10.ஆம் வகுப்பு தமிழ்
காலாண்டுத்தேர்வு வினாத்தாள்
👉சென்னை மாவட்டம்
காலாண்டுப்பொதுத் தேர்வு-2024 சென்னை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
ஆ. மணி வகை |
1 |
2.
|
இ. கல்வி |
1 |
3.
|
ஆ. இருபெயரொட்டுப்
பண்புத்தொகை |
1 |
4.
|
அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது |
1 |
5.
|
ஈ. பாடல், கேட்டவர் |
1 |
6.
|
ஈ. அரியவற்றுள்
, அரிதே |
1 |
7.
|
ஆ. விண்மீன் |
1 |
8.
|
இ. குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்
|
1 |
9.
|
ஈ. இலா |
1 |
10.
|
ஈ. உறவினர் |
1 |
11.
|
அ. எழுது எழுது என்றான் |
1 |
12. |
இ. அவித்துவிடாதே
, மடித்து விடாதே |
1 |
13. |
அ. உனக்கு,
உன்னை |
1 |
14. |
இ. சீராக |
1 |
15. |
இ. பாரதியார் |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
தினைச்சோற்றைப்
பெறுவீர்கள் |
2 |
17 |
பொருந்திய
வினாத்தொடரைச் சரியாக இருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
18 |
ü ஐம்பூதங்களும்,ஒன்றனுள்
ஒன்று ஒடுங்கின. ü நீண்ட காலத்திற்குப்
பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின. |
2 |
19 |
விரும்பத்தக்க
இரக்க இயல்பைக் கொண்டவர்கள் |
2 |
20 |
வாருங்கள்,நலமா? ,நீர்
அருந்துங்கள் |
2 |
21 |
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
22 |
கிளர்ந்த - கிளர் + த் (ந்) + த் + அ கிளர் - பகுதி த்- சந்தி த் ’ந்’
ஆனது விகாரம் த்
- இறந்தகால இடைநிலை அ- பெயரெச்ச விகுதி |
2 |
23 |
அ. புற ஊதாக்கதிர்கள்
ஆ. விண்வெளி தொழில்நுட்பம் அ. மீண்ட துயர் ஆ. புயலுக்கு முன் |
2 |
24 |
அ.
குப்பையிலே ஆ. மருந்தும் மூன்று நாளுக்கு |
2 |
25 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது (
பொதுமொழி) |
2 |
26 |
ü தேன் குடி ü நூல் படி ü பை எடு ü மலர் கொய் ü வா போகலாம் |
2 |
27 |
கலைஞரைப்
பேராசிரியர் அன்பழகனார், பழுமரக்கனிப்
பயன்கொள்ளும் பேச்சாளர் என்றும் படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர் என்றும் பாராட்டியுள்ளார் |
2 |
28 |
ஆற்றுநீர்ப்
பொருள்கோள் – தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின்
நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது. |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
29 |
1.
உயிராய் நான் ; மழையாய் நான் 2.
நானின்றி பூமியே சுழலாது 3.
பூமித்தாயின் குருதி நான். |
3 |
30 |
அ. கடவுச்சொல்,
கைரேகை கொண்டு திறப்பது ஆ. அதற்கேற்பத்
தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது இ. செயற்கை
நுண்ணறிவு |
3 |
31 |
ü கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும். ü கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு ü கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும். ü கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும். |
3 |
பிரிவு-2 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
|
3 |
|||||||||||||||
33 |
ü தொழில்
செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற
காலம்,
செயலின்
தன்மை,
செய்யும்
முறைஆகியவற்றைஅறிந்து அரிய செயலைச் செய்பவரே அமைச்சர் ஆவார். ü மனவலிமை, குடிகளைக்காத்தல், ஆட்சி முறைகளைக்கற்றல் ,
நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும்
சிறப்பாக அமைந்தவரே அமைச்சராவார். |
3 |
|||||||||||||||
34 |
|
3 |
பிரிவு-3 2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||||||||||||||||||
35 |
|
3 |
||||||||||||||||||||||||
36 |
ü சங்ககாலத் தமிழர் திணையின் அடிப்படையில் நிலத்தைப்பிரித்தனர் ü ஐவகை நிலங்களுக்கேற்ப தனித்தனியே தொழில்களை மேற்கொண்டு
வாழ்ந்தனர். ü இன்றைய சூழலில் திணைநிலைத் தொழில்கள் நவீனமாக்கப்பட்டுள்ளதே
தவிர மாறவில்லை. |
3 |
||||||||||||||||||||||||
37 |
அணி இலக்கணம்: தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று
பொருள் தருவது தீவக அணி சான்று:
“சேந்தன வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர் -------------------------------------” பொருள்:
அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள்,
திசைகள், அம்புகள், பறவைகள்
ஆகியவை சிவந்தன அணிப்பொருத்தம்: ”
சேந்தன” என்ற சொல் செய்யுளின் பல
இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது. |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 அ. |
மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல்: ü கடல்
ஆடை அணிந்த நிலத்துக்கு நமது நாடு முகம் போன்றது. ü அதற்குத்
தென்னாடு நெற்றியாகவும்,தமிழகம்
திலகமாகவும் உள்ளது. ü திலகத்தின்
மணம்போல் தமிழின் புகழ் பரவுகிறது. ü அத்தகைய
தமிழை வாழ்த்துவோம். பெருஞ்சித்திரனாரின் வாழ்த்துப்பாடல்: ü அழகான
அன்னை மொழி ü பழமையான
நறுங்கனி ü பாண்டியன்
மகள் ü சிறந்த
நூல்களை உடைய மொழி ü பழம்பெருமையும்
தனிச்சிறப்பும் உடைய மொழியை வாழ்த்துவோம். (அல்லது) ஆ) ü குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான். ü இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார் ü இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார். ü குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார். ü இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான் ü தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு
செய்தான் |
5 |
39 ஆ. |
அ. பொருந்திய
விடையைச் சரியாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் நீ
முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.அதற்காக எனது
மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
40 |
காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
தரப்பட்ட சரியான விவரங்களோடு நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
42 அ |
அ. பொருந்திய
விடையைச் சரியாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக ஆ) சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில்
மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன.
விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத
ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும்
விடையளிக்க: |
||
43 |
அ) #
செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும். # மருத்துவத் துறையில் மாபெரும்
புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும். # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம்
காண அறிவியல் உதவும். # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்
எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும். # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும்
செய்ய இயலும். # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம்
போன்ற இடங்களில் இயந்திர மனிதன் தனது சேவையை
அளிக்கும். (அல்லது) ஆ. முன்னுரை: பன்முகக் கலைஞர் மு. கருணாநிதி அவர்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். போராட்டக் கலைஞர்: தனது
14.ஆம் வயதில் இந்திஎதிர்ப்புக்காக மாணவர்களை ஒன்று திரட்டி,
போராட்டம் நடத்தினார். பேச்சுக் கலைஞர்: பல தமிழறிஞர்களின் பேச்சைக்
கேட்டு, தனது பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார். சிறுவர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்க சிறுவர் சீர்திருத்தச் சங்கத்தை உருவாக்கினார். நாடகக் கலைஞர்: கலைஞர் சீர்திருத்த நாடகங்களை
இயற்றினார். தூக்குமேடை எனும் புகழ்பெற்ற நாடகத்தை இயற்றினார்.
இந்நாடகத்தின் பாராட்டு விழாவில் “ கலைஞர்
” என்ற பட்டம் வழ்ங்கப்பட்டது. திரைக்கலைஞர்: எம்.ஜி.ஆரின் இராஜகுமாரி படத்துக்காக வசனம் எழுதியுள்ளார். புரட்சிகரமான வசனங்களை எழுதி புகழ்பெற்று விளங்கினார். இயற்றமிழ்க்
கலைஞர்: கலைஞர் பல சிறுகதைகள், புதினங்கள்
மூலம் தன்னுடைய இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார். முடிவுரை: தமிழின் மெருமிதங்களையும், விழுமியங்களையும் மீட்டெடுத்தவர்
கலைஞர் கருணாநிதி. |
8 |
44 |
ü அ.
அறிவும்
பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும்
மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும். ü கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை
ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும். ü வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக
அறிய முடிகிறது. ü மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும்
படிக்கவும் தெரிந்தவர் என்ற பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற
இயலாது. ü கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம்
என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக்
கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம். (அல்லது) ஆ) முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர்
,தனது அனுபவங்களைக் கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி எனும் குறும்புதினமாகும். புயல்:
கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக
மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல் அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ
ஒரு வழியாக கடற்கரை தென்பட்டது. கப்பல் அங்கிருந்த பினாங்கு
துறைமுகத்தை நெருங்கியது. அங்கிருந்தவர்கள் ”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள்
சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர்.
அங்கிருந்த அலுவலர் அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில், தோணி
படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. |
8 |
45 |
அ) முன்னுரை: இந்தியாவில்
பிறந்து அமெரிக்க விண்வெளி ஓடத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்து தனது இன்னுயிரை
நீத்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் விண்வெளிப் பயணம்பற்றி
இக்கட்டுரையில் காண்போம். விண்வெளியும் கல்பனா சாவ்லாவும்: விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா
சாவ்லா ஆவார். விண்வெளி ஆராய்ச்சியில் நல்ல திறமை உடைய
பெண் ஆராய்ச்சியாளர் இவர். உலகமே போற்றும் வகையில்
விண்வெளியில் மிகச் சிறந்த சாதனைகளைச் செய்துள்ளார் கல்பனா சாவ்லா. நமது கடமை: விண்ணியல் ஆய்வில் நாம் கண்டறிந்த உண்மைகளை உலகறியச் செய்ய வேண்டும்.விண்ணியல் தொடர்பாக நாம் ஈட்டும் அறிவை வெளிநாட்டிற்குப் பயன்படுமாறு
செய்யக்கூடாது. முடிவுரை: “வானை
அளப்போம், கடல் மீனை அளப்போம்” என்ற பாரதியின் கனவை நாம் முழுமையாக்க வேண்டும். இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரங்கள் பலவற்றைப்
படைக்க வேண்டும். (அல்லது) ஆ) நூலின் தலைப்பு: பரமார்த்தகுரு
கதை நூலின்
மையப் பொருள்: சீடர்கள்
குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்
என்பது நூலின் மையப் பொருள். மொழிநடை: நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும்
வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. வெளிப்படுத்தும்
கருத்து: பகுத்தறிவுடன்
செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது. நூலின்
நயம்: விழிப்புணர்வுடனும்
நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது. நூல்
கட்டமைப்பு: சிறுவர்கள்
ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது. சிறப்புக்கூறு: ஒவ்வொரு கதையும்
பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது. நூல்
ஆசிரியர்: வீரமாமுனிவர். |
8 |