10 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JANUARY 1 ST WEEK(03-01-22 TO 08-01-22 )

10.ஆம் வகுப்பு-மாதிரி பாடத்திட்டம் 



வகுப்பு: 10.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: விரிவானம் - மங்கையராய்ப் பிறப்பதற்கே

                         கற்கண்டு(இலக்கணம்) -புறப்பொருள் இலக்கணம்

நாள்: 03-01-22  முதல் 08-01-22  வரை

பொது நோக்கம்:

@  நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைக் கலைநிகழ்ச்சி விவரிப்பாக வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்.

பொருளிலக்கணத்தில் புறப்பொருள் பெறும் இடமறிந்து,அதனைச் செய்யுளில் கண்டறியும் திறன்பெறுதல்.

சிறப்பு நோக்கம்:

சிறந்த பெண் ஆளுமைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்

இசைத்துறையில் சாதனை புரிந்த எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல்.

#  நாட்டியப் பெண்மணி பாலசரசுவதி அவர்கள் அவரது குறிக்கோளை அடைய எவ்வளவு உழைத்தார் என்பதைப் புரிந்து கொள்ளுதல்.

#எழுத்தாளர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை இராஜம் கிருஷ்ணன் மூலம் அறிதல்.

பெண்கள் எவ்வளவு ஆற்றல் பெற்றவர்கள் என்பதை கிருஷ்ணம்மாள் மூலமும்,மதுரை சின்னப்பிள்ளை மூலமும் தெரிந்து கொள்ளுதல்.

பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)

Ø  “உங்களுடைய உறவினர்களில் பெண்கள் யாரேனும் உயர்பதவிகளில் உள்ளார்களா?” என மாணவர்களிடம் கேட்டு,அவர்கள் கூறும் பதிலிலிருந்து அவர்கள் கல்வியால் எங்ஙனம் மேன்மை அடைந்துள்ளார்கள் என்பதை விளக்கி,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துதல்.

Ø  பாகுபலி திரைப்படக்காட்சியைப் பற்றிக்கூறி புறத்திணைகளை அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்:

      வலையொளிப்பதிவுகள்,உயர்தொழில்நுட்ப ஆய்வகம்,பாடநூல்,சுண்ணக்கட்டி, கரும்பலகை,கல்வியிற் சிறந்த பெண்களின் புகைப்படங்கள் முதலியன.

பாடப்பொருள் சுருக்கம்:

       மங்கையராய்ப்பிறப்பதற்கே:

எம்.எஸ்.சுப்புலட்சுமி-தனது இசைத் திறமையால் இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருதைப்பெற்றவர்.

பால சரசுவதி-பரத நாட்டியத்தால் உலகப்புகழ் பெற்றவர்.

@  இராஜம் கிருட்டிணன் – தனது எழுத்தாற்றலால் மாபெரும் புகழடைந்தவர்.

@  கிருட்டிணம்மாள் செகநாதன் காந்தியடிகளின் பல விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர்.

@  மதுரை சின்னப்பிள்ளை- படிப்பறிவே இல்லாமல் பல பெண்களின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்தவர்.

      புறப்பொருள் இலக்கணம்:

ü  வெட்சி-நிரை கவர்தல்

ü  கரந்தை-நிரை மீட்டல்

ü  வஞ்சி -மண்ணாசை கருதி போருக்குச்செல்லல்

ü  காஞ்சி-எதிர்த்துப்போரிடுதல்

ü  நொச்சி-மதில் காத்தல்

ü  உழிஞை-மதில் வளைத்தல்

ü  தும்பை- இரு தரப்பும் களத்தில் போரிடல்

ü  வாகை-வெற்றி பெறுதல்

ü  பாடாண்-வெற்றி பெற்ற மன்னனைப் புகழ்ந்து பாடுவது

ü  பொதுவியல்-முதல் 9 திணைகளின் பொதுவான செய்திகள்

ü  கைக்கிளை-ஒருதலைக்காமம்

ü  பெருந்திணை-பொருந்தாக்காமம்

ஆசிரியர் செயல்பாடு:

§  நிகழ்காலச்சான்றுகள் மூலம் பெண்களின் ஆளுமையைப் பற்றி விளக்க முற்படுதல்

§  பாடத்தில் இடம்பெற்ற பெண் ஆளுமைகள் குறித்த காணொளிகளைக் காண்பித்தல்

§  வில்லுப்பாட்டு வடிவில் பாடப்பகுதி இடம்பெற்றுள்ளதால்,வகுப்பறையில் வில்லுப்பாட்டு வடிவிலேயே பாடத்தைக் கற்பிக்க ஏற்பாடு செய்தல்.

§  புறப்பொருள் திணைகளைக் கதை வடிவில் கூறி விளக்குதல்.

மாணவர் செயல்பாடு:

Ø  பெண்ணாற்றல் உலகிலேயே வலிமையானது என்பதை உணர்தல்.

Ø  ஏட்டுக்கல்வியின் மூலம் மட்டுமின்றி,தங்களிடமுள்ள தனித்திறமைகள் மூலமும் உயர்நிலையை அடையமுடியும் எனும் நம்பிக்கை புரிந்து கொளல்

Ø  பண்டைய புற வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

கருத்துரு வரைபடம்:

மங்கையராய்ப் பிறப்பதற்கே


வலுவூட்டல்:

         விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  .நா.அவையில் பாடிய இசைக்கலைஞர் யார்?

Ø  தேசிய கீதத்துக்கு நாட்டியமாடிய நடனக்கலைஞர் யார்?

Ø  நாட்டின் பிரதமரே காலில் விழுந்து வணங்கிய பெண்மணி யார்?

Ø  ஆநிரை பற்றிய திணைகள் யாவை?

Ø  மதிற்போர் பற்றிய திணைகள் யாவை?

Ø  பொதுவியல் திணை என்பது யாது?

தொடர்பணி:

#      மங்கையராய்ப் பிறப்பதற்கே என்ற துணைப்பாடப்பகுதியை கட்டுரையாக எழுதிவரச்செய்தல்.

#     புறப்பொருள் இலக்கணத்தை மாணவர்கள் புரிந்து கொண்டவாறு அவர்களது சொந்த நடையில் எழுதிவரச்செய்தல்

 







கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை