9 TH STD TAMIL MODEL LESSON PLAN -JUNE WEEK 4

  9 .ஆம் வகுப்பு 

தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு

நாள்        :  27-06-2022 முதல் 01-07-2022 வரை            மாதம்          ஜூன்          

வாரம்     :  நான்காம் வாரம்                                   வகுப்பு  :   ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                     பாடத்தலைப்பு     :  1. தமிழோவியம்

                                                                                                                                             2.தமிழ்விடு தூது

கருபொருள்                            :

Ø  தமிழின் பெருமைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.

@ தூது அனுப்ப தமிழே சிறந்தது என்பதை அறிதல்

 

உட்பொருள்                           :

Ø  தமிழில் இலக்கியங்கள் எவ்வாறு வகைப்படுத்தப் படுகின்றன என்பதை  அறிதல்

@ ஆசிரியர் குறிப்பு அறிதல்

@நூற்குறிப்பு  அறிதல்


அறிமுகம்                               :

# தூது விடுதல் என்றால் என்ன? என்ற வினாவைக்கேட்டு, மாணவர்களை விடைகூறச்செய்து  பாடத்தை அறிமுகம் செய்தல்

முக்கிய கருத்துகள் மற்றும்

பாடச் சுருக்கம்                        :             

Ø  தமிழ் சங்ககாலம் தொட்டு சங்கப்பாடல்கள்,சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள்,அகம் ,புறம் ,நவீன இலக்கியங்கள் எனப்பல்வேறு இலக்கிய வடிவங்களுடன் சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகிறது.அதை மேலும் வளர்ப்பதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும்.

Ø  தூது அனுப்ப தமிழ்மொழியே சிறந்தது.தமிழ் பத்துக்குணம், நூறு வண்ணம்,மூவினம்,ஒன்பது சுவைகள் உள்ளிட்டவற்றை உடையது.


ஆசிரியர் செயல்பாடு              :

Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

Ø  தமிழையும் ,பிற திராவிட மொழிகளையும் ஒப்பீடு செய்தல்

Ø தமிழின் பல்வேறு இலக்கிய வடிவங்களைப்பற்றி மாணவர்களுக்கு விளக்குதல்

Ø   பாடலின் பொருளினை விளக்குதல்

Ø  இலக்கணக்குறிப்பை விளக்குதல்

Ø  பகுபத உறுப்பிலக்கணத்தை மாணவர்க்குப் புரிய வைத்தல்

கருத்துரு வரைபடம்

மாணவர் செயல்பாடு:

Ø  மாணவர்கள் தமிழ் மொழியே திராவிட மொழிகளில் மூத்த மொழி என உணர்தல்.

Ø   திராவிட மொழிகளுக்கிடையிலான பொதுமைப்பண்புகளை அறிதல்

@திராவிட மொழிகளின் பழமையான இலக்கண இலக்கியங்கள் குறித்து அறிதல்.

@திராவிட மொழிகளுக்கிடையிலான சொல் ஒற்றுமைகளை அறிதல்.

வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

மதிப்பீடு:

Ø  மொழிக்குடும்பம் என்றால் என்ன?

Ø   திராவிட மொழிக்குடும்பம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது

Ø   திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்??

Ø   தெலