இராணிப்பேட்டை மாவட்டம் – அரையாண்டுத்தேர்வு , 2024
(இராணிப்பேட்டை , வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளதால் இதே வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பைப் பயன்படுத்தலாம்)
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக்குறிப்புகள்
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
|||||
வி.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
||
1. |
இ.
சிற்றிலக்கியம் |
1 |
|
||
2. |
இ.
மதுரை |
1 |
|
||
3. |
அ.
ஆராயாமை, ஐயப்படுதல் |
1 |
|
||
4. |
ஆ.
ஊஅர்கத் திறனறி தேர்வு |
1 |
|
||
5. |
அ.
கண்ணி |
1 |
|
||
6. |
ஆ.
வளம் |
1 |
|
||
7. |
ஈ.
தொகைச்சொற்கள் |
1 |
|
||
8. |
அ.
வெண்பா |
1 |
|
||
9. |
ஈ.
தொழில் |
1 |
|
||
10. |
ஈ.
கெடுதல் |
1 |
|
||
11. |
அ.
வினைத்தொகை |
1 |
|
||
12. |
இ.
மணிமேகலை |
1 |
|
||
13. |
அ.
தொடர்நிலைச்செய்யுள் |
1 |
|
||
14. |
ஈ.
பசியும்,வசியும் |
1 |
|
||
15. |
ஈ.
வியங்கோள் வினைமுற்று |
1 |
|
||
பகுதி
– 2 / பிரிவு - 1 |
|||||
16. |
அ. எவை மொழிப்பயன்பாட்டை முழுமையாக்குகின்றன? ஆ. யாருடைய வரலாறு பண்பாட்டுத்தொன்மை வாய்ந்தது? |
1 1 |
|
||
17. |
கலித்தொகை – ஏறுதழுவுதல் புறப்பொருள் வெண்பாமாலை –
எருதுகோள் பள்ளு
– எருதுகட்டி |
2 |
|
||
18. |
1. அலைபேசி 2. கணிப்பொறி 3. தொலை நகல் 4. அட்டை தேய்ப்பி இயந்திரம் 5.
ஆளறி சோதனைக் கருவி |
2 |
|
||
19 |
பந்தலின்
கீழ் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது |
2 |
|
||
20. |
இடம் : கூலவாணிகன் சீத்தலைச்
சாத்தனார் இயற்றிய மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெற்றிருக்கிறது இத்தொடர். பொருள்
: விழாக்கள்
நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும் மன்றங்களிலும் பழைய மணலை மாற்றிப் புது
மணலைப் பரப்புங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. விளக்கம் : மணிமேகலைக் காப்பியத்தில்
முப்பது காதைகளுள் முதல் காதையாக விளங்குவது விழாவறை காதை ஆகும். புகார் நகரில் இருபத்தெட்டு நாள் நடைபெறக்கூடிய இந்திரவிழா தொடங்க
உள்ளது. இந்த அறிவிப்பை யானை மீது அமர்ந்து முரசறைவோன்
அறிவித்தான். விழாக்கள் நிறைந்த இம்மூதூரின் தெருக்களிலும்
மன்றங்களிலும் பழையமணலை மாற்றிப் புதிய மணலைப் பரப்புங்கள் என்று அறிவிக்கிறான். |
2
|
|
||
21
|
பிறர்நாணத்
தக்கது தான்நாணான் ஆயின் அறம்நாணத்
தக்கது உடைத்து |
2
|
|
||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||
22 |
வல்லினம்
மிகும் இடங்களுள் உரியவற்றைச் சான்றுடன் எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
2 |
|
||
23 |
வீணையோடு வந்தாள் – வேற்றுமைத் தொடர் கிளியே பேசு – விளித் தொடர். |
2 |
|
||
24 |
தாவரம்
– பறவை புள் பில்லின் மீது விழுந்தது |
2 |
|
||
25. |
அ. வாழ்க்கை மேடும் பள்ளமும் நிறைந்தது. ஆ. நண்பர்கள் நகமும் , சதையும்
போல இருந்தனர், |
2 |
|
||
26. |
அகல் |
2 |
|
||
27. |
விழிக்கயல்,
சுவையமுது |
2 |
|
||
28.
|
இயவை – வழி சந்தப்பேழை - அழகிய பெட்டி |
2
|
|
||
பகுதி
– 3 பிரிவு - 1 |
|||||
29 |
இந்திய
தேசிய இராணுவத்தில் இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு
செய்யப்பட்டு வான்படைத் தாக்குதலுக்கான சிறப்புப் பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில் உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பப்பட்ட பயிற்சிப்
பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ். |
3
|
|
||
30
|
தமிழக உழவர்கள், தங்களின் உழவு சார்ந்த கருவிகளோடு அறுவடைக்குப் பெரிதும் துணைநின்ற
மாடுகளைப் போற்றி மகிழ்விக்க ஏற்படுத்திய விழாவே மாட்டுப் பொங்கல். அவ்விழாவின்போது, மாடுகளைக் குளிப்பாட்டி, பல வண்ணங்களில் பொட்டிட்டு மூக்கணாங்கயிறு, கழுத்துக்கயிறு,
பிடிகயிறு அனைத்தையும் புதிதாக அணிவிப்பர். கொம்புகளைப்
பிசிறு சீவி, எண்ணெய் தடவி, கழுத்து
மணியாரம் கட்டி, வெள்ளை வேட்டியோ துண்டோ கழுத்தில்
கட்டுவர். பின்னர் பூமாலை அணிவித்துப்
பொங்கலிட்டுத் தம்மோடு உழைப்பில் ஈடுபட்ட மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும்
விதத்தில் தளிகைப் பொங்கலை ஊட்டிவிடுவர். இதன்
தொடர்ச்சியாக வேளாண் குடிகளின் வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த
மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும் மரபாக உருக்கொண்டதே ஏறுதழுவுதலாகும். |
3 |
|
||
31. |
அ.
போர் அறம் என்பது வீரமற்றோர். புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர்
செய்யாமை ஆ.
தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது இ.
பசு, பார்ப்பனர், பெண்கள்,
நோயாளர், புதல்வரைப் பெறாதவர் |
3 |
|
||
பகுதி
– 3 பிரிவு - 2 |
|||||
32 |
# மொட்டைக்கிளையாக நின்று பெருமூச்சுவிடுகிறது பட்டமரம். * தன்னை வெட்டப்படும் ஒருநாள் வருமென்று கவலை அடைந்தது. * உட்கார நிழலும், நறுமணம்
கமழும் மலர்களும் கூரை போன்று விரிந்த இலைகளும் வெந்து கருகி நிறமாறிவிட்டதற்கு வருந்துகிறது. * பசுமையாக இல்லாததால் கட்டை என்னும் பெயர் பெற்று கருகி விட்டது.
இழந்தது. * உடையாக இருந்த மரப்பட்டைகள் கிழிந்ததால் அழகை காலம் மாறும் புயலின்
தாக்கத்தால் துன்பப்பட்டது. |
3 |
|
||
33. |
|
3
|
|
||
34. |
அ. ஒன்றறி வதுவே உற்றறி
வதுவே இரண்டறி வதுவே அதனொடு
நாவே மூன்றறி வதுவேஅவற்றொடு
மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு
கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு
செவியே ஆறறி வதுவே அவற்றொடு
மன னே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே (அல்லது) ஆ.
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக்
கனியேஎன் முத்தமிழே -புத்திக்குள் உண்ணப் படும்தேனே
உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் |
3 |
|
||
பகுதி
– 3 பிரிவு - 3 |
|||||
35 |
பண்பாகு பெயர்:
‘மஞ்சள்
பூசினாள்’ தொழிலாகு பெயர்:
‘வற்றல்
தின்றான்’ |
3 |
|
||
36. |
தன்வினை : வினையின்
பயன் எழுவாயைச் சேருமாயின் அது தன்வினை எனப்படும்.
எ.கா: பந்து
உருண்டது. பிறவினை : வினையின் பயன் எழுவாயை இல்லாமல்
அடையாக வருவது பிறவினை எனப்படும்.
எ.கா. பந்தை
உருட்டினான் |
3 |
|
||
37 |
உவமையணி – உவமை, உவமேயம், உவம உருபு மூன்ரும் வெளிப்பட்டு வருவது |
3 |
|
||
பகுதி
– 4 |
|||||
38 அ. |
முன்னுரை : நாடெல்லாம் நீர் நாடாகச் சோழநாடு திகழ்கிறது. காவிரி நீர்: காவிரி நீர்
மலையிலிருந்து புதிய பூக்களை அடித்துக் கொண்டு வருகிறது. அப்பூக்களில் தேன்
நிறைந்திருப்பதால் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரம் செய்கின்றன. காவிரி நீர்
கால்வாய்களில் பரந்து எங்கும் ஓடுகிறது. களை பறிக்கும் பருவம்: நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதலிலை சுருள் விரிந்தது. அப்பருவத்தைக்
கண்ட உழவர் இதுதான் களை பறிக்கும்
பருவம் என்றனர். காடுகளில் எல்லாம் கழையாகிய கரும்புகள்
உள்ளன. சோலைகள் எங்கும் குழைகளில் மலர் அரும்புகள் உள்ளன.பக்கங்களில் எங்கும்
கரிய குவளை மலர்கள் மலர்ந்துள்ளன. வானவில் : அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர் நிலைகளில் எருமைகள்
வீழ்ந்து மூழ்கும். அதனால், அந்நீர் நிலைகளில் உள்ள வாளை
மீன்கள் துள்ளி எழுந்து அருகில் உள்ள பாக்கு மரங்களின் மீது மாயும்.
