும் ‘என்னும் தொடர் எதனைக்குறிக்கிறது?

)வானத்தையும்,பாட்டையும்            )வானத்தையும்,புகழையும்                              

) வானத்தையும்,பூமியையும்             )வானத்தையும்,பேரொலியையும்

2. ஓரெழுத்தில் சோலை- இரண்டெழுத்தில் வனம் ___________

) காற்று    ) புதுமை       ) காடு    ) நறுமணம்

3. கூற்று 1 : போராட்டப் பண்புடனே வளர்ந்தவர் கலைஞர்.

   கூற்று 2 : அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது

) கூற்று 1 சரி 2 தவறு  ) கூற்று 1 மற்றும் 2 தவறு   ) கூற்று 1 தவறு 2 சரி            ) கூற்று 1 மற்றும் 2 சரி

4அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்பாடல் வரி இடம் பெறும் நூல் எது?

) புறநானூறு       ) நற்றிணை      ) குறுந்தொகை   ) அகநானூறு

5. மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.   ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

6. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________

) எந் + தமிழ் + நா                    ) எந்த + தமிழ் + நா       ) எம் + தமிழ் + நா    ) எந்தம் + தமிழ் + நா

7. உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

   உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

) உருவகம்,எதுகை          ) மோனை,எதுகை              ) முரண்,இயைபு    ) உவமை,எதுகை

8. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக் கொண்டவர்____________

) தமிழழகனார்     அப்பாத்துரையார்    ) தேவநேயப் பாவாணர்    ) இரா. இளங்குமரனார்

9. பின் வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு                

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்கு தனித்த இடமுண்டு

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

10. ‘ குழந்தை வந்தது’ – என்ற எழுவாய்த் தொடரின் விளித் தொடரைத் தேர்க

) குழந்தையுடன் வா            ) வந்த குழந்தை              ) குழந்தையே வா   !) குழந்தை வந்தது

11. ‘ மலர்க்கை ‘ – தொகையின் வகையைத் தேர்க

பண்புத் தொகை               ) உவமைத் தொகை   ) அன்மொழித் தொகை  ) உம்மைத் தொகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

 கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும்  ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்படு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,”

12. பாடல் இடம் பெற்ற நூல்

. காசிக்காண்டம்                 . முல்லைப்பாட்டு    . மலைபடுகடாம்    . சிலப்பதிகாரம்

13. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

. அவண்,அலங்கு  . அன்று,கன்று   இ. சேந்த,சிலம்பு   . அல்கி,போகி

14. ‘ அசைஇஇச்சொல்லின் இலக்கணக் குறிப்பு

. வினைத்தொகை            . பண்புத்தொகை            . சொல்லிசை அளபெடை               . செய்யுளிசை அளபெடை

15. ‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில்பாக்கம்என்னும் சொல்லின் பொருள்

. சிற்றூர்   . பேரூர்           . கடற்கரை          . மூதூர்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                                                                                4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

. விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரமே திருக்குறளில் அமைந்திருக்கிறது.

. சதாவதானம் என்னும் கலையில் சிறந்து விளங்கியவர் செய்குதம்பிப் பாவலர்

17.இறடி பொம்மல் பெறுகுவீர்இத்தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக.

18. குறிப்பு வரைக – “ சதாவதானம்

19 செய்கு தம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

20. . மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே!

    முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” - இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களை எழுதுக

21.  தரும்என முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                                                                            5×2=10

22. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன்இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?

23. பகுபத உறுப்பிலக்கணம் தருக : பொறித்த

24. கீழ்வரும் தொடர்களில் பொருந்தாத கருபொருளைத் திருத்தி எழுதுக.

உழவர்கள் மலையில் உழுதனர்

முல்லைப் பூச் செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்

25. . “ கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

26. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

) கலையரங்கத்தில் எனக்காகக் காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.

)  ஊட்டமிகு உணவு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

27 சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-

) இன்சொல்                                              ) எழுகதிர்

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பழமொழியை நிறைவு செய்க:-

) உப்பில்லாப்_____________  )  ஒரு பானை_______________

28. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-

) இயற்கைசெயற்கை        ) கொடு - கோடு

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                                                                                    2×3=6

29. “ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது

- இது போல் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30. பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல்விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும்மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

). புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

). பத்தியில் உள்ள அடுக்குத் தொடர்களை எடுத்து எழுதுக

). பெய்தமழைவினைத்தொகையாக மாற்றுக.

31. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக..

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                                                                                                2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. நெடுநாளாக பார்க்க எண்ணியிருந்த உறவினர் ஒருவர் எதிர்பாராத வகையில் உங்கள் வீட்டிற்கு வந்தால் அவரை விருந்தோம்பல் செய்வதைக் குறித்து எழுதுக.

33. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.

34. ) “ அருளைப்  எனத் தொடங்கும் நீதிவெண்பா அடிமாறாமல்  எழுதுக

(அல்லது )

      ) “அன்னை மொழியேஎனத் தொடங்கும்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                           2×3=6

35. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள். - இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

36. தீவக அணியை விளக்கி,அதன் வகைகளை எழுதுக.

37. வினாவின் வகைகளை எழுதி, சான்று தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                                                          5×5=25

38. ) ) வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.   ( அல்லது )

) முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.

39. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.      ( அல்லது )

. ’ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்’ – குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதற்குத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெறக் கடிதம் ஒன்று எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


41. குமார் தன் தந்தை செழியன் அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான்.அவரும் குமாரிடம் 500 ரூபாயும், 12, எழில் நகர், பாரதி தெரு, நாமக்கல் மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்குச் சென்ற குமாராக தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42. ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக.  ( அல்லது )

) மொழிபெயர்க்க:-

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                                                 3×8=24

43. ) ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும் மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? இக்கருத்துகளை ஒட்டிச் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வெளிபாடுகள் பற்றி ஒரு கட்டுரை எழுதுக.    ( அல்லது )

) போராட்டக் கலைஞர்பேச்சுக் கலைஞர்நாடகக் கலைஞர்திரைக் கலைஞர்இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

44. புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?    ( அல்லது )

கற்கை நன்றே கற்கை நன்றே

                பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ - என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்.

45. ) “ விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக

 ( அல்லது )

) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.

வினாத்தாள் ஆக்கம் : திரு வெ,இராமகிருஷ்ணன்(தமிழ்விதை வலைதளம்) , தமிழாசிரியர் , சேலம் மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை