6 TH STD TAMIL HALF YEARLY EXAM QUESTION PAPER AND ANSWER KEY 2024

இராணிப்பேட்டை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024

    (இராணிப்பேட்டை , வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாள்👇👇

இரண்டாம் பருவத் தொகுத்தறி தேர்வு 2024

இராணிப்பேட்டை மாவட்டம்

6.ஆம் வகுப்புதமிழ் விடைக்குறிப்புகள்

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                                    6X1=6

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்கள்

1

இ. மாசற

1

2

இ. மூத்தோர்

1

3

. பாட்டு+ இசைத்து

1

4

அ. நுகர்வோர்

1

5

இ. வீரம்

1

6

ஈ. கலமேறி

1

பொருத்து                                                                                                                                     4X1=4

7

புயல் - ஊஞ்சல்

1

8

தேசம் - நாடு

1

9

மறம் - வீரம்

1

10

விடிவெள்ளி - விளக்கு

1

சொற்றொடரில் அமைக்(மாதிரி விடை)                                                                                    2X1=2

11

ஏற்றுமதி – பழங்காலத் தமிழகம் ஏற்றுமதியில் சிறந்து விளங்கியது

1

12

பண்பாடு – தமிழர் பண்பாடு மிகச்சிறந்தது

1

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்                                                                   5X2=10

13

ஒன்றைச் சுட்டிக்காட்ட வரும் எழுத்துகள்

2

14

நற்பண்புகள் உடையவரோடு

2

15

ü  மன்னர் , நன்கு கற்றவர் இருவரில் மன்னரே சிறந்தவர்

ü  மன்னருக்கு அவரது நாட்டில் மட்டுமே சிறப்பு

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

2

16

ü  பொறியியல் கல்லூரிகள்

ü   மருத்துவக் கல்லூரிகள்

ü  கால்நடைமருத்துவக் கல்லூரிகள்

ü  ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்

2

17

  அமிழ்தமே ஆனாலும் விருந்தினர் இருக்கும்போது தான்மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

2

18

ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும்.

2

19

உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே வேறுபாடு உள்ள ஒலிகள்

2

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்                                                                3X4=12

20

ü  வினா எழுத்துகள் சொல்லின் அகத்தே இருந்து வினாப் பொருளைத் தருவது அகவினா எனப்படும்.

ü  வினா எழுத்துகள் சொல்லின் புறத்தே வந்து வினாப் பொருளைத் தருவதுபுறவினா எனப்படும்.

4

21

ü  உறவினர்களைக் கண்டு மகிழ்வர்.

ü  குடும்பத்தினருடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வர்.

ü  விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்துவர்.

4

22

ü  கடல் கடந்து வணிகம் செய்தான்.

ü  போர்களில் வெற்றிபெற்றான்.

ü  இமயத்திலும் தன் கொடியை நாட்டினான்.

ü  கப்பல்களில் வெளிநாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தான்.

4

23

ü  மூடப்பட்டிருந்த ஆறாயிரம் தொடக்கப்பள்ளிகளைத் திறந்தார்

ü  இலவசக் கட்டாயக் கல்வித்திட்டத்தை ஏற்படுத்தினார்.

ü  மதிய உணவுத்திட்டம் மற்றும் சீருடைத்திட்டங்களை உருவாக்கினார்

4

அடிமாறாமல் எழுது                                                                                                                  4+2=6

24

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன் - மன்னற்குத்

தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.

4

25

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்து அனையது உயர்வு

2

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்                                                                            5X2=10

26

அ. சங்கு – க் ,ங்      ஆ. கற்கண்டு – ண் , ட்

2

27

( மாதிரி விடைகள்)

1. முகிலன் யார் வீட்டுக்குச் சென்றான்?  2. முகிலனின் வழக்கம் யாது?

2

28

அ. கயிறு (அ) துணி நூல்  , புத்தகம்         ஆ. பூமாலை, பொழுது    

2

29

அ. மின் தூக்கி   ஆ. நுகர்வோர்

2

30

அ. தேர்த்திருவிழாவிற்குச் சென்றனர்   ஆ. வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது

2

விடையளிக்                                                                                                                            2X5=10

31

v  பூங்குளத்தில் வசிக்கும் அருளப்பர் என்ற முதியவர் தான் வெளிநாடு செல்லும் முன் தன் பிள்ளைகளாகிய வளவன், அமுதா,எழிலன் மூவரிடமும் தலா ஐம்பதாயிரம் பணம் கொடுத்து தான திரும்பும்வரை அப்பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கூறிச்சென்றார்.

v  உழவுத்தொழிலில் ஆர்வமுடைய வளவன்,நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து,அதில் பலவித காய்கறிகளை விதைத்து நல்ல வருவாய் ஈட்டி பணத்தை இருமடங்காக்கினான்.

v  ஆடு மாடுகள் வளர்ப்பதில் ஆர்வமுடைய அமுதா ஆடு மாடுகள் வளர்த்து அவற்றிடமிருந்து கிடைத்த பால்பொருட்களைக் கொண்டு வருவாயை இரட்டிப்பாக்கினான்.

v  இளையவனாகிய எழிலனோ தந்தை கொடுத்த பணத்தைப் பத்திரமாக வங்கியில் வைத்திருந்தான்

v  அருளப்பர் வந்ததும் மூவரும் தத்தம் செயல்களைப்பற்றிக் கூறினர்.

v  வளவன்,அமுதாவை வெகுவாகப் பாராட்டியவர்,எழிலனது தவற்றைச் சுட்டிக்காட்டி அறிவுரை கூறினார்.

ஆ)

v  அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகமாகும்.

v  இந்த நூலகம் தரைத்தளம் மற்றும் எட்டு அடுக்குகளைக் கொண்டது.

v  தரைத்தளத்தில் பார்வைத்திறன் குறைபாடு உடையோருக்கான பிரிவு உள்ளது.இங்கு அவர்களுக்கான பிரெய்லி நூல்கள் இருக்கும்.

v  முதல் தளம் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி.இங்கு பிற நாடுகளிலிருந்து திரட்டப்பட்ட ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.

v  இரண்டாம் தளத்தில் சங்ககாலம் தொடங்கி இன்று வரை உள்ள அனைத்து தமிழ் நூல்களும் உள்ளன.

v  மூன்றாம் தளத்தில் அரசியல் சார்ந்த நூல்களும், நான்காம் தளத்தில் பொருளியல், சட்டம் சார்ந்த நூல்களும், ஐந்தாம் தளத்தில் கணிதம், அறிவியல், மருத்துவம் உள்ளிட்ட நூல்களும் உள்ளன.

v  ஆறாம் தளத்தில் பொறியியல், வேளாண்மை திரைப்படங்களைச் சார்ந்த நூல்களும் ஏழாம் தளத்தில் பழமையான ஓலைச்சுவடிகள்  காப்பகமும் எட்டாம் தளத்தில் கூட்ட அரங்கு, கலையரங்கு உள்ளிட்டவையும் உள்ளன.

5

32

அ) பிறந்த நாள் பரிசு அனுப்பிய மாமாவுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதுக.

10,தமிழன் வீதி,

மதுரை-1

25 நவம்பர்,2022.

அன்புள்ள மாமாவிற்கு,

         அன்புடன் நிறைமதி எழுதும் மடல்.நலம் நலமறிய ஆவல்.தாங்கள் எனக்குப் பிறந்தநாள் பரிசாக அனுப்பிய தமிழ் அகராதி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது.எனது தமிழாசிரியரிடமும் அகராதியைக் காட்டினேன்.அவரும் அகராதி மிகச்சிறப்பாக இருப்பதாகச் சொன்னார். வகுப்பறையில் தமிழாசிரியர் கூறும் அருஞ்சொற்கள் அனைத்திற்கும் இதில் பொருள் உள்ளது. பயனுள்ள பிறந்தநாள் பரிசை வழங்கிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி!!

இப்படிக்கு,

தங்கள் அன்புடைய,

வா.நிறைமதி.

உறைமேல் முகவரி:

   கோ.தமிழரசன்

   12,முல்லை நகர்,

   திருத்தணி-1.

ஆ) காமராசர்

முன்னுரை:

    செயற்கரிய செய்வர் பெரியர்" என்ற வள்ளுவரின் கூற்றுக்கு உரியவராகப் புகழப்படுபவர் காமராஜர் பாரதத்தின் விடுதலைக்காக மட்டுமல்லாமல் விடுதலை பெற்ற பாரதப் பெருநாட்டின் உயர்வுக்காகவும் அயராது பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் காமராசர், தலைநிமிர்ந்த தமிழகத்தைக் காணவிரும்பி, அயராது உழைத்த தன்னலமற்ற தலைவர் காமராசர்.

இளமைக்காலம்:       

    தந்தையை இளமையிலேயே இழந்த காமராசர் தம் படிப்பை இடையிலே நிறுத்திவிட்டார். தம் மாமாவின் கடையில் வேலை செய்தார். செய்தித்தாள்களைப் படித்தும், தலைவர்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், அரசியலறிவையும், நாட்டுப் பற்றையும் வளர்த்துக் கொண்டார். அவையே அவரை விடுதலைப் போரில் ஈடுபடத் தூண்டின.

கல்விப்பணி:

  தமிழக மக்கள் அனைவரும் கற்றவராகவில்லையே என்று காமராசர் வேதனைப்பட்டார். அதனால், ஊர்தோறும் பள்ளிகளைத் திறந்தார். கல்வியின் அருமை பெருமைகளை அறிந்திருந்த காமராசர் இலவச மதிய உணவுடன் கூடிய கல்வி,கட்டாயக்கல்வி உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றி தமிழக மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி அடைய வழிகோலினார்

நிறைவேற்றிய திட்டங்கள்:

   காமராசர் கல்வித்திட்டங்களை நிறைவேற்றியதோடு,தமிழகமெங்கும் பல்வேறு அணைகளைக் கட்டி நீர்வளத்தைப் பெருக்கினார்; நிலவளத்தை உயர்த்தினார்; நாடெங்கும் பல்வேறு தொழிற்சாலைகளை நிறுவினார்; மின் உற்பத்தியைப் பெருக்கித் தொழில்துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடையச் செய்தார்; ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் காப்புறுதி, ஓய்வூதியம், வைப்பு நிதி ஆகிய முப்பெருந் திட்டங்களைக் கொண்டுவந்தார்.

முடிவுரை:

    எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பாலும் தன்னலமற்ற நாட்டுப் பற்றாலும் நாடு போற்றும் நல்ல தலைவராக விளங்குகின்றார். அவரது வாழ்க்கைநெறி இன்றைய அரசியல்வாதிகள் பின்பற்றத் தக்கதாகும்.

2

 பதிவிறக்கம் செய்ய




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை