9. ஆம் வகுப்பு-மாதிரி பாடத்திட்டம்
வகுப்பு: 9.ஆம்
வகுப்பு
பாடம்: தமிழ்
தலைப்பு: கவிதைப்பேழை-இராவண
காவியம்
கவிதைப்பேழை -நாச்சியார் திருமொழி
நாள்: 03-01-22 TO 08-01-22வரை (ஜனவரி முதல் வாரம்)
பொது
நோக்கம்:
@ புதியன சிந்தித்துக் கவிதை படைக்கும் திறன்பெறுதல்.
@ இலக்கியம் காட்டும் ஐவகை நிலங்களின் அழகை நுகர்ந்து அவற்றை விவரித்து எழுதுதல்
சிறப்பு நோக்கம்:
@ தமிழ் இலக்கியத் திரையில் மிகுதியான எழிலோவியங்களைச் சொல்லோவியங்களாகப் புலவர்கள் தீட்டி வைத்துள்ளனர். அவற்றில் சில காட்சிகளைக் கண்டு இன்புறுதல்
@ இலக்கியச்
சொல்லாடல்களை இரசித்து மகிழ்தல்
@ அருஞ்சொற்களின்
பொருளறிதல்
@ செய்யுளில்
பொதிந்துள்ள இலக்கணக்கூறுகளை அறிதல்.
@ கற்பனை,அழகியல்
இரண்டுமே கவிதைக்கு முக்கியம் என உணர்தல்
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø
எந்தெந்த
வகையான நிலப்பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள் என்ற வினாவை மாணவர்களிடம் கேட்டு,அதற்கான
விளக்கத்தை ஆசிரியரும் கொடுத்து,அதன் மூலம் பாட நோக்கத்தை உணர்த்தி மாணவர்களுக்கு ஆர்வத்தை
ஏற்படுத்துதல்.
Ø
இன்றைய
திருமணநிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதைக்கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி,
கரும்பலகை முதலியன.
பாடப்பொருள் சுருக்கம்:
இராவண காவியம்:
# இயற்கைக்காட்சியினைப் பூக்கள் நிறைந்த மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் குரங்கினம் மிரட்சியுடன் பார்க்கும்.
# எல்லா இடங்களிலும் உள்ள பொருள்கள் மணம்கமழ்ந்து காணப்பட்டன
# முக்குழல் இசையால் மேயும் பசுக் கூட்டங்களை ஒன்று சேர்த்தனர்.
# கதிரடிக்கும் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு மான்கள் அஞ்சி ஓடும்.
# பாலைக்காய்
வெடிக்கும் ஓசையைக் கேட்ட பருந்துகள் அச்சத்துடன் பறந்தோடின.
# வளம் நிறைந்த மருதநில வயலில் காஞ்சி,
வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.
# பவளங்களையும் நல் இயல்பு தோன்றும் ஒளி முத்துகளையும் நெய்தல் நிலத்தவ ர் கடற்கரையி ல் கொண்டுவந்து குவிப்பர்.
நாச்சியார் திருமொழி
# ”ஆடும் இளம் பெண்கள், கைகளில் விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர்கொண்டு அழைக்கிறார்கள்.கண்ணன் பாதுகைகளை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்”.
# கண்ணன்,
முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ்,
என்னைத் திருமணம் செய்து கொள்கிறான்.
# இக்காட்சியைக் கனவில் கண்டதாக ஆண்டாள் கூறுகிறாள்.
ஆசிரியர் செயல்பாடு:
§
தற்காலத்தில்
நில அமைப்பு எவ்வாறு உள்ளது என்பதைப்பற்றி விளக்க முற்படுதல்
§
ஐவகை
நிலங்கள் இன்றளவில் எவ்வாறெல்லாம் மாற்றம் பெற்றுள்ளன என்பது குறித்த காணொளிகளைக் காண்பித்தல்.
§
தற்கால
திருமணங்களில் நடைபெறும் நிகழ்வுகளை விளக்குதல்.
§
இலக்கணக்குறிப்பு,பகுபத
உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
மாணவர் செயல்பாடு:
Ø பண்டைய
தமிழரின் வாழ்வும்,அவர்கள் வாழ்ந்த நிலத்தின் அமைப்பும் எவ்வாறு இருந்தது என்பதை உணர்தல்.
Ø தங்களுடைய
கற்பனை கலந்து கவிதை புனையும் ஆற்றலைப் பெறுதல்.
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
கருத்துரு வரைபடம்
இராவண காவியம்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல்
குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை மேற்கொள்ளல்.
மதிப்பீடு:
Ø இராவண காவியத்தை இயற்றியவர் யார்?
Ø மலையும்,மலை சார்ந்த பகுதியும் எவ்வாறு அழைக்கப்படும்?
Ø நெய்தல் என்பது எந்நிலத்தைக் குறிக்கும்?
Ø பன்னிரு ஆழ்வார்கள் வரிசையில் இடம்பெற்ற ஒரே பெண்
யார்?
Ø நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார்?
Ø தற்போது பெண்ணின் திருமண வயது என்ன?
தொடர்பணி:
·
பாடப்பகுதியில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கான
விடைகளை எழுதிவரச்செய்தல்.