9 TH STD TAMIL MODEL NOTES OF LESSON OCTOBER 2 ND WEEK

 9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு  

நாள்        :    14-10-2024 முதல் 18-10-2024 வரை         

மாதம்          அக்டோபர் 

வாரம்     :   இரண்டாம் வாரம்                                               

வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.சிறுபஞ்சமூலம், 

                                             2. வீட்டுக்கு ஒரு புத்தகசாலை, 

1.கற்றல் நோக்கங்கள்   :

     # பஞ்ச மூலங்கள் குறித்து அறிதல்.

      #நூல் வாசிப்புப் பழக்கம் பற்றி உணர்தல்.
 2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

கற்பித்தல் துணைக்கருவிகளைப் பதிவிறக்க

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

      # நீதி நூல்கள் சில கூறுக.

      # ஊர்ப்புற நூலகத்திற்குச் சென்றது உண்டா?
      # ஞாலம்,மாஞாலம்- வேறுபடுத்துக.
               ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்

4.பாடச் சுருக்கம்  :             

   # நன்றறிவார் - மூவாது மூத்தவர் .தாமே உணர்வர் - மேதையர்.


   #மனவளம் பெற நூல்கள் படிக்கவும்.

   # வீட்டிற்கு ஒரு நூலகம் வேண்டும். அதில் நல்ல நூல்கள் இருக்க வேண்டும்.

5.ஆசிரியர் செயல்பாடு              :

     #சிறுபஞ்சமூலம்- பெயர்க் காரணம் கூறுதல்.

      #பாடலைப் பொருள் விளங்க படித்துக் காட்டுதல்.
      #வீட்டுக்கு ஒரு புத்தக சாலை அமைக்க வேண்டியதன் அவசியத்தை கூறுதல்.
      #அண்ணாவின் பொன்மொழிகளைப் பட்டியலிடல்.

6.கருத்துரு வரைபடம்:

சிறுபஞ்சமூலம்

வீட்டிற்கோர் புத்தகசாலை

7.மாணவர் செயல்பாடு:

    @சொல் பொருள் அறிதல்.

      @கல்வியின் அவசியத்தைப் புரிந்து கொள்ளுதல்.
      @நூலகத்தின் தேவை பற்றி தெரிந்து கொள்ளுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1. சிறு பஞ்சமூலம்_________நூல்களுள் ஒன்று.
2. "வாசிக்காத புத்தகத்தை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்" எனக்கூறியவர் ________ 

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

3.சிறுபஞ்சமூலம்- பெயர் காரணம் தருக.

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

5. நூலகம் ஏன் வேண்டும்? 
6.நூலகத்தில் எத்துணை நூல்கள் உள்ளன? பிழை அறிந்து சரிசெய்க.

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

      # 9023- அற இலக்கியத்தின் எளிய செம்மையான மொழிநடையும் கருத்து செறிவையும் படித்து வாழ்வியல் பண்பை மேம்படுத்துதல்.

     # 9024-  நூலகத்தின் பயனறிந்து பயன்படுத்துதல் பிறரையும் படிக்க வழிகாட்டுதல் படித்தவற்றை எடுத்துரைத்தல்
  

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை