9 TH STD TAMIL -ONEWORD QUESTION BANK WITH ANSWERS(UNIT-5)

 9.ஆம் வகுப்பு-தமிழ்-

ஒருமதிப்பெண் வினா விடைகள்


          வினாக்கள் - இயல் - 5

 



1.ஹண்டர் குழு முதன்முதலில் பெண்

கல்விக்குப் பரிந்துரை செய்த ஆண்டு

அ.1804

ஆ.1882

இ.1888

ஈ.1898


விடை: ஆ


2. எவர் இருவர் முதன் முதலாகப் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கிவைத்தனர்

அ.முத்துலெட்சுமி, மூவலூர் இராமாமிர்தம்

ஆ.பண்டிதரமாபாய், ஜோதிராவ் பூலே

இ.பண்டிதரமாபாய், சாவித்திரிபாய் பூலே

ஈ.ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே


விடை: ஈ


3. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?

அ.முத்துலெட்சுமி

ஆ.மலாலா

இ.சாவித்திரிபாய் பூலே

ஈ.நீலாம்பிகை அம்மையார்


விடை: இ


4. சாவித்திரிபாய் பூலே எந்த ஆண்டு பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினர்

அ.1848

ஆ.1847

இ.1845

ஈ.1888


விடை: அ


5.கோத்தாரிக் கல்வி குழு எந்த ஆண்டில் மகளிர் கல்வியை வலியுறுத்தியது?

அ.1974

ஆ.1984

இ.1964

ஈ.1954


விடை: இ


6. ______ என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று

அ.உயிர்

ஆ.நிலம்

இ.பெண்

ஈ.வாழ்க்கை


விடை: ஈ


7. ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம்?

அ.கன்னிமாரா நூலகம்

ஆ.நடுவண் நூலகம்

இ.தேசிய நூலகம்

ஈ.சரசுவதி மாகல் நூலகம்


விடை: ஈ


8. இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் எங்கு பாதுகாக்கப்பட்டுள்ளன

அ.சரசுவதி மாகல் நூலகம்

ஆ.தேசிய நூலகம்

இ.கின்னிமாரா நூலகம்

ஈ.நடுவண் நூலகம்


விடை: அ


9. ஓகார இடைச்சொல் எத்தனை பொருளில் வரும்

அ. 2

ஆ.3

இ.5

ஈ.8


விடை: ஈ


10. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?

அ. பண்டித ரமாபாய் 

ஆ.முத்துலட்சுமி அம்மையார் இ.சாவித்திரிபாய் பூலே 

ஈ.நீலாம்பிகை அம்மையார்


விடை: ஆ


11. மறைமலை அடிகளின் மகள் யார்?

அ. ஈ.வெ.ரா. நாகம்மை

ஆ. சிவகாமி அம்மையார்

இ. நீலாம்பிகை அம்மையார்

ஈ. சாவித்திரிபாய் பூலே


விடை: இ


12. குழந்தை திருமணத்தை எதிர்த்து சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?

அ. 1910

ஆ. 1915

இ. 1929

ஈ. 1925


விடை: இ


13. ஆக்கல் - இலக்கணக் குறிப்பு எழுதுக

அ. உரிச்சொல் தொடர்

ஆ. உவமை உருபு

இ. தொழிற் பெயர்

ஈ. உம்மைத்தொகை


விடை: இ



15. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எது?

அ. தாவா

ஆ. பூவாது

இ. மூவாது

ஈ. விதையாமை


விடை: அ


16. சிறுபஞ்சமூலம் என்பது எத்தனை சிறிய வேர்கள் என்பது இதன் பொருள்?

அ. 1

ஆ. 2

இ. 4

ஈ. 5


விடை: ஈ


17. 11வது வயதில் கவிதை எழுதி "பாரதி" எனும் பட்டம் பெற்றவர்?

அ. வள்ளுவர்

ஆ. காந்தியடிகள்

இ. பாரதியார்

ஈ. மாவீரன் அலெக்சாண்டர்


விடை: இ


18. உலகமெங்கும் பயணம் செய்யும் பட்டறிவைத் தருவது எது?

அ. அறிவியல்

ஆ. இசை

இ. நூலகம்

ஈ. வரலாறு


விடை:இ


19. ஒரு நாட்டை உலகம் மதிப்பது எதனால்?

அ. மலை கண்டு

ஆ. நீதி கண்டு

இ. மாநிதி கண்டு

ஈ. மனவளம் கண்டு


விடை:ஈ


20. எந்த ஆண்டு அறிஞர் அண்ணா உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது?

அ. 2010

ஆ. 2007

இ. 2005

ஈ. 2009


விடை: ஈ


21. அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு உருவானது?

அ. 2006

ஆ. 2012

இ. 2010

ஈ. 2004


விடை: இ


22. எதற்கு முதலிடம் தர வேண்டும் என்று அண்ணா கூறுகிறார்?

அ. அலங்கார பொருள்

ஆ. போக  பொருள்

இ. புத்தகசாலை

ஈ. பீரோக்கள்


விடை: இ


23. எதை அமைத்துக்கொண்டால் நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும் என்று அண்ணா கூறுகிறார்?

அ. பூகோள ஏடுகள்

ஆ. சரித ஏடுகள்

இ. வீட்டிற்கோர் திருக்குறள்

ஈ. வீட்டிற்கோர் புத்தகச்சாலை


விடை: ஈ


24. அண்ணாவை எவ்வாறு அழைத்தனர்?

அ. பேச்சாளர்

ஆ. அறிவாளர்

இ. தென்னகத்து பெர்னாட்ஷா

ஈ. எழுத்தாளர்


விடை: இ


25. தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எது?

அ. சரஸ்வதி மகால் நூலகம்

ஆ. நடுவன் நூலகம்

இ. தேசிய நூலகம்

ஈ. கன்னிமாரா நூலகம்


விடை: ஈ


26. உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையை தாங்கி நிற்பது எது?

அ. தேசிய நூலகம்

ஆ. லைப்ரரி ஆப் காங்கிரஸ்

இ. நடுவன் நூலகம்

ஈ. கன்னிமாரா நூலகம்


விடை: ஆ


27. தேசிய நூலக நாள் எது?

அ. ஆகஸ்ட் 1

ஆ. மே 5

இ. ஏப்ரல் 4

ஈ. ஆகஸ்ட் 9


விடை: ஈ


28. சாகித்திய அகாதமி விருது பெற்ற நாடக நூல் எது?

அ. பாண்டியன் பரிசு

ஆ. குடும்ப விளக்கு

இ. அழகின் சிரிப்பு

ஈ. பிசிராந்தையார்


விடை: ஈ


29. இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் யார்?

அ. அறிஞர் அண்ணா

ஆ. காமராஜர்

இ. காந்தியடிகள்

ஈ. ஜவஹர்லால் நேரு


விடை: அ


30. சென்னை மாகாணத்தை "தமிழ்நாடு" என்று மாற்றியவர் யார்?

அ. காமராஜர்

ஆ. காந்தியடிகள்

இ. எம்.ஜி.ஆர்

ஈ. அறிஞர் அண்ணா


விடை:ஈ


31. இந்திய நூலகவியலின் தந்தை யார்?

அ. சீர்காழி இரா. அரங்கநாதன்

ஆ. காமராஜர்

இ. காந்தியடிகள்

ஈ. அறிஞர் அண்ணா


விடை:அ


32. சாகித்திய அகாதமி விருது பெற்ற சிற்பியன கவிதை நூல் எது?

அ. ஒரு கிராமத்து நதி

ஆ. கருப்பு மலர்கள்

இ. கிழவனும் கடலும்

ஈ. தண்ணீர் தண்ணீர்


விடை: அ


33. நா. காமராஜரின் கவிதை நூல் எது?

அ.கருப்பு மலர்கள்

ஆ.ஒரு கிராமத்து நதி

இ.கிழவனும் கடலும்

ஈ.தண்ணீர் தண்ணீர்


விடை: அ


34. எஸ் ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் எது?

அ. சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்

ஆ. தண்ணீர் தண்ணீர்

இ. கிழவனும் கடலும்

ஈ. ஒரு கிராமத்து நதி


விடை: அ


35. எந்த சொற்கள் தமிழில் மிகுதியாக இல்லை?

அ. பெயர்ச்சொற்கள்

ஆ. இடைச்சொற்கள்

இ. வினைச்சொற்கள்

ஈ.. உரிச்சொற்கள்


விடை: ஆ


36. இராஜேஸ்வரி அம்மையார் எந்த கல்லூரியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றினார்

அ. அரசு உயர்நிலைப்பள்ளி

ஆ. ராணி மேரி கல்லூரி

இ. ஜெயா கல்லூரி

ஈ. அரசு கல்லூரி


விடை: ஆ


37. பாகிஸ்தானில் பெண் கல்வி வேண்டுமென போராட்டக்களத்தில் இறங்கியபோது மலாலா வயது

அ. 10

ஆ. 8

இ. 12

ஈ. 20


விடை: இ


38.சங்ககாலப் பெண்பாற் புலவர் யார்?

அ.ஆதிமந்தியார் 

ஆ.முத்துலெட்சுமி

இ.மூவலூர் இராமாமிர்தம் 

ஈ.ஆண்டாள்


விடை:அ


39. மின்னாள் என்பதன் பொருள் யாது?

அ.உலகம்

ஆ.பெரியகல்

இ. ஒளிரமாட்டாள்

ஈ. போன்றவளை


விடை: இ


40. கல்வியறிவு இல்லாத பெண்கள் எதை போன்றவர்கள்?

அ.பெரியகடல் 

ஆ.உலகம்

இ. மின்னல்போல்

ஈ. பண்படாத நிலம்


விடை: ஈ


41. பாரதிதாசனின் கவிதைகள் அனைத்தும் ______ என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன

அ. பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்

ஆ. பாவேந்தர் கவிதைகள்

இ. பாரதிதாசன் கவிதைகள்

ஈ. கவிதைகள்


விடை: அ


42. பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது

அ. பாண்டியன் பரிசு

ஆ. அழகின் சிரிப்பு

இ. குடும்ப விளக்கு

ஈ. பிசிராந்தையார்


விடை: ஈ


43. தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து எந்த நூல்கள் தோன்றின

அ. சிறுபஞ்சமூலம்

ஆ. நீதி நூல்கள்

இ. பதினெண்கீழ்க்கணக்கு

ஈ. கண்டங்கத்திரி


விடை: ஆ


44. வீக்டர் ஹியூகோ எந்த வயதில் பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத்  தமது கவிதைகளை எழுதியனுப்பினார்

அ. 13

ஆ. 15

இ. 16

ஈ. 14


விடை: ஆ


45. பாரதிதாசன் இயற்றிய பிசிராந்தையார் நாடக நூலுக்கு எந்த விருது வழங்கப்பட்டது

அ.  பத்மஸ்ரீ விருது

ஆ. பாரத ரத்னா விருது

இ. சாகித்திய அகாதமி விருது

ஈ. அர்ஜுனா விருது


விடை: இ


46. 15 வயதில் பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத்  தமது கவிதைகளை எழுதி அனுப்பியவர் யார்?

அ. வள்ளலார்

ஆ. பாரதியார்

இ. கலிலியோ

ஈ. வீக்டர் ஹியூகோ


விடை: ஈ


47. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு - என்ற பொன்மொழியைக் கூறியவர்

அ. அறிஞர் அண்ணா

ஆ. வள்ளலார் 

இ. பாரதியார் 

ஈ. பாரதிதாசன்


விடை: அ


48. 2010 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு எதனை உருவாக்கியது?

அ. நூலகம் 

ஆ.பள்ளி 

இ.கல்லூரி 

ஈ.சிலை


விடை: அ


49. அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு உருவாக்கிய நூலகத்தின் பெயர் என்ன?

அ. தேசிய நூலகம் 

ஆ.நடுவண் நூலகம் 

இ.அண்ணா நூலகம் 

ஈ.அண்ணா நூற்றாண்டு நூலகம்


விடை: ஈ


50. உறு, தவ, நனி என்ற மூன்று உரிச்சொற்களும் _______  எனும் பொருளில் வருகின்றன

அ. குறிப்பு 

ஆ.மிகுதி 

இ.பண்பு 

ஈ.இசை


விடை: ஆ


51. வீட்டிற்கோர் திருக்குறள் புத்தகம் கட்டாயமாக இருக்கவேண்டும் என்று கூறியவர் யார்?

அ. வள்ளலார் 

ஆ.அறிஞர் அண்ணா 

இ.பாரதிதாசன் 

ஈ.பாரதியார்


விடை: ஆ


52. ஒரு சொல் பல பொருள்களுக்கு உரியதாய் வருவன  எச்சொற்கள்?

அ. பெயர்சொற்கள் 

ஆ.உரிச் சொற்கள் 

இ.வினைச்சொற்கள் 

ஈ.இடைச்சொற்கள்


விடை: ஆ


53. மழ என்பவற்றிலிருந்து உருவானவை எச்சொற்கள்?

அ. மழ 

ஆ.மழலை 

இ.மழந்தை 

ஈ.மரம்


விடை: ஆ


54. பல சொல் ஒரு பொருளுக்கு உரியதாய் வருவன எச்சொற்கள்?

அ. பெயர்ச்சொற்கள்

ஆ. வினைச்சொற்கள்

இ. உரிச்சொற்கள்

ஈ. இடைச்சொற்கள்


விடை:இ


55. பிழை நீக்கி எழுதுக:-

நிர்மலா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்

அ. நிர்மலா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்

ஆ. சிறந்த இசை நிர்மலா தான்

இ. நிர்மலா தான் சிறந்த இசை வல்லுநர்

ஈ. இசை வல்லுநர் நிர்மலா தான்


விடை: அ


56. அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம் நிறுவியவர்

அ. முத்துலட்சுமி 

ஆ.மலாலா 

இ.பண்டித ரமாபாய் 

ஈ.சாவித்திரிபாய் பூலே


விடை: அ


57. கோத்தாரிக் கல்விக் குழு _____ கல்வியை வலியுறுத்தியது?

அ. குழந்தைகள் 

ஆ.ஆதரவற்றோர் 

இ.மகளிர் 

ஈ.குழந்தை தொழிலாளர்


விடை: இ


58. கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு?

அ. 2010 

ஆ.2018 

இ.2014 

ஈ.2022


விடை: இ


59. பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர்?

அ. பாரதியார் 

ஆ.பாரதிதாசன் 

இ.காரியாசன் 

ஈ.கலீலியோ


விடை:ஈ


60. சிறுபஞ்சமூலத்தில் பொருள் _____

அ. ஐந்து பெரிய வேர்கள்

ஆ. ஐந்து சிறிய வேர்கள்

இ. ஐந்து வேர்கள்

ஈ. ஐந்து ஆணிவேர்கள்


விடை: ஆ


61. 'தென்னகத்து பெர்னாட்ஷா' என்று அழைக்கப்பட்டவர் யார்?

அ.பாரதியார் 

ஆ.அண்ணா

இ.பாரதிதாசன் 

ஈ.வள்ளலார்


விடை: ஆ


62. உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே என்று கூறியவர்

அ.ஆபிரகாம் லிங்கன் 

ஆ.கவிமணி 

இ.அண்ணா

ஈ.கதே


விடை: ஈ


62. ஈ.வெ.ரா - நாகம்மை இலவசக் கல்வி உதவித்திட்டம் எந்த படிப்பிற்கு உரியது?

அ.பள்ளிப்படிப்பு 

ஆ.பட்டமேற்படிப்பு

இ.பட்டப்படிப்பு

ஈ.தொழிற்கல்வி


விடை: ஆ


63. ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே முதன்முதலாகப் பெண்களுக்குப் பள்ளி தொடங்கிய மாநிலம்

அ.தமிழ் நாடு

ஆ.பீகார்

இ.மராட்டியம் 

ஈ.உத்திரப் பிரதேசம்


விடை:இ


64. பின்வரும் எந்த இதழிலில் அண்ணா ஆசிரியராகப் பணியாற்றவில்லை?

அ.நம்நாடு

ஆ.திராவிடநாடு 

இ.மாலை மணி

ஈ.விடுதலை


விடை: ஈ


65. இருமொழிச் சட்டத்தை உருவாக்கியவர்?

அ.ஆபிரகாம் லிங்கன் 

ஆ.அண்ணா 

இ.கதே 

ஈ.பெரியார்


விடை: ஆ


66. சீர்காழி இரா.அரங்கநாதன் பிறந்த நாள் எது?

அ.ஆகஸ்ட் 6 

ஆ.ஆகஸ்ட் 8

இ.ஆகஸ்ட் 7

ஈ. ஆகஸ்ட் 9


விடை: ஈ


67. 'அன்று' என்பது எதற்கு உரியது?

அ.ஒருமை

ஆ.தன்மை

இ.பன்மை

ஈ.முன்னிலை 


விடை:அ


68. வேற்றுமை உருபுகளில் தவறானது எது?

அ.ஐ

ஆ.ஆல்

இ.அது

ஈ.கிறு


விடை: ஈ


69. பெயரையும் வினையையும் சார்ந்து இயல்பை உடையன எது?

அ.பெயர் சொற்கள்

ஆ.இடைச் சொற்கள்

இ.வினைச்சொற்கள்

ஈ.உரிச்சொற்கள்


விடை:ஆ


70. "இடைச் சொற்கள் தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல" என்று கூறியவர்?

அ.கம்பர்

ஆ.வள்ளலார்

இ.தொல்காப்பியர்

ஈ.காரியாசான்


விடை:இ


71. "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே  என் தலைசிறந்த நண்பன்"என்றவர்

அ.ஆபிரகாம் விங்கன்

ஆ.கவிமணி

இ.அண்ணா

ஈ.பாரதியார்


விடை:அ

PDF வடிவில் பதிவிறக்க👇










கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை