7 TH STD TAMIL HALF YEARLY EXAM QUESTION PAPER AND ANSWER KEY 2024

 இராணிப்பேட்டை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024

      (இராணிப்பேட்டை , வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)

இரண்டாம் பருவத் தொகுத்தறி தேர்வு 2024

இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாள்👇👇

7.ஆம் வகுப்புதமிழ் விடைக்குறிப்புகள்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி    

) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                                          4X1=4

வி.எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்கள்

1

. மதலை

1

2

. மயில்

1

3

. செப்பு+ஏடு

1

4

. திரிசொல்

1

) கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                2X1=2

5

விளக்கில்லாத

1

6

இடைநிலை

1

) பொருத்துக                                                                                                                             4X1=4

7

கழனி - வயல்

1

8

நிகர் - சமம்

1

9

பரிதி - கதிரவன்

1

10

முகில் - மேகம்

1

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                            5X2=10

11

கலங்கரை விளக்கம்

2

12

எரா, பருமல், வங்கு, கூம்பு,பாய்மரம், சுக்கான், நங்கூரம்

2

13

வானம் நீரோடை, தாமரை,காடு, வயல், மேகம், தென்றல்,மயில், அன்னம்,கதிரவன்

2

14

நல்ல நூல்களை ஆழ்ந்து,ஆராய்ந்து, தேர்ந்தெடுத்துப் படிக்க வேண்டும்

2

15

அன்பும், பாசமும்

2

16

குகை , சுவர், துணி, ஓலைச்சுவடி, செப்பேடு, தந்தம், கண்ணாடி, தாள்,கருத்துப்படம், நவீனம்

2

17

பெயர் இயற்சொல்

2

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி                                                          3X4=12

18

ü  உலகம் இடம்பெயர்ந்தது போன்று அழகிய தோற்றமுடையது தாவாய். அது புலால் நாற்றும் உடைய கடலின் நீரைப் பிளந்து கொண்டு செல்லும்,

ü  இரவும் பகலும் ஓரிடத்தில் நிற்காமல் வீக்கின்ற காற்றானது நாவாயை அசைத்து செலுத்தும். 

ü  உயர்ந்த தரையை உடைய மணல் நிறைத்த துறைமுகத்தில் கலங்கரை விளக்கத்தின் ஒலியால் திசை அறித்து நாவாய் ஓட்டுபவன் நாவாயிச் செலுத்துவான,

     -என்று கடலில் கப்பல் செல்லும் காட்சியை அகநானூறு விளக்குகிறது.

4

19

    கல்வியைப் பொருள் போலக் குவித்து வைத்தாலும் பிறரால் கொள்ளப்படாது.ஒருவற்குக் கொடுத்ததலும் குறையாது. அரசராலும் கவர முடியாது.ஆதலால் ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்கவேண்டிய செல்வம் கல்வியே ஆகும். மற்றவை செல்வம் ஆகாது

4

20

1. நீர், நெருப்பு ஆகியவற்றால் கல்வி அழியாது.

2. திருடர்களால் கல்வியைத் திருடமுடியாது.

3. கல்வியை மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும் குறையாது.

   - எனவே, பிற செல்வங்கள் அழியும். ஆனால்கல்விச் செல்வம் அழியாதது ஆகும்.

4

21

      மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவதைக் கேலிச்சித்திரம் என்பர்.

4

22

பெயர்ப்பகுபதம் ஆறு வகைப்படும். அவையாவன:

1. பெயர்பெயர்ப்பகுபதம்

2. இடப்பெயர்ப்பகுபதம்

3. காலப்பெயர்ப்பகுபதம்

4. சினைப்பெயர்ப்பகுபதம்

5. பண்புப்பெயர்ப்பகுபதம்

6. தொழில்பெயர்ப்பகுபதம்

   சான்று: அவன், அவர் அவர், அவர்கள், அது, அவை, இவன், அவள்

4

மனப்பாடப்பகுதி                                                                                                               4+2=6

23

வானம் ஊன்றிய மதலை போல

ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி

விண்பொர நிவந்த வேயா மாடத்து

இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி

உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்

துறை..

4

24

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

2

பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                       10X1=10

25

கண்மணி நாளை பாடம் படிப்பாள்

1

26

மாநகரம்

1

27

பூ

1

28

மாலையில் மாலை அணிந்தான்(மாதிரி விடை)

1

29

பாடலைப் பாடினான்

1

30

துறைமுகம்

1

31

மகிழ்ச்சி

1

32

எழுத்து + என்ப

1

33

க உ , க அ, 0

1

34

கண்

1

ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் விடையளி                                                                            1X6=6

35

'ஆழ்கடலின் அடியில்' கதையைச் சுருக்கி எழுதுக.

கதைமாந்தர் அறிமுகம்: 

ü  பியரி - விலங்கியல் பேராசிரியர் 

ü  ஃபராகட் - அமெரிக்கா நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட போர்க் கப்பலின் தலைவர். 

ü  நெட் - ஈட்டி எறிந்து திமிங்கிலங்களை வேட்டையாடுவதில் வல்லவர். 

ü  கான்சீல் - பியரியின் உதவியாளர்.

முன்னுரை

      அறிவியல் புனைகதைகளின் தலைமகன் என்று புகழப்படுபவர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய ‘ஆழ்கடலின் அடியில்' என்ற புதினத்தின் கதையினைச் சுருக்கிக் காண்போம். 

விலங்கைத் தேடிய பயணம்

     கடலில் உலோகத்தால் ஆன உடம்பு கொண்ட ஒரு விலங்கு கடலில் செல்வோரைத் தாக்கியது. அதனைக் கண்டுபிடித்து அழிக்க பியரி, ஃபராகட், நெட், கான்சீல் ஆகியோர் கொண்ட குழு நியூயார்க் நகரில் இருந்து ஒரு போர்க்கப்பலில் செல்கின்றது. அமெரிக்கா முதல் ஜப்பான் வரை மூன்று மாதங்களாகத் தேடியும் அந்த விலங்கு கிடைக்கவில்லை. ஒரு நாள் அந்த விலங்கு இவர்களின் கப்பலைத் தாக்கியது. பீரங்கிக் குண்டுகளும், நெட்டின் ஈட்டியும் அந்த விலங்குகளை எதுவும் செய்ய முடியவில்லை. அது இவர்களைத் தூக்கி வீசியது.

நீர்மூழ்கிக் கப்பல்

    அது விலங்கன்று. நீர் மூழ்கிக் கப்பல் என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களை நீர் மூழ்கிக் கப்பல் வீரர்கள் சிறைபிடித்தனர். அந்த நீர் மூழ்கிக் கப்பல் பெயர் நாட்டிலஸ் என்றும், அதன் தலைவர் நெமோ என்பதையும், இக்கப்பலை விந்தையான விலங்கு என்று நம்ப வைத்ததையும் நேமோ கூறிவிட்டு, இச்செய்தி அறிந்த உங்களை வெளியில் அனுப்ப முடியாது. எனக்கான இந்தத் தனி உலகத்தில் தான் நீங்களும் இருக்க வேண்டும் என்றார். அனைவரும் அச்சப்பட்டனர். 

கப்பலின் இயக்கம்

    கப்பலுக்குத் தேவையானவை எப்படி உங்களுக்குக் கிடைக்கின்று என்று பியரி, நெமோவிடம் கேட்டார். அதற்கு அவர் மின்சாரம் தயாரிக்க தேவையான கருவிகள் உள்ளன, கப்பலில் மிகப்பெரிய நீர்த்தொட்டி உள்ளது. அதனை நிரப்பும் போது கப்பல் கடல் அடியிலும் நீர் வெளியேறும் போது மேல் செல்கின்றது. சில நாட்களுக்கு ஒரு முறை கப்பல் மேலே வரும் பொழுது சுவாசிக்கத் தேவையான காற்றைப் புதுப்பித்துக்கொள்ளும், காற்றுச் சேகரிக்கும் நிறைய பைகளும் உள்ளன என்றார்.

மணல் திட்டில் சிக்கிய கப்பல்

    ஒரு நாள் மணல் திட்டில் கப்பல் சிக்கிவிட்டது. தூரத்தில் தெரிந்த தீவில் காய்கறி வாங்கி வர அவர்களை, நெமோ இசைவளித்தார். அவர்கள் காய்கறிகள் வாங்கி கொண்டு திரும்பும் போது அத்தீவில் உள்ளவர்கள் துரத்தினார்கள். அவர்கிளிடம் மாட்டாமல் கப்பல் வந்து சேர்ந்தனர். அக்கப்பலை அவர்கள் முற்றுகையிட்டனர். கடலின் நீர்மட்டம் உயர கப்பல் மேலே வந்தது. ஆறு நாள் போராட்டத்திற்குப் பிறகு கப்பல் பயணம் தொடர்ந்தது. கடலுக்கடியில் அவர்கள் செல்லும் போது, முத்துக்குளித்துக் கொண்டிருந்த இந்தியர் ஒருவரை சுறாவிடம் இருந்து காப்பாற்றினர்.கடலடியின் உன்னத காட்சிகளை எல்லாம் கண்டு மகிழ்ந்தனர்.

முடிவுரை   

      பெரும் கடல் சுழலில் கப்பல் மாட்டிக் கொண்டது. மூவரும் தூக்கிவீசப்பட்டனர். மயக்கநிலையில் நார்வே நாட்டு மீனவர் குடிசையில் இருந்ததை விழித்துப் பார்த்தனர். நெமோவும் கப்பலும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

6

36

முன்னுரை

     சுப்ரபாரதிமணியன் இயற்றிய 'பள்ளி மறுதிறப்பு* சிறுகதையில் மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கமாகக் காண்போம்.

மதிவாணனும் கவினும்

     மதிவாணனும் கவினும் ஒரே வகுப்பில் படிப்பவர்கள். கோடைவிடுமுறையில் ஒன்றரை மாதம் இருவரும் பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்றனர். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாட்கள் தான் இருந்தது. வேலைக்குச் செல்வதற்காக இருவரும் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தனர், கவின் தான் மீண்டும் பள்ளிக்குப் போவதில்லை. வாராவாரம் சம்பளம், திரைப்படம் பார்க்க காசு, பரோட்டா, போண்டா, வீட்டில் யாரும் திட்டுவதில்லை. இந்த மகிழ்ச்சி போதும் என்றான். மதிவாணனும் சற்றே குழம்பினான்,

மதிவாணனின் சிந்தனை

     படிக்கின்ற வயதில் வேலை தேவையா? மருத்துவர், பொறியாளர், வெளிநாட்டு வேலை என்று மதிவாணன் உள்ளும் கனவுகள் இருந்தன. தொழிலாளியாகவே கடைசி வரைக்கும் இருக்க வேண்டுமா என்பதை நன்கு சிந்தித்தான். எதிரில் இருந்த விளம்பரப் பலகையில் அம்பேத்கரும் அப்துல் கலாமும் தென்பட்டனர். இவரைப் போல உயர வேண்டும் என்றால் படிப்பு தேவை என்பதை நன்கு உணர்ந்தான்.

படிக்காதவரின் நிலை

      பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவர். அங்கிருந்த சிறுவர்களிடம், இந்தப் பேருந்து நல்லூர் செல்லுமா? எனக் கேட்டார். அதற்கு அவர்கள் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் அந்தப் பெரியவர் கேட்டார். சிறுவர்கள் எங்களுக்குப் படிக்கத் தெரியாது என்றனர். இது கூடப் படிக்கத் தெரியாதா என்றார் பெரியவர். அதற்கு ஒருவன் ஏன் உங்களுக்குப் படிக்கத் தெரியாத என்று கேட்டு, அனைவரும் சிரித்தனர். மதிவாணன் அவரிடம் நல்லூர் இது போகாது போகும் பேருந்து வரும் போது சொல்கின்றேன் என்றான்.இதையெல்லாம் பார்த்து கல்வி தான் தலைநிமிரச் செய்யும் என்பதை உணர்ந்து, பள்ளியை நோக்கி நடந்தாள் மதிவாணன்.

முடிவுரை :

    "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது" என்பதைப் புரிந்து கொண்டு இளமையில் மதிவாணன் கல்வி கற்க விருப்பம் கொண்டான். இன்று கிடைக்கும் பணத்தை விட நாளை கிடைக்கும் மதிப்புக்காக இன்றே கல்வி கற்க வேண்டும்.

6

ஒரு பக்க அளவில் விரிவாக எழுதுக                                                                               1X6=6

35

நூலகம் அமைத்துத் தர வேண்டி மடல்

அனுப்புநர்

   ச.முகிலன்,

   4,பாரதிநகர்,

   திருத்தணி-1

பெறுநர்

   ஆணையர் அவர்கள்,

   பொதுநூலகத் துறை.

   சென்னை - 600 002.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நூலகம் அமைத்துத் தர வேண்டுதல்.

    வணக்கம், எங்கள் பாரதி நகர் திருத்தணியின் மையப் பகுதியை ஒட்டியே உள்ளது. இங்கு சுமார் 500 குடும்பங்கள் உள்ளன. 3000 மக்கள் வாழ்கின்றனர். பள்ளி, கல்லூரி செல்வோர் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் 1000 பேர் உள்ளனர். பொழுதைப் பயனுள்ள வகையில் கழிக்க எங்கள் பகுதியில் நூலகம் இல்லை. அறிவை வளர்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறியவும் எங்களால் இயலவில்லை. எனவே எங்கள் அறிவுக் கண்களைத் திறக்க எங்கள் பகுதியில் நூலகம் அமைத்துத் தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

நன்றி பல

. இப்படிக்கு தங்கள்

உண்மையுள்ள,

ச.முகிலன்.

 

இடம் : திருத்தணி,

நாள் : 01-10-2023.

உறைமேல் முகவரி

பெறுநர் :

    ஆணையர் அவர்கள்,

   பொதுநூலகத் துறை.

   சென்னை - 600 002.

)  ( மாதிரி விடை)

தலைப்பு : எங்கள் ஊர்

   முன்னுரை - அமைவிடம் பெயர்க்காரணம் திருவிழாக்கள் - மக்கள் ஒற்றுமை - முடிவுரை தொழில்கள் - சிறப்பு மிகு இடங்கள்

முன்னுரை :

     அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.

அமைவிடம்:

    கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.

பெயர்க்காரணம்:

    இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது.இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு  ஆயிற்று என்பர்.

தொழில்கள்:

    வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.

சிறப்புமிகு இடங்கள் :

    பெரியார் - அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள்:

    மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில்  கலந்து கொள்வர்.

மக்கள் ஒற்றுமை:

      இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை :

       நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.

1





கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை