இராணிப்பேட்டை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024
(இராணிப்பேட்டை , வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)
அரையாண்டுப் பொதுத் தேர்வு-2024 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாள்👇👇
8.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வி.எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
அ. வைப்பு |
1 |
2. |
ஆ. காலனை |
1 |
3. |
ஆ . கல்லாதவர் |
1 |
4. |
ஈ. கல்வி |
1 |
5. |
அ, இகழ்வாரை |
1 |
6. |
இ. பாடு +அறிந்து |
1 |
7. |
ஆ.
விளி |
1 |
8. |
ஆ. வஞ்சி |
1 |
9. |
இ. மூன்று |
1 |
10. |
இ. மதுரை |
1 |
11 |
ஆ. அச்சம் |
1 |
12 |
இ. கலிங்கத்துப்பரணி |
1 |
13 |
அ. செயங்கொண்டார் |
1 |
14 |
இ. காலன் |
1 |
15 |
அ. அதுகொல், இதுகொல் |
1 |
பகுதி-2 பிரிவு-1 4X2=8
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க (21 கட்டாய வினா) |
||
16 |
அ.
மாங்கனி நகரம் என அழைக்கப்படுவது யாது? ஆ.
புத்தியைத்தீட்டு என்ற நூலை இயற்றியவர் யார்? |
2 |
17 |
உலகம் ஐம்பூதங்களான
நிலம், நீர்,
நீ, காற்று, வானம்
ஆகியவற்றால் ஆனது. |
2 |
18 |
இன்று இந்தியாவின்
விடியல் தோன்றிய நாள் என்று பகத்சிங் கனவு கண்டார். |
2 |
19 |
காவிரி, பவானி, நொய்யல்,
ஆன்பொருநை (அமராவதி) |
2 |
20 |
v உழவர்களின் கடன் தள்ளுபடி, ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம் v ஆதரவற்றமகளிருக்குத்திருமண உதவித்திட்டம் v தாய்சேய்நல இல்லங்கள் v நலிவடைந்தபிரிவைச் சேர்ந்தமாணவர்களுக்குப் பாடநூல்
வழங்கும் திட்டம் v முதியோருக்கு உதவித்தொகைவழங்கும் திட்டம் |
2 |
21 |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை
அவன்கண் விடல். |
2 |
பிரிவு-2 5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
22 |
உம்மைத்தொகை |
2 |
23 |
தொகைநிலைத்தொடர் 1. வேற்றுமைத்தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகைஎன
ஆறுவகைப்படும். |
2 |
24 |
தோன்ற, திரிதல், கெடுதல் |
2 |
25 |
அ.
விழிப்புணர்வு ஆ. மூலிகை |
2 |
26 |
அ. செல் ஆ.
வா |
2 |
27 |
தமிழ்மொழி
செம்மையானது, வலிமையானது, இளமையானது. |
2 |
28 |
அ. ௬உ ஆ. ௪ரு இ. கஅ ஈ. ௩எ |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும்
விடையளிக்க |
||
29 |
ü
முதலில் பிரம்பினை நெருப்பில்
காட்டிச் சூடுபடுத்த வேண்டும். ü
சூடான நிலையில் நட்டு
வைத்திருக்கும் இரண்டு கடப்பாரைகளுக்கு இடையில் செலுத்தி வளைக்கவேண்டும். ü
வேண்டிய வடிவத்தில் கம்பிபோல
வளையும். பின்னர் அதனைத் தண்ணீரில் நனைத்துவிட்டால் அப்படியே நிலைத்துவிடும். இவ்வாறே பிரம்பால் பொருட்களைச் செய்ய இயலும். |
3 |
30 |
வடக்கே பெரும்பாலை தெற்கே பழனி
மலை, மேற்கே வெள்ளிமலை, கிழக்கே மதிற்கூரை என இந்நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியாகக் கொங்கு
மண்டலம் விளங்கியதாகக் கொங்கு மண்டலச் சதகம் கூறுகிறது. |
3 |
31 |
அ. குடநாடு ஆ. வஞ்சி இ. தொண்டி
,முசிறி, காந்தளூர் |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும் இரண்டு
வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
32 |
v பண்பு
எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். v அன்பு
எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் |
3 |
33 |
ü
கல் இல்லாத காட்டில்
கடலைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழைபெய்யவில்லை. ü
முள் இல்லாத காட்டில்
முருங்கைச் செடி நட்டு வளர்த்தார்கள். அதற்கும் மழை வரவில்லை. ü
கருவேலங்காடும்
மழையில்லாமல் பூக்கவில்லை, ü
மழை இல்லாததால்
காட்டு மல்லியும் பூக்கவில்லை. ü
மழைச்சோறு எடுத்தபின்
எவ்வாறு மழை பெய்தது? மழைச் சோறு எடுத்தபின், பேய் மழையாக ஊசி போல கால் இறங்கி உலகமெல்லாம் பெய்கிறது. |
3 |
34 |
கற்றோர்க்குக் கல்வி நலனே
கலனல்லால் மற்றோர் அணிகலம் வேண்டாவாம் - முற்ற முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே அழகுக்கு அழகுசெய் வார்" -குமரகுருபரர் |
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
35 |
நிலைமொழியும் வருமொழியும்
எவ்வித மாற்றமும் இன்றி இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும். சான்று: தாய் மொழி தாய்+மொழி = தாய்மொழி இரு
சொற்களிலும் எந்த மாற்றமும் நிகழவில்லை, எனவே இது இயல்பு புணர்ச்சி. |
3 |
36 |
சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள். இத்தொடரில்
படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு
முடிவது முற்றெச்சம் எனப்படும். |
3 |
37 |
வினை கொண்டு முடிகிற
பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும். ஓடு, ஓடு
ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும். எடுத்துக்காட்டு
: தாயோடு குழந்தை சென்றது,
அமைச்சரோடு அலுவலர்கள் சென்றனர். |
3 |
பகுதி-4 5X5=25
அனைத்து
வினாக்களுக்கும் விடையளி |
||||
38 |
அ) * நன்செய், புன்செய்
நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செயகிறது. * விளைந்த பயிர்கள் மூலம் உணவு
தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது. கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை
மோதுகிறது. குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. * நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்
வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. (அல்லது) ஆ) ü நோய் மூன்று
வகைப்படும். ü மருந்தினால் நீங்கும் நோய்கள் ஒருவகை. ü எதனாலும் தீராததன்மையுடைய நோய்கள் மற்றொரு
வகை. ü அடங்கி
இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல் உள்ளுக்குள்
இருந்து துன்பம் தருவன இன்னொரு வகை. ü அகற்றுவதற்கு அரியவைபிறவித்துன்பங்கள்
ஆகும். இவற்றைத்தீர்க்கும் மருந்துகள் மூன்று. நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்
என்பவையேஅம்மருந்துகள். இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய
இன்பத்தை அடைவர். |
5 |
||
39 |
அ) அனுப்புநர் சே.வெண்மதி, த/பெ
சேரன், 562 திருவள்ளுவர் தெரு, வளர்புரம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. பெறுநர் உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. ஐயா, பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு.
வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து
வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று
தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக
குடும்ப அட்டை நகலையும், ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான இருப்பிடச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன்
வேண்டுகிறேன்.
இப்படிக்கு, தங்கள் பணிவுடைய,
சே.வெண்மதி. இடம்:அரக்கோணம், நாள்: 12-03-2022.
உறைமேல் முகவரி: உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. (அல்லது) ஆ) 7, தெற்கு வீதி,
மதுரை-1
11-03-2022.
ஆருயிர் நண்பா,
நலம் நலமறிய ஆவல்.உன்னைச்சந்தித்து நீண்ட
நாட்களாகி விட்டன.எனினும்,உன்னுடன் பழகிய நாட்கள்
எனக்கு எப்போது நினைத்தாலும் இன்பம் தருவன.மாநில அளவில் நடைபெற்ற
சதுரங்கப்போட்டியில் நீ முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக
அறிந்தேன்.விளையாட்டில் நீ பெரிய
அளவில் சாதிப்பாய் என்பது, ”விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப” நாம் தொடக்க கல்வி
பயிலும்போதே தெரிந்தது.நீ இதே போன்று பல வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இப்படிக்கு,
உனது ஆருயிர் நண்பன்
க.தளிர்மதியன்.
