கற்றல் விளைவுகள்
குழந்தைகள் பள்ளிக்கு வரும் பொழுது அவர்களது மொழி அனுபவங்கள் மற்றும் உலகைப் பார்ப்பதில் அவருடைய அணுகுமுறை அல்லது பார்வை உள்ளிட்ட பலவற்றை சமூகத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகின்றனர்.குழந்தைகள் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப் புறத்தில் இருந்து தங்களுடன் பள்ளிக்குக் கொண்டுவரும் அனுபவங்கள் மிகவும் வளமானவை. இம்மொழியியல் மூலதனம் மொழி கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தப்பட வேண்டும். முதன் முதலாகப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் பல்வேறு சொற்களின் பொருளையும் விளைவுகளையும் அறிந்திருக்கின்றனர்.
படித்தல் என்னும் செயல் கற்பித்தல் செயல்முறையின் போது, அவர்களுக்கு பொருண்மை விளங்கக்கூடிய பாடப்பொருளைக் கொண்டு தொடங்குவதுடன் சில குறிப்பிட்ட நோக்கங்களை உடையதாகவும் இருத்தல் வேண்டும்.அது அவர்களது கற்றலிலும்,நடத்தையிலும் குறிப்பிட்ட சில மாற்றங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்த வேண்டும். இதையே கற்றல் விளைவு என்பர்.புதிய கல்வியாண்டு தொடங்கப்பட உள்ள நிலையில்,கற்றல் விளைவுகள் குறித்த புரிதலைப் புதுப்பிக்க வேண்டியுள்ளது.இங்கே கற்றல் விளைவு பயிற்சிக்கு அவசியமான சில பதிவுகள் PDF வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.