அரையாண்டுத்தேர்வு 2024 அரியலூர் மாவட்டம் வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள்

 அரையாண்டுத்தேர்வு 2024  

அரியலூர் மாவட்டம்  

வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகள் 

வினாத்தாள்👇👇

       10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்                                                                

                                                            பகுதி-1                                                     15X1=15

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

  1.  

. சருகும் சண்டும்

1

  1.  

. கடல்நீர் ஆவியாகி மேகமாதல்

1

  1.  

. இறைவனிடம் குலசேகராழ்வார்       

1

  1.  

அ. வேற்றுமை உருபு

1

  1.  

. சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது

1

  1.  

ஈ. அங்கு வறுமை இல்லாததால்

1

  1.  

இ. குறிஞ்சி, மருதம்,நெய்தல் நிலங்கள்

1

  1.  

அ. அகவற்பா

1

  1.  

அ. கருணையன் , எலிசபெத்துக்காக

1

  1.  

. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்     

1

  1.  

. பெயரெச்சம்

1

  1.  

ஈ. முல்லைப்பாட்டு

1

  1.  

அ. நப்பூதனார்

1

  1.  

ஆ. வினைத்தொகை

1

  1.  

. தோள்

1

                                                                பகுதி-2       பிரிவு-1                                                                  4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

16

காலையிலேயே மாலையும் வந்து விட்டது.( மாலை பொழுதையும், பூவையும் குறித்தது)

2

17

உரிய வினாத்தொடரைச் சரியாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

2

18

யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு செய்யுளும், உரைநடையும் கலந்து எழுதப்பெறுவது

2

19

அருளைப்பெருக்க கல்வி கற்போம்,அறிவைத்திருத்த கல்வி கற்போம்

2

20

    இளம்பயிர் வளர்ந்து நெல்மணிகளைக் காணும் முன்பே மழையின்றி வாடிக் காய்வது போல கருணையன் தாயை இழந்து வாடினான்.

2

21

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்  

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

2

                                                                                    பிரிவு-2                                                                 5X2=10

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

22

சிரித்துச் சிரித்துப் பேசினார்

2

23

அ. சிலைக்கு சீலை கட்டினர்    ஆ. மாலையில் மலைக்குச் சென்றான்

2

24

மயங்கிய - மயங்கு + இ(ன்) + ய் + அ

மயங்கு – பகுதி   இ(ன்) - இறந்தகால இடைநிலை; 'ன்' புணர்ந்து கெட்டது.

ய் –உடம்படுமெய்   அ - பெயரெச்ச விகுதி

2

25

. மனிதநேயம்    . தொன்மம்

2

26

அ. கோபத்தை ஆறப்போட வேண்டும் 

ஆ.அழகன் படிக்காமல் தேர்ச்சி அடையலாம் என மனக்கோட்டை கட்டினான்

2

27

அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம்   ஆ. மருந்தும் மூன்று நாளுக்கு

2

28

வெண்பாவின் பொது இலக்கணம் பெற்று இரண்டு அடிகளில் வருவது குறள் வெண்பா

   (-கா) வேலொடு நின்றான் இடுவென்றது போலும்

               கோலொடு நின்றான் இரவு.

2

பகுதி-3  (மதிப்பெண்கள்:18)

                                                                பிரிவு-1                                                         2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

29

     # மறைகாணி எல்லாப் பக்கமும் திரும்பி காட்சிகளைப் பதிவு செய்கிறது.

     # செயற்கைக் கோள் ஏவுதலில் அறிவியல் புதுமைகள் சிறப்பாகச் செயல்படுகின்றன.

     # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.     

3

30

. சீனா   . (பத்தியில் விடைக்குரிய வரி தரப்படவில்லை)  சரியான விடை:  குப்லாய்கான்   . வணிகம்

3

31

நாற்று ,கன்று, குருத்து, பிள்ளைகுட்டி, மடலி, பைங்கூழ்

3

                                                                                 பிரிவு-2                                                                    2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

32

v  உறவினரை முகமலர்ச்சியுடன் நோக்கினேன்.

v   வீட்டிற்குள் வருக! வருக! என்று வரவேற்றேன்.

v  உணவருந்திச் செல்லுங்கள் எனக் கூறினேன்  

v  தலைவாழை இலையில் உணவிட்டேன்.

v  அவர் செல்லும் போது வாயில் வரை சென்று வழியனுப்பினேன்.