உறைமேல் முகவரி:
த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4
|
5 |
||
40 |
அ. கல்வி கேள்வி ஆ. மேடுபள்ளம் இ. போற்றிபுகழப்பட
ஈ. ஈடு இணை
உ. ஆடி அசைந்து |
5 |
||
41 |
அ. பரம்பரை பரம்பரையாக ஆ. பொய்யழுகை இ. நீண்ட காலத்திற்கு
உரியது ஈ. விரைந்து
செல்லுதல் உ. இருப்பது
போல் தோன்றும்.ஆனால் இராது. |
5 |
||
42 |
|
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 அ. |
v காலையும்
,மாலையும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். v தூய்மையான
காற்றைச் சுவாசித்து,தூய நீரைப் பருக வேண்டும். v குளித்த
பிறகு உண்டு,இரவில் நன்றாக உறங்க வேண்டும். v அளவுடன்
உண்ண வேண்டும். (அல்லது) ஆ) v தமிழரது நிலம்,நிறைந்த பண்பா டுகளும்
தத்துவங்க ளும் அடங்கியது.நோய்கள் எல்லாம் பேய்,பிசாசுகளால் வருகின்றன; பாவ, புண்ணியத்தால்
வருகின்றன என்று உலகத்தின் பல பகுதிகளில் சொல்லிக் கொண்டிருந்த காலத்தில், தமிழர்
தத்துவங்களா ன சாங்கியம்,
ஆசீவகம்
போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில்
ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின. v நோயை இயற்கையில்
கிடைக்கும் பொருள்கள்,
அப்பொருள்களின்
தன்மை,சுவை
இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர்.
தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறா க ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி
வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த
மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது |
8 |
44 |
அ) v வாழ்வியல்
நெறிகளை அறிதல் v சிறந்த
அறிவு பெறுதல் v காலத்திற்கேற்ப
தம்மைப் புதுப்பித்துக் கொள்ளுதல் v ஒழுக்க
குணங்களைப் பெறுதல். ஆ) முன்னுரை :
காலம் உடன் வரும் எனும் சிறுகதையை எழுதியவர் கள்னிவாடி
சீரங்கராயன் சிவக்குமார் ஆவார். நெசவுத் தொழிலில் ஏற்படும் இன்னல்களையும்
நெசவாளர்களின் ஏழ்மை நிலையினையும் காட்டுவதாக இக்கதை அமைகிறது. சுப்ரமணியத்தின் கவலை:
அனந்திகா நிறுவனத்திற்கு வழக்கமாக வெள்ளக்கோயில் தினேஷ்
துணியகத்திலிருந்து ஏற்றுமதிக்காகத் துணிகளை அனுப்பி வைப்பார்கள். ஒருநாள் துணி
அனுப்புவது தாமதமாகிறது. தறி நெய்ய ஆள் கிடைப்பதில்லை. அதனால் துணி/ நெய்ய
தாமதமாகிறது. மாணிக்கம் ஓட்டும் ஒரே ஒரு தறியில்தான் பாவு இருக்கிறது. அந்தப்
பாவும் சற்று நேரத்தில் தீர்ந்து விடும். என்ன செய்வது என்று தெரியாமல்
சுப்ரமணியம் மிகவும் கலங்கிப் போனார். நண்பன் ரகுவின் உதவி : நண்பர் ரகு துணியகத்தில்
கட்டாயமாகப் பாவு இணைப்பவர் யாராவது இருப்பார்கள், அங்கே
போய் பார்க்கலாம் என்று ரகுவினுடைய தறிப்பட்டறைக்குச் செல்கிறார். பதற்றத்துடன்
வந்த சுப்பிரமணியத்தை ரகு நெருங்கினார். அதற்குள் சுப்பிரமணியன் பாவு இணைக்க ஆள்
வேண்டும். உடனடியாக யாரையாவது அனுப்பி உதவுங்கள் என்றார். அதற்கு ரகு மாயழகுவின்
மனைவி ஒச்சம்மா பாவு இணைக்கும்! என்கிறார். மாயழகும் ஒச்சம்மாவும்:
ஒச்சம்மா உரிலம்பட்டி பக்கம் கிருஷ்ணாபுரம் மாயழகு வெள்ளி
மலை அடிவாரத்தில் கோம்பைத் தொழுவு. திருமணமகள் பிறகு நிலையாக ஓரிடத்தில் வாழ
வேண்டும் என்பதற்காக வெள்ளகோவில் வந்தனர். தன் குழந்தைகளைப் படிக்க வைக்க,தறி ஓட்டுவதைத் தவிர பிற தறி வேலைகள் அனைத்தையும் கற்றாள். பாவு பிணைத்தல்:
ரகுஅனுப்பியதாகவும், தள்பிரச்சினையையும்
சுப்பிரமணியம்எடுத்துரைக்கிறார். மாயழகு தன் மனைவி
ஒச்சம்மாவை அவருடன் அனுப்புகிறார். தூங்கிக்கொண்டு இருக்கும் தவர்
கைக்குழந்தையுடான் செல்கிறாள். ஒச்சம்மா வர மாணிக்கத்தின் பாவு தீர்ந்து
விடுகிறது. அங்கிருந்த பாவினைச் சரிசெய்து இருக்கும் வேளையில் குழத்தை
விழித்துக் கொள்கிறது. குழத்தையைத் தூங்க வைத்தபடியே பாவை இணைக்கிறாள். வேலை
முடித்ததும் இரட்டைச் சம்பளத்தோடு சுப்பிரமணியம் அவலின் வீட்டிற்குக்
கொளண்டுபோய் சேர்க்கிறார். முடிவுரை:
இரவு பகல்
பார்க்காமல் தன் வறுமையின் காரணமாகத் ததி பட்டறையில் வேலை செய்பவர்கள் வேலை
செய்கின்றனர் என்பதை கதை மூலம் அறிய முடிகிறது. |
8 |
45 |
ஆ) கைத்தொழில்
ஒன்றைக் கற்றுக்கொள். முன்னுரை: கைத்தொழில் ஒன்றைக்
கற்றுக்கொள்
உனக்கில்லை
ஒத்துக்கொள்
எத்தொழில் எதுவும் தெரியாமல்
இருந்திடல் உனக்கே சரியாமோ?
என்று நாமக்கல் கவிஞர்
வெ.இராமலிங்கம் பிள்ளையவர்கள் பாடிய பாடலில் கூறியுள்ளார். கைத்தொழிலின்
இன்றியமையாமையை உணர்த்தும் பாடல் வரிகள் இவை. இக்கட்டுரையில்
கைத்தொழிலின் அவசியம் குறித்துக் காண்போம்.
கைத்தொழில் வகைகள்
. நமது நாட்டில்
கிராமங்களே பலவாக உள்ளன. கிராமங்களில் பெரும்பாலோர் பயிர் தொழிலையே
செய்கின்றனர்.பயிர் தொழில் செய்யும் விவசாயிகள் ஆண்டில் பல மாதங்கள் வீணே காலத்தைக்
கழிக்கின்றனர். அவர்கள் அக்காலத்தில் பல குடிசைத் தொழில்களைச் செய்து, தங்கள் வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.மட்பாண்டங்கள் செய்தல், எண்ணெய் எடுத்தல், உணவுத் தொழிலுக்குத் தேவையான
சில கருவிகளைச் செய்தல், நெசவுத்தொழில், பாய்பின்னுதல், கூடைமுடைதல், ஆடுமாடு, கோழி வளர்த்தல் போன்ற பல கைத்தொழில்களைச் செய்யலாம்.
கைத்தொழிலின் தேவை:
. காட்டுப் பகுதியில்
உள்ளவர்கள் தேன் எடுத்தல், மரச்சாமான்கள் செய்தல் போன்ற
தொழில்களைச் செய்து தமது வருவாயைப் பெருக்கிக் கொள்ளலாம்.குடிசைத் தொழில்களை
ஓய்வு நேர வேலையாக மேற்கொள்ளலாம் அல்லது முழுநேர வேலையாக மேற்கொள்ளலாம்.குடிசைத்
தொழிலின் மூலம் ஆக்கப்படும் பொருள்களை அனைவரும் விரும்பி வாங்குகின்றனர். அவை
அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுவதாக உள்ளன.அவை நாள்தோறும் பயன்படுத்தப்படுவதால்
அவற்றின் தேவை மிகவும் அதிகமாகிறது. இத்தேவையை இடைவிடாத உற்பத்தியினால்
நிறைவேற்றலாம்.
பொருளாதார பயன்
. ஒரு
நாட்டின் பொருளாதாரம் அந்நாட்டில் நடைபெறும் தொழில் வளத்தைப் பொருத்திருக்கிறது.
தொழில்வளம் மிக்க நாடுகள் செல்வ செழிப்புகள் உள்ளதாக இருக்கின்றன.உதாரணமாக
ஜப்பானில் உள்ள பெண்களும் தம் ஓய்வு நேரங்களில் பூ வேலை செய்தல், பின்னுதல் போன்ற கைத்தொழில் செய்து வருகிறார்கள். ஆகையால் ஜப்பான்
சிறுதீவுகளாக காட்சியளித்தாலும் செல்வச் சிறப்புடன் விளங்குகிறது.அவர்களைப்
போலவே நாமும் உழைத்து நம்நாட்டை உயர்த்த கைத்தொழில் வேண்டும். இது இயந்திரத்தின் உதவியின்றி, சிறிதளவு பணத்தைக்
கொண்டு கையால் செய்யப்படுவது. ஆகவே அனைவரும் இதனை எளிதில் மேற்கொள்ளலாம்.
முடிவுரை:
. எனவே
மாணவர்கள், கல்விப் பயிற்சி காலத்திலேயே நெசவு தையல்
போன்றவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக்கொண்டால் நாம் கற்ற
கல்விக்கேற்ப வேலையில்லா காலங்களில் நம் பிழைப்புக்கான ஊதியத்தை
பெறலாம்.காந்தியடிகள் கூறியது போல, நமது தேவையை நாமே
நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அயலார் கையை எதிர்பார்க்காமல் சுயசார்பு
உடையவர்களாக வாழ கைத்தொழில் உதவும். ஆ) முன்னுரை . உடல்நலம் தான் மனித
வாழ்வின் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் “நோயற்ற வாழ்வே குறைவற்ற
செல்வம்ˮ என்பர்.நாம் வாழ்வில் பெற்ற செல்வங்களை
அனுபவிப்பதற்கு உடல்நலம் மிக அவசியமாகும். உலகில் மனிதன் தனக்கான ஆயுட்காலம்
முழுவதும் சிரமம் இல்லாமல் நலமுடன் வாழ வேண்டுமாயின் நோய்களை அண்டவிடாது
ஆரோக்கியமாக வாழ்ந்தால் மட்டுமே முடியும்.எனவே நோயின்றி வாழ நாம் என்ன செய்ய
வேண்டும் என இக்கட்டுரையில் காண்போம்.
நோய் ஏற்படக் காரணங்கள்
நமது உடலில் நோயை ஏற்படுத்தப் பல காரணங்கள்
உள்ளன. நோயானது தொற்று நோய்⸴
தொற்றா
நோய்கள் என இரு வகை நோய்கள் காணப்படுகின்றன. மனிதன் இயற்கையை விட்டு வெளியே வந்தது தான்
நோய்கள் ஏற்படுவதற்கு முதன்மைக் காரணமாக விளங்குகின்றது. மாறிப்போன உணவுப்
பழக்கவழக்கங்கள் நோய் ஏற்பட மற்றுமோர் முக்கிய காரணமாக விளங்குகின்றது.
நோய் தீர்க்கும் வழிகள்
v
நமது உடலில் ஏற்படும் நோய்களிற்கு பெரும்பாலானவை தவறான
வாழ்க்கை முறைதான் காரணமாகின்றன. எனவே நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை
கொண்டு வருதல் மூலம் நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.
v உணவினை உரிய நேரத்திற்கு எடுத்துக்கொள்ள
வேண்டும். உடற்பயிற்சி தினமும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். மேலும் சரியான தூக்கம்
நமது நோய்களைக் குணப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
உணவும் மருந்தும்
நாம் உண்ணும் உணவு
புரதம்⸴ கொழுப்பு⸴ மாவுச் சத்து⸴ கனிமங்கள்⸴ நுண்ணூட்டச்
சத்துக்கள் போன்ற அனைத்தும் கலந்த சமச்சீர் உணவுகளாக இருக்க வேண்டும். உணவில்
இவற்றை தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.உணவை நன்றாக மென்று விழுங்குதல்
வேண்டும்⸴ அப்போதுதான் வாயிலுள்ள உமிழ்நீர்
வேண்டிய அளவு சுரந்து உணவுடன் கலந்து எளிதில் செரிமானம் அடைந்து உணவிலுள்ள
சத்தானது உடலில் சேரும்.காய்கறிகளை முக்கால் வேக்காட்டில் வேகவைத்து உண்ண
வேண்டும்⸴ அப்போதுதான் காய்கறிகளில் உள்ள
ஊட்டச்சத்து முழுமையாக கிடைக்கும். இப்படி உண்டால் உணவே மருந்தாகும்.
உடற்பயிற்சியின் தேவை
உடற்பயிற்சியானது
உடலின் வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. அதிகப் பசியைக்
கட்டுப்படுத்தும்⸴ ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி
வைத்திருப்பதற்கும் உடற்பயிற்சி அவசியமாகும். எனவே தினமும் உடற்பயிற்சி என்பது
மிகத் தேவையான ஒன்றாகும்.
முடிவுரை: இறைவன்
நமக்குக் கொடுத்த இந்த மானுட வாழ்வினை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடன்
வாழ்வது சிறந்ததாகும். எனவே உடலை நோயின்றி பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வினை வாழ
வேண்டும். |
8 |