இக்காட்சியானது நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில்லைப் போன்று விளங்கும். பொன்மாலைச் சாரல் : நெல்கற்றைகள் போரை மேலேயிருந்து சாயச் செய்வர். பெரிய வண்டிகளைச்
செலுத்தும் கருமையான எருமைக் கூட்டங்கள் வலமாகச் சுற்றிச்சுற்றி மிதிக்கும்
இத்தோற்றமானது கரியமேகங்கள் பெரிய பொன்மாலைச் சாரல் மீது வலமாகச் சுற்றுகின்ற
காட்சி போல உள்ளது. செழித்து வளர்ந்துள்ளவை : சோழ நாட்டில் தென்னை, செருந்தி, நறுமணமுடைய நரந்தம், அரச மரம், கடம்ப மரம், பச்சிலை மரம், குளிர்ந்த
மலரையுடைய குரா மரம், பெரிய அடிப்பாகத்தைக் கொண்ட பனை,
சந்தனம், குளிர்ந்த மலரையுடைய நாகம்,
நீண்ட இலைகளையுடைய வஞ்சி, காஞ்சிமலர்கள்
நிறைந்த கோங்கு முதலியன எங்கெங்கும் செழித்து வளர்ந்துள்ளன. முடிவுரை : காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரித்துரைக்கிறது
பெரியபுராணம். வளங்கெழு திருநாட்டின் சிறப்பை இயற்கை எழிற்கவிதைகளாய்ப் படரச் செய்துள்ளது. |
5 |
|
||
38 |
ஆ. 1. சொக்கநாதருக்குத் தூது சென்ற தமிழ்: மதுரையில்
கோவில் கொண்டுள்ள சொக்கநாதப் பெருமான் மீது விருப்பம் கொண்ட பெண்ணொருத்தி,
தன் அன்பை வெளிப்படுத்தி வருமாறு தூது அனுப்ப, அவன் தேர்தெடுத்தது தமிழ் மொழியைத்தான். 2. தூது செல்வோரின் தகுதி : தூது
செல்பவர் பல்வேறு திறனுடையவராய் இருக்க வேண்டும். அவர் இனிமையாய், இலக்கியச் சுவையோடு, நலமும் அழகும் குறையாமல்
செய்தியைத் தெரிவிப்பவராய் இருத்தல் வேண்டும். தாம் கூற வரும் செய்தியைக்
குற்றம் குறைவின்றித் தெளிவாய் எடுத்துக்கூறும் திறன் படைத்தவராய் இருத்தல்
வேண்டும். அப்போதுதான் தூது சென்றதற்கான பயன் கிடைக்கும். தமிழ்மொழி மேற்கூறிய
சிறப்புகளை உடையது. அத்திறன்களோடு கூடவே, இனிய
பாச்சிறப்பும் பெற்றிருப்பதால் தலைவன் சொக்கநாதப் பெருமானிடம், தூது செல்லும் அனைத்துக் தகுதிகளையும் பெற்றுத் திகழ்கிறது. தமிழ்,
இவற்றைக் கருதியே சொக்கநாதப் பெருமானிடம் தூதாகத் தமிழை
அனுப்புகிறாள், தலைவி. |
5 |
|
||
39 அ. |
வரவேற்பு மடல் இடம்: அரசு உயர்நிலைப்பள்ளி, தணிகைப்போளூர்,இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 , திங்கட்கிழமை "சுத்தம் சோறு போடும்" "கந்தையானாலும் கசக்கிக் கட்டு" "கூழானாலும் குறித்துக் குடி" என்னும்
பழமொழிக்கு ஏற்ப எங்கள் பள்ளி சிறப்பாக அமைந்துள்ளது. தூய்மையே எங்களின் தாரக
மந்திரம். நெகிழிப் பயன்பாடு எங்கள் பள்ளியில் தடைசெய்யப்பட்டுள்ளது. மட்கும்
குப்பை, மட்கா குப்பைகளுக்கு என தனித் தனி தொட்டிகள்
அமைக்கப்பட்டுள்ளன கழிவுகளுக்கும் தனித் தொட்டிகள் உள்ளன இயற்கை உரம் தயாரித்து
எங்கள் பள்ளியில் உள்ள தோட்டங்களைப் பராமரிக்கிறோம். மாவட்டத்தில் சிறந்த
பள்ளியாக எம் பள்ளியைத் தேர்ந்தெடுத்து விருது பெற்றுள்ள இப்பெரு விழாவிற்கு
வருகைதந்து சிறப்பிக்கும் வணக்கத்திற்கும் போற்றுதலுக்குரிய மாவட்டக் கல்வி
அலுவலர் அவர்களே!
நேரிய
பார்வையும், நிமிர்ந்த நன்நடையும் கொண்டவரே! கடமை
உணர்வுடன், உழைப்பைத் தன் உடைமை ஆக்கியவரே! மாவட்டம்
கல்வியில் சிறந்தோங்கிட இராப்பகலாய் உழைத்தவரே! குப்பைகளைப் பக்குவமாய்
பிரித்துப் பயன்படுத்த நல்வழி காட்டிய அன்னப் பறவையே! I
ஏழை
மாணவர், மெல்லக் கற்கும் மாணவர் வாழ்விலும் ஒளி ஏற்றிட,
சிகரம் தொட்டிட சீரிய வழி சமைத்தவரே! எம் மாவட்டக் கல்வி அலுவலரே!
உம்மை எங்கள் பள்ளியின் சார்பில் வருக! வருக! என உளம் மகிழ வரவேற்கிறோம்.
நன்றி.
இவண், இரா மணிமாறன், (மாணவர் செயலர் |
5 |
|
||
39 |
ஆ.
திருத்தணி,
09-09-2023. அன்புள்ள நண்பன்
எழிலனுக்கு, என்
பிறந்தநாளுக்காக நீ எனக்கு ஒரு அனுப்பிய பரிசுப்பொருள் எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க
மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட கருத்துகள், உலகம்
எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள் வியப்பான பதில்களைத் தருகின்றன.
இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள் கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன.
சிறந்த பரிசு அனுப்பியதற்கு நன்றி!!
அன்புடன்,
முகிலன்.
முகவரி: த/பெ மதியரசன், மதுரை. |
5 |
|
||
40 |
அ) திரண்டகருத்து: மையக்கருத்து: இப்பாடலின்
மையக்கருத்து “ஆறு” ஆகும் எதுகை நயம்: செய்யுளில், அடியிலோ, சீரிலோ,
இரண்டாவது எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகை ஆகும். சான்று: வயலிடை கயலிடை மோனை நயம்: செய்யுளில் அடியிலோ சீரிலோ முதல் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது மோனை
ஆகும். சான்று: வயலிடை – வளைந்து அயலுள் – ஆம்பல் இயைபு நயம்: செய்யுளில் அடிதோறும் இறுதி எழுத்தோ, சொல்லோ
இயைந்து வருவது இயைபுத்தொடை ஆகும். சான்று: விளைத்தாய் – விரித்தாய் ஆ) 1. A nation's culture resides in the hearts and in the
soul of its people Mahatma Gandhi நம்
நாட்டினுடைய பண்பாட்டினை மக்கள் அனைவரும் தம் இதயங்களிலும், ஆத்மாவிலும் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். 2. The art of people is a true mirror to their minds
Jawaharlal Nehru மக்களின்
கலை உணர்வே அவர்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி 3. The biggest problem is the lack of love and charity
Mother Teresa அன்பு
செலுத்துதல், தர்மம் செய்தல் இவற்றின் குறைபாடே, மிகப்பெரிய பிரச்சனையாய் உள்ளது. 4. You have to dream before your dreams can come true
A.P.J. Abdul Kalam உங்கள்
களவு நளவாகும் வரை, களவு காணுங்கள். 5. Winners don't do different things; they do things
differently Shiv Khera வெற்றியாளர்கள்
வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை மாறாக ஒவ்வொரு செயலையும் வித்தியாசமாக
செய்கிறார்கள். |
5 |
|
||
41 |
உரிய விடையைப் பிழையின்றி
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
5 |
|
||
42 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்த காட்சி இது அர்த்தமுள்ள காட்சி விழிப்புணர்வுக்கான காட்சி |
5 |
|
||
|
பகுதி
– 5 |
|
|
||
43
அ. |
1. தேசிய
விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டிருக்கும் ஸ்பெயின் நாட்டில்காளையைக் கொன்று
அடக்குபவனே வீரன் அவ்விளையாட்டில் ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் உண்டு. 2. காளையை
அடக்கும் வீரன் வென்றாலும் தோற்றாலும் ஆட்டத்தின் முடிவில் அந்தக் காளை
சிலநாட்டுவிளையாட்டுக்களில் கொல்லப்படுவதும் உண்டு. 3.அது
வன்மத்தையும் போர் வெறியையும் வெளிப்படுத்துவது போல் இருக்கிறது. 4. தமிழகத்தில்
நடைபெறும் ஏறு தழுவுதலில் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தக் கூடாது. 5.நிகழ்வின்
தொடக்கத்திலும்முடிவிலும் காளைகளுக்கு வழிபாடு செய்வர். 6.எவராலும்
அடக்கமுடியாத காளைகள்வெற்றிபெற்றதாகக் கருதப்படும். 7. அன்பையும்
வீரத்தையும் ஒருசேர வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில் காளையைஅரவணைத்து
அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர். |
8 |
|
||
ஆ |
முன்னுரை: இந்திய
தேசிய இராணுவம இந்திய விடுதலைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும். இந்த
அமைப்பின் தூண்களாகத் திகழ்ந்தவர்கண்(ஐபொகள் எனில் மிகையாகாது. நேதாஜி
அவர்களுடன் இணைந்து இந்திய தேசிய இராணுவப் படையில் போராடிய தமிழாகளின் பங்கு
வியந்து போற்றத்தக்கது. தூண்கள்: 1943ம ஆண்டு, நேதாஜி "டெல்லி சலோ" என்ற
முழக்கத்தை முன் வைத்தார். இவரின் முழக்கம் அனைவரின் மனதிலும் பசுமரத்தாணி போல
பதிந்தது. இந்திய தேசிய இராணுவப்படை,பிரித்தானிய அரசை
எதிர்த்த போது தமிழகத்தில் இருந்து பெரும்படையைத் திரட்டி, இந்திய தேசிய இராணுவத்திற்கு வலுசேர்தத பெருமைக்குரிய தமிழர் 'பசும்பொன் முத்துராமலிங்கதேவர்' ஆவார். 'பசும்பொன் முத்துராமலிங்கதேவர்' அவர்களின்
தலைமையில் இருந்த தமிழர்களின் பணியைக்கண்டு வியந்த தில்லான என்பவர், “இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும், ஆதமாவும்
தமிழர்கள் தான" என்றார். அனைவரும் பாராட்டும் விதத்தில் இந்திய தேசிய
இராணுவத்தைத் தாங்கும் தூண்களாகத் தமிழர்கள் திகழ்ந்தனர். இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள்: இந்திய
தேசிய இராணுவததில் ஜான்சி ராணி பெயரில் பெண்கள் படை உருவாக்கப்பட்டது. இதன்
தலைவர் டாகடர் லட்சுமி என்ற தமிழ்ப்பெண் ஆவார். இப்படையில் தமிழ் பெண்கள்
பெருமளவில் பங்கேற்றார்கள். இதில் தலைசிறந்த பெண்தலைவர்களான ஜானகி, இராஜாமணி போன்றோர் வீரமிக்க தமிழ் பெண்களே ஆவர். நேதாஜி அமைத்த தற்காலிக
அரசிலும் கேப்டன லட்சுமி இன்றியமையாப் பொறுப்பு வகிதது பணியாற்றி இந்திய தேசிய
இராணுவத்தின் தூணாக இருந்தார் எனில் மிகையாகாது. இரண்டாம் உலகப்போரில் தமிழர்: இரண்டாம்
உலகப்போரின் போது தமிழ் மக்களை வைத்துப்போராடிய நேதாஜியைக கண்டு ஆங்கிலப் பிரதமா சாச்சில்
கோபம் கொண்டார். “தமிழர்களின் இரத்தம நேதாஜி மூளையில் கட்டியாக
உள்ளது" என்றார் சர்ச்சில், அதற்கு பதில் அளித்த
நேதாஜி, “இந்தத் தமிழினம் தான் ஆங்கிலேயரை அழிக்கும்
என்றார். மரணம் பெரிதன்று: 1943-45 ஆம் ஆண்டுகளில் பதினெட்டு
தமிழ் இளைஞர்கள் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்டனர். தூக்கில் உயிரை விடும்பொழுது
கூட தமிழ் இளைஞர்கள், “வாழ்வின பொருள் தெரிந்தால்தான்
மனிதன் மேல்நிலை அடைவான். நாட்டிற்காக உயிர் நீதத முழுநிலவினைப்போன்ற தியாகிகள்
முன்பு நாங்கள் மெழுகுவாததிதான" என்று கூறி இன்முகத்துடன் உயிர் நீததனர். நேதாஜியின்
பாராட்டு இராணுவத்தில் தமிழர்கள் ஆற்றிய பணியையும் செயத தியாகங்களையும் கண்டு
வியந்த நேதாஜி, “நான் மறுபடியும் பிறந்தால் ஒரு தௌனிந்திய
தமிழனாகப் பிறக்க வேண்டும்” என்றாராம். நேதாஜியே வியந்து பாராட்டும் வண்ணம நம
தமிழரின் இராணுவப்பணி அமைந்திருந்தது. முடிவுரை: தாயக
நலனுக்காக தம் இன்னுயிரை ஈந்த நம் தமிழர்களின் வீரம் போற்றுதலுக்குரியது. தம்
இன்னுயிரைத் தியாகம் செய்த முகம் தெரியாத வீரத்தமிழர்களின் அர்ப்பணிப்பு
உணர்வையும், அஞ்சாத வீரத்தையும், நாட்டுப்பற்றையும்,
என்றென்றும் போற்றுவதோடு, இராணுவ
விராகளையும் அவர்தம் குடும்பத்தினரையும் மதித்துக்காப்பதும், பெற்ற சுதந்திரத்தைப் பேணுவதும், பயங்கரவாத
சக்திகளைத் தடுப்பதும் நம் கடமை |
8 |
|
||
44. அ. |
முன்னுரை : இசை
மொழியைக் கடந்தது. அமைதியின் நாக்காகப் பேசுவது, மனங்களைக் கரைத்து அந்தரவெளியில் உலவச் செய்வது. இசையின்
செவ்வியைத் தலைப்படும் மனமானது, இனம், நாடு என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி அகிலத்தையும் ஆளும் இயல்புடையது.
வித்வானின் வருகையும், அறிமுகமும்
: நாதசுர
வித்வான் மாட்டு வண்டியிலிருந்து இருந்து தன் மகன் தங்கவேலுவும், ஒத்துக்காரரும் வாத்தியங்களைத் தூக்கிக் கொண்டு பின்னாக வர, வக்கீல் வீட்டிற்குள் நுழைந்தார் நாதசுர வித்வான். வக்கீல் வீட்டில் “பிலிப் போல்ஸ்கா
” என்பவர் தலைமையில் மேற்கத்திய சங்கீத குழுவினர் அமர்ந்திருந்தனர்.
வக்கீல் வித்வானிடம் இவர் தான் பிலிப்போல்ஸ்கா. இக்குழுவின் தலைவர் என்று அறிமுகப்படுத்தி, பின் ஒவ்வொருவரையும்
அறிமுகம் செய்து வைத்தார். கீர்த்தனம் தொடங்கினார் : வித்வான் கம்பீரமாக ஓர் ஆலாபனம் செய்து கீர்த்தனம் தொடங்கினார். டையும், கால் சட்டையுமாக சப்பணம் கட்டி அமர்ந்திருந்த
கூட்டம் அசையாது பார்த்துக் கொண்டிருந்தது. போல்ஸ்காவின்
முகத்தில் புன்முறுவல் தவழ்ந்தது. அமிர்த தாரையாகப் பெருக்கெடுத்த
நாதப்பொழிவில் அவன் தன்னை இழந்தான். நாதம் அவனுடைய ஆன்மாவைக்
காணாத லோகத்துக்கும், அனுபவத்துக்கும் இட்டுச்சென்றது.
இந்த அனுபவத்தினை அடைவதற்குப் போல்ஸ்காவுக்கு நாடோ, மொழியோ, இனமோ தடையாய் இல்லை. சாமாராகம் : தஸரிமா…….
மா” என்று ஆரம்பித்த ராகம் கொஞ்சம் –
கொஞ்சமாய் மலர்ந்து, அமைதியான மணம் வீசும் பவழமல்லி
போல் உள்ளத்தில் தோய்ந்தது வக்கீலுக்கு ….. மொழி தெரியாத போல்ஸ்காவைத்
திரும்பிப் பார்த்தார் வக்கீல். அவன் உடல் ராகத்தோடு இசைந்து
அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று உட்கார்ந்திருந்தவன் எழுந்து
விட்டான். சாந்தமுலேகா
: குழந்தையைக் கொஞ்சுவது போல், அந்த அடி கொஞ்சியது.
போல்ஸ்காவின் மெய்சிலிர்த்தது. அவனது தலையும்,
உள்ளமும் ஆன்மாவும் அசைந்து ஊசலிட்டுக் கொண்டிருந்தன அந்த இசை எனக்காக
அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. வக்கீல் மொழி பெயர்த்தல் : தன் உணர்வை போல்ஸ்கா கூற ஆரம்பித்தான். இரைச்சல்,
கூச்சல், அடிதடி, புயல்,
அலை, இடி என ஒரே இரைச்சல். அத்தகு போர்க்களத்தினுள் நான் மட்டும் அமைதியைக் காண்பது போல் உணர்கிறேன்;
காண்கிறேன். இனி இரைச்சலும், சத்தமும், யுத்தமும் என்னைத் தொடாது .இந்த அமைதி எனக்குப் போதும் என்று அவன் உணர்ந்து கூறிய செய்தியை மொழி பெயர்த்தார்
வக்கீல். வித்வானின் திகைப்பு : அமைதியா , அப்படியா தோணித்து அவருக்கு? நான் வார்த்தையைக் கூடச் சொல்லவில்லையே! பாராட்டல் :
இசையை வாசித்த இந்தக் கையைக் கொடுங்கள். கடவுள் நர்த்தனமாடுகிற
இந்த விரல்களைக் கொடுங்கள். நான் கடவுளை முகர்ந்து முத்தமிடுகிறேன்
என்று வித்வானின் விரலைப் பிடித்து உதட்டில் வைத்துக் கொண்டார் போல்ஸ்கா முடிவுரை : நாடு,
மொழி, இனம் கடந்து வார்த்தைகள் அறிய மொழி தெரியவில்லையெனினும்
இசை உணர்த்தும் மெய்ப்பொருளை, அமைதியைப் போல்ஸ்கா உணர்ந்து
விட்டான். இசை சொற்களைப் புறக்கணித்துத் தனக்குள் இருக்கும்
செய்தியை எந்த மொழி பேசும் மனித மனங்களுக்குள்ளும் செலுத்தி விடும். இசையை உணர, அனுபவிக்க அதன் மெய்ப்பொருள் அறிய நாடு, மொழி,
இனம் தேவையில்லை. |
8 |
|
||
ஆ |
முன்னுரை : குடிநீரற்ற ஊரின் நிலை : பல்லாண்டுகளுக்கு முன் உலகம்மன் கோயில் கிணறு மட்டும் கொஞ்சம் தண்ணீர் தந்து
கொண்டிருந்தது. இப்போது அதுவும் தூர்ந்து பாழுங்கிணறாய் மாறி
விட்டது. எல்லாமே பூண்டற்று போய் விட்டன. எங்காவது கிணறு தோண்டினாலும் கடல் தண்ணீரைவிட ஒரு மடங்கு கூடுதலாக உப்பு,
கிணற்று நீரிலே உப்பளம் போடலாம்; குடலை வாய்க்குக்
கொண்டு வரும் உவர்ப்பாகவே இருந்தது. இதுவே ‘தண்ணீர்’ கதையில் இடம் பெற்றுள்ள ஊரின் நிலை. இரயிலின் வருகையும் மக்கள் ஓட்டமும் : அந்த இரயிலில் வரும் நீருக்காக ஓடுவர். ஒருவரையொருவர்
இடித்தும், பிடித்தும் முறைத்தும் முந்திக் கொண்டு இடம் பிடிக்க
ஓடுவார்கள். இந்திராவின் கனவு : இந்திரா தண்ணீர் பிடித்தல் : இந்திரா எங்கே : தாயின் துயரம் : முடிவுரை : |
8 |
|
||
45
அ. |
தமிழ் இலக்கிய மன்ற விழா இடம் : அரசு உயர்நிலைப் பள்ளி, தணிகைப்போளூர், இராணிப்பேட்டை மாவட்டம். நாள் : 11-09-2023 இராணிப்பேட்டை
மாவட்டம், தணிகைப்போளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்
இலக்கிய மன்றக் கூட்டம் பிற்பகல் 3.00 மணியளவில் தொடங்கி
நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் மா.செயப்பிரகாசு தலைமை தாங்கினார். மாவட்ட அளவில் தமிழ்ப்
பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற 10.ஆம் வகுப்பு மாணவி
வா.நிறைமதி வரவேற்புரை நிகழ்த்தினார். இலக்கியங்களில்
எவ்வாறு இன்பச்சுவை அமைந்து இருக்கிறது என்பது பற்றிப் பேசினார் . தலைமை
ஆசிரியர் தலைமை உரையில் இலக்கியத்தில் பாடுபொருள் எவ்வாறெல்லாம் காலத்திற்கேற்றாற்
போல் மாறி வந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிப் பேசினார். சிறப்பு
விருந்தினர் திண்டுக்கல் ஐ. லியோனி அவர்கள், ஒன்பான் சுவைகளை
சிறப்புச் சொற்பொழிவாற்றி நகைச்சுவை உணர்வோடு "இலக்கியத்தில் இன்பச்சுவை”
எனும் தலைப்பில் இலக்கிய விருந்து படைத்தார். நிறைவாக,
இலக்கியமன்றச் செயலர் 9.ஆம் வகுப்பு மாணவி
அன்புச் செல்வி நன்றியுரை ஆற்றினார். |
8 |
|
||
45.
ஆ. |
தலைப்பு : உழவெனும் உன்னதம் முன்னுரை: ”ஏர் முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே” என்ற திரைப்பாடல் உயர்த்திக்கூறுவது
உழவுத்தொழிலைத்தான். தன் வயிற்றுப் பசி போக்க தொழில்களை
மேற்கொள்ளும் மனிதர்களிடையே, பிறர் பசி போக்க தொழில்
புரிவோர் உழவர். இவர்தம் உயரிய பணி குறித்து இக்கட்டுரையில் காண்போம். உழவுத் தொழிலும்
உழவர்களும்: ”நித்தமும் உழவே அவன் நினைப்பு நெற்றி வியர்வை சிந்திட அவன்
உழைப்பு” உழவுத்தொழில் உழுதல்,
சமன் செய்தல், விதைத்தல், நடுதல், நீர் பாய்ச்சுதல்,களை
யெடுத்தல், பாதுகாத்தல்,அறுவடை
செய்தல் எனும் பல கூறுகளை உள்ளடக்கியது. களமர், உழவர்,
உழத்தியர், கடையர், கடைசியர்
போன்றோரின் உழைப்பால் உழவுத் தொழில் சிறப்புற்று இருக்கிறது. தமிழர் வாழ்வில் உழவு ”தமிழனின் உதிரத்தில் கலந்தது உழவு உழவன் இன்றி உலகோர்க்கு ஏது
உணவு?” பழந்தமிழகத்தில் மக்களின்
தலையாய தொழிலாக உழவுத்தொழில் விளங்கியது உழவும் உழவு சார்ந்த தொழில்களும்
மக்களின் வாழ்க்கைத் தரத்தை நிர்ணயித்தன. உழவர்கள் சமுதாயத்தில்
மதிப்புள்ளவர்களாக வாழ்ந்தனர். மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் ஆடுமாடுகளை
மேய்த்தும் குறிஞ்சி, முல்லை நிலங்களில் வாழ்ந்த காலத்தில்
அந்நிலங்களில் வரகு சாமை, தினை முதலியவற்றையும், உளுந்து, பயறு, அவரை
முதலியவற்றையும் விளைவித்தான். மருதநிலத்தில் வயல்களில் விளைந்த நெற்பயிரை
பாதுகாத்தலில் உழவர்களில் ஆடவரும் மகளிரும் ஈடுபட்டனர். இலக்கியங்களில் உழவுத்
தொழில்: ”உழவர்கள் உழுத
உழவினை நல்லேர் நடந்த நகைசால் விளை வயல்' என்கிறது சங்க இலக்கியம்.
'நெல்மலிந்த மனை பொன் மலிந்த மறுகு' என்கிறது
புறநானூறு.'ஏரின் உழாஅர் உழவர்' என்கிறது
திருக்குறள். அதோடன்றி சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் உழவுத்தொழில் பற்றிய
குறிப்புகள் மிகுதியாகக் காணப்படுகின்றன உழவின் சிறப்பு: உழவு அனைத்துத்
தொழில்களுக்கும் மையமாக விளங்குகிறது.தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும்
காப்பாற்ற உழவுத் தொழிலை அறத்துடன் செய்தனர் உழவர். சேமிப்பின் அவசியத்தை
தானியக் குதிர்கள் மூலம் அறியலாம். நாட்டின் பொருளாதார வளர்ச்சியில்
பெரும்பங்காற்றி வரும் இத்தொழிலே, உலகில் நடைபெறும்
அனைத்து தொழில்களுக்கும் தலைமைத் தொழிலாகும்.' உழுவார்
உலகத்தார்க்கு அச்சாணி' எனும் வள்ளுவர் வழி இதனை அறியலாம். உழவுத் தொழிலுக்கு வந்தனை
செய்வோம்: உழவர் சேற்றில் கால்
வைத்தால்தான் உலகமக்கள் சோற்றில் கை வைக்க முடியும். 'உழுதுண்டு
வாழ்வாரே வாழ்வார்' எனும் சிறப்புப் பெற்று, மழை வெயில் பாராமல் உழைக்கின்ற உழவரையும் உழவுத் தொழிலையும் நாம்
வணங்கிப் போற்றினால் இவ்வுலகம் நிலைபெறும். முடிவுரை: 'சுழன்றும் ஏர்பின்னது
உலகம்' என்கிறார் வள்ளுவர். 'கடவுள்
எனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி' என்கிறார்
மருதகாசி. உழவையும், உழவரையும் அழிவிலிருந்து காப்பது நம்
அனைவருடைய கடமையாகும். இயற்கையை வணங்குவோம்; உழவினைப்
போற்றுவோம். |
8 |
|
||