3

33

ü  உயிர்பிழைக்கும் வழி அறியேன்

ü  உறுப்புகள் அறிவிற்குப் பொருந்தியவாறு இயங்கும் முறை அறியேன்.

ü  உணவினத் தேடும் வழி அறியேன்

ü  காட்டில் செல்லும் வழி அறியேன் என்று கூறுகிறார்.

3

34

அ.

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

.

தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக்

கொண்டல்கண் முழவி னேங்கக் குவளை கண் விழித்து நோக்கத்

தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்

வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ.

 

3

                                                                                         பிரிவு-3                                                             2X3=6

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

35

அணி இலக்கணம்:

  தீவகம்- விளக்கு. விளக்கு போல செய்யுளின் ஓரிடத்தில் உள்ள சொல் பல இடங்களுக்கும் சென்று பொருள் தருவது தீவக அணி

சான்று:

   சேந்தன வேந்தன் திருநெடுங்கண் ,தெவ்வேந்தர்

     -------------------------------------”

பொருள்:

   அரசனுடைய கண்கள் , பகைவரின் தோள்கள், திசைகள், அம்புகள், பறவைகள் ஆகியவை சிவந்தன

அணிப்பொருத்தம்:

  சேந்தனஎன்ற சொல் செய்யுளின் பல இடங்களுக்கும் சென்று பொருள் தந்தது.

3

36

1.     'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு -விளித்தொடர்

2.    மாமழை பெய்கையிலே- உரிச்சொல் தொடர்

3.    பாடினேன் தாலாட்டுவினைமுற்றுத்தொடர்

4.    ஆடி ஆடி ஓய்ந்துறங்குஅடுக்குத்தொடர்

3

37

சீர்

அசை

வாய்பாடு

குற்றம்

நேர்+நேர்

தேமா

இலனாய்க்

நிரை+நேர்

புளிமா

குடிசெய்து

நிரை+நேர்+நேர்

புளிமாங்காய்

வாழ்வாரைச்

நேர்+நேர்+நேர்

தேமாங்காய்

சுற்றமாச்

நேர்+நிரை

தேமா

சுற்றும்

நேர்+நேர்

தேமா

உலகு

நிரைபு

பிறப்பு

3

 பகுதி-4                                                                   5X5=25

அனைத்து வினாக்களுக்கும் விடையளி

38 .

ü  நன்னன் என்ற மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான்

ü  ஒன்றாகப்பயணம் செய்து நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக.

ü  அந்நாட்டு மக்களிடம் நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள்.

ü  அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும் கொடுத்து உபசரிப்பார்கள்  என்று கூத்தராற்றுப்படை கூறுகிறது.

)

* பொற்காலமாக இருந்தாலும் சித்தாள் தலையில் எழுதப்பட்டதோ கற்காலம்.

* தன் வாழ்வை தொலைத்துவிடாமல் காத்துக்கொள்வதற்காக தலையில் கை வைப்பவள்.

* வாழ்வில் தலைக்கனம் (இறுமாப்பு) கொண்டவர் உண்டு. ஆனால், கல் சுமந்து தலைக்கனமானது இவளுக்கு.

* அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் சுமக்கும் கற்களெல்லாம் இவளின் அடுத்தவேளை உணவுக்குதான். இவள் இறந்தால்கூட சலனம் சிறிதளவுதான்.

. இந்தச் சித்தாளின் மனச்சுமையை அவள் சுமக்கும் செங்கற்கள் அறியாது.

5

39

 

)

ü  அனுப்புநர் முகவரி ,நாள்

ü  விளித்தல்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  உறைமேல் முகவரி         என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

)

ü  அனுப்புநர்

ü  பெறுநர்

ü  ஐயா,பொருள்

ü  கடிதத்தின் உடல்

ü  இப்படிக்கு

ü  இடம்,நாள்

ü  உறைமேல் முகவரி            என்ற அமைப்பில் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

5

40

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

41

படிவங்களைச் சரியான விவரங்களுடன் நிரப்பியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

5

42 .

( மாதிரி விடை)

1. புரளி பேசாதிருத்தல்

1. தேவையற்றச் சண்டைகள் நீங்கும்

2. பழிவாங்கும் எண்ணத்தை கைவிடல்

2. மன அமைதிப் பெறலாம்.

3. உண்மை பேசுதல்

3. நம் வாழ்வை உயர்த்தும், அச்சமின்றி வாழலாம்

4. உதவி செய்தல்

4. மன மகிழ்ச்சி கிடைக்கும்

5. அன்பாய் இருத்தல்

5. அனைவரும் நண்பராகிவிடுவர்

)

   சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது.

5

                                                                             பகுதி-5                                                                      3X8=24

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க:

43

)

# செயற்கைக் கோள் ஏவுதலில் செயற்கை நுண்ணறிவு சிறப்பாகச் செயல்படும்.

   # மருத்துவத் துறையில் மாபெரும் புரட்சி ஏற்பட செயற்கை நுண்ணறிவு வழிவகுக்கும்.

   # வேளாண்மையில் எண்ணற்ற முன்னேற்றம் காண அறிவியல் உதவும்.

   # செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் அனைத்துத் துறைகளிலும் பயன்படும்.

   # மனிதர்களால் செய்ய இயலாத செயல்களையும் செய்ய இயலும்.

   # பள்ளிகள்,மருத்துவமனைகள்,வங்கி,அலுவலகம் போன்ற இடங்களில் இயந்திர மனிதன்  தனது சேவையை அளிக்கும்.

)  

ü  என்னை மிகவும் கவர்ந்த அறிஞர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆவார். இங்கு அவரே சில நிகழ்வுகளைப்பற்றி கூறுவதைக் காண்போம்

ü  வறுமையால் எனது கல்வியை இழந்தேன். இருந்தாலும், கேள்வியறிவால் ஞானம் பெற்றேன்

ü  வறுமையிலும் நூல்களை வாங்கிப் படிப்பதில் ஆர்வமாய் இருந்தேன்

ü  தமிழர்களை ஒன்றிணைக்க முயன்றதற்காக ஆங்கிலேய அரசு என்னைச் சிறையில் அடைத்த்து.

ü  பல எல்லைப்போராட்டங்களை நடத்தினேன்.

ü  எனது போராட்டத்தால் திருத்தணியும், சென்னையும் தமிழகத்தோடு இணைந்தது.

8

44

.

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

. வீரப்பனும், ஆறுமுகமும்( ஒருவன் இருக்கிறான்)

 முன்னுரை:

                யாரையும் அலட்சியப்படுத்தாத  ஈர நெஞ்சம் உடையவர் இறைவனுக்குச் சமமாக மதிக்கப்படுவர். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில்,கு.அழகிரிசாமி  தனதுஒருவன் இருக்கிறான்என்ற கதையில், வீரப்பன், ஆறுமுகம்  ஆகிய இரு பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

 குப்புசாமியின் குடும்ப நிலை:

              காஞ்சிபுரத்தில் ஒரு விறகுக் கடையில் வேலை செய்து வந்த ஒரு ஏழை. வீரப்பனுடைய நண்பன் குப்புசாமி. குப்புசாமிக்குத் தாய், தந்தை கிடையாது.சென்னையில் இருந்த அவனது சித்தியும், காஞ்சிபுரத்திலிருந்து தாய்மாமனும்  மட்டுமே அவனது உறவினர்கள்.

நோயுற்ற குப்புசாமி:

               சிறிது நாட்கள் கழித்து குப்புசாமி நோயின் காரணமாக வேலையை இழந்து தாய்மாமன் வீட்டில் துன்பப்பட்டுக் கொண்டு இருந்தான். பின்னர் மருத்துவத்திற்காக சித்தி வீட்டிற்கு வந்திருந்தான். அப்போது குப்புசாமிக்கு வீரப்பன் மூன்று ரூபாயும், ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு இருந்தான்.

ஆறுமுகம்:

              வீரப்பன் அளவிற்கு குப்புசாமி இடம் நட்பு இல்லை என்றாலும் ஓரளவு அறிமுகமானவர். குப்புசாமியை மருத்துவமனையில் சேர்த்த செய்தியை அறிந்தவுடன் தன் பிள்ளைகளுக்காக வைத்திருந்த 4 சாத்துக்குடி பழங்களில் இரண்டையும், ஒரு ரூபாயும் கொடுத்து குப்புசாமியிடம் சேர்த்து விடச் சொன்னான்.

 முடிவுரை:

                  “ பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல்

                    மண்புக்கு மாய்வது மன்”   

 பண்புடையவர்களால்தான், இவ்வுலகம் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற வள்ளுவரின் வாக்கிற்கு  மிகச்சிறந்த சான்றுகள் வீரப்பனும் ஆறுமுகமும்.

8

45

.

தலைப்பு:  இயற்கையைப் போற்று (சுற்றுச்சூழல் பாதுகாப்பு)

முன்னுரை:

              நமது சுற்றுச்சூழல் உயிருள்ள காரணிகளையும் உயிரற்ற காரணிகளையும் உள்ளடக்கியது. மழையும் காற்றும் மரமும் வளமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை அல்லவா? அத்தகைய வளங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும்,வளங்களின் தற்போதைய நிலையையும் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

விசும்பின் துளியும் பசும்புல் தலையும்:

                                                  விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே

                                                    பசும்புல் தலைகாண் பரிது"

     என்கிறார் வள்ளுவர் .மாதம் மும்மாரி பொழிந்தது இந்நாடு.வளம்மிக்க இந்நாட்டில் தற்போது நீரின்றி வாடும் நிலை ஏற்பட்டுள்ளது.. வெப்பமயமாதலும் நெகிழிப் பயன்பாடும் தற்போது நிலத்தடி நீர்மட்டத்தை பெருக்குவதில் பெருந்தடையாக உள்ளன.அதோடன்றி, மரங்கள் அதிக அளவில் வெட்டப் படுவதும் மழைப்பொழிவு குறைவதற்குப் பெருங்காரணியாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு:

உங்கள் சுவாசத்தை நிறுத்தும் முன்

காற்று மாசுபாட்டை நிறுத்துங்கள்

    மக்கள் தொகைப் பெருக்கம், மக்கள் நெருக்கம், தொழிற்சாலைக் கழிவு, வாகனப்புகை போன்றவற்றால் நிலம், நீர்,காற்று அனைத்தும் மாசடைகிறது. இதனால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவை சமநிலை பாதிப்புக்கு உள்ளாகி, மனித இனம் பல நோய்களுக்கு ஆட்பட்டு, அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. இயன்றவரை மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி, காற்றுமாசுபாட்டைக் குறைக்கலாம்.

பசுமையைக் காப்போம்:

மரம் தான் மரம் தான் எல்லாம் மரம்தான்

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

      சூரிய ஒளி, மழை, தாவரம், காற்று இந்நான்கும் பசுமையை நிலைநாட்டுவன. உலக வெப்பமயமாதல், | குளிர்சாதனப்பெட்டி பயன்பாடு போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாகும் பசுமையை மீட்டுக் கொணர்வது நமது ஒவ்வொருவரின் கடமையாகும் வீட்டிற்கு ஒரு தோட்டம், பொதுவிடங்களில் மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்ற செயல்களை மேற்கொண்டு நாம் பசுமையை காக்க வேண்டும்.

மரமும் மழையும் வரமும் உயிரும்:

'விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

                                             உள்நின்று உடற்றும் பசி'

      ஒவ்வொரு மரமும் பல்லாயிரம் உயிர்களுக்குப் புகலிடம் ஆகும். மரமும் காற்றும் மழைக்கு ஆதாரம் 'ஆகையால், பசி யின்றி வாழவும், தானம் தவம் இரண்டும் தொடர்ந்து நிலைபெறவும் மழைநீர் அவசியமாகிறது.காடுகள் அழிக்கப்படுவதைத் தடுப்பதும்,நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிப்பதும் நீர்வளம் பெருக நாம் செய்ய வேண்டிய வழிமுறைகளாகும்.

முடிவுரை:

      இயற்கைவளங்கள் தொடர்ந்து மாசுபடுத்தப் படுவது எதிர்காலத்தில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என அறிவியல் அறிஞ்சர்கள் எச்சரிக்கின்றனர்.மாசில்லா உலகம்; நோயில்லா பெருவாழ்வு. விண்ணின் மழைத்துளி; மண்ணின் உயிர்த்துளி. மனதில் நிறுத்துவோம் மானுடம் திருத்துவோம்.

 

. முன்னுரை, பொருளுரை(உட்தலைப்புகள்) , முடிவுரை என்ற அமைப்பில் பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

 

 பதிவிறக்கம் செய்ய

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை