8 TH STD TAMIL-MODEL LESSON PLAN- JUNE WEEK 4

  8. ஆம் வகுப்பு தமிழ்- மாதிரி பாடக்குறிப்பு 


வகுப்பு: 8.ஆம் வகுப்பு

பாடம்: தமிழ்

தலைப்பு: உரைநடை உலகம் (தமிழ் வரிவடிவ வளர்ச்சி)

                    விரிவானம் (சொற்பூங்கா)

நாள் : ஜூன் 4 ஆவது வாரம்

             (27-06-2022 முதல் 01-07-2022 வரை)


அறிமுகம்                               :

# மனிதன் பேசத்தொடங்கும் முன் தனது எண்ணங்களை எவ்வாறு வெளிப்படுத்தினான் என்ற வினாவைக்கேட்டு மாணவர்களை விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்.

# ஓரெழுத்தொருமொழிகள் சிலவற்றைக்கூறி,அவற்றுக்கு விடைகூறச்செய்து பாடத்தை அறிமுகம் செய்தல்

பாடச் சுருக்கம்                        :             

Ø  எழுத்துகள் தொடக்கத்தில் படிப்படியாகத் தோற்றம் பெற்றன.அச்சுக்கலையே வரிவடிவம் விரைவாக வளர்ச்சிபெற உதவியது.வட்டெழுத்து,கண்ணெழுத்து முதலியன எழுத்துகளின் தொடக்கநிலையாக இருந்தன. வரி வடிவத்தில் காலப்போக்கில் உருவமாற்றமும்,சீர்திருத்தமும் ஏற்பட்டது.

Ø  உயிரெழுத்து வரிசையில் 6 எழுத்துகளும், உயிர்மெய் வரிசையில் 36 எழுத்துகளும் ஓரெழுத்தொருமொழிகளாகும்.

ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சியைப் படிப்படியாக விளக்குதல்

Ø எழுத்து சீர்திருத்தஙகள் வரிவடிவ வளர்ச்சிக்கு எவ்வாறு உதவின எனபதை உணர்த்துதல்

Ø   உரைப்பகுதியை உரிய ஏற்ற இரக்கத்துடன் படித்துக்காட்டுதல்

Ø  ஓரெழுத்தொருமொழிகளின் பொருளை மாணவர்களுக்குக் கூறுதல்

கருத்துரு வரைபடம்

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

சொற்பூங்கா


மாணவர் செயல்பாடு:

Ø  மாணவர்கள் தமிழ் வரிவடிவ வளர்ச்சி எவ்வாறு படிப்படியாக நிகழ்ந்துள்ளது என உணர்தல்.

Ø   எழுத்துச்சீர்திருத்தததைப் பற்றி அறிதல்

@எழுத்துகளின் உருவமாற்றத்தைப் பற்றி அறிதல்

@ஓரெழுத்தொருமொழிகளின் பொருளறிதல்

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  ஓவிய எழுத்து என்பது யாது?

Ø  வளைந்த கோடுகளால் ஆன எழுத்து யாது?

Ø  வீரமாமுனிவர் செய்த சீர்திருத்தம் யாது?

Ø ஓரெழுத்தொரு மொழிகள் மொத்தம் எத்தனை?

தொடர்பணி:

·       பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை