6.ஆம் வகுப்பு-தமிழ்
நாள் : 28-02-2022 முதல் 05-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச் – முதல் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : பசிப்பிணி
போக்கிய பாவை
![]() |
Ø பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை
வளர்த்தல்
உட்பொருள் :
Ø தனி மனிதனுக்கு உணவு அளிப்பது உயிர்
கொடுப்பதற்கு சமம். அதுவே அறசிந்தனை.
Ø மணிமேகலை, பல்லவத்தீவு
நாடகம் வாயிலாக அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø பிறர் பசியைப் போக்கும் உயர் சிந்தனையை
வளர்த்தல்.
ஆர்வமூட்டல் :
Ø நீங்கள் உட்கொள்ளும்
உணவுகள் யாவை?
Ø உலகில் சிறந்த
தானமாக கருதப்படுவது எது?
Ø பசியின் கொடுமையை
சில காணொளிக் காட்சிகள் கொண்டு காண்பித்து பாடத்தினை ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø
நாடகப்பாங்கில்
அமைந்த பாடப்பொருளினை மாணவர்கள் பங்கேற்றல் கற்றல் முறையில் படித்தல்
Ø
நிறுத்தற்
குறி அறிந்து குரலில் ஏற்றத்தாழ்வுக் கொண்டுப் படித்தல்.
Ø
புதிய
வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø
புதிய
சொற்களின் பொருளை அகராதிக் கொண்டு அறிதல்.
நினைவு வரைபடம் :
பசிப்பிணி போக்கிய பாவை
தொகுத்து வழங்குதல் :
பசிப்பிணி
போக்கிய பாவை
Ø கதை
மாந்தர் : மணிமேகலை, தீவதிலகை
Ø இடம்
: மணி பல்லவத் தீவு
Ø கோமுகி
: கோ – பசு , முகி – முகம், பசுமுகம் கொண்ட பொய்கை
Ø வைகாசித் திங்கள் முழு
நிலவு நாளில் இப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன்
கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும்.
Ø அமுத
சுரபி சிறப்பு : அந்தப்
பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும்.
அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
Ø ஏ ழை மக்களின் பசியைப்
போக்குவதே மேலான அறம் . உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன்
Ø மணிமேகலை
வேண்டுகோள் : பெற்றோரை
மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல்
போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும்.
வலுவூட்டல் :
Ø மாணவர்களை பங்கேற்று நடிக்க வைத்து அதன் வழியாக அறச்சிந்தனையை மாணவர்களுக்கு ஊட்டி பாடப்பொருளை வலுவூட்டல்.
மதிப்பீடு :
Ø
கோமுகி
என்பதன் பொருள் யாது?
Ø
மணிமேகலைக்கு
கிடைத்த பாத்திரம் யாது?
Ø
அமுத
சுரபி பாத்திரத்தின் பயன் யாது?
Ø
சிறையிலிருப்போருக்கு மணிமேகலை விடுக்கும்
வேண்டுகோள் யாது?
Ø
அமுத சுரபி பாத்திரம் எப்போது கிடைக்கும்?
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில்
உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø மற்றவர்களுக்கு உணவளிக்கும் அறச்சிந்தனையை வளர்த்தல்.
தொடர் பணி :
Ø பசிப்பிணி போக்கிய
பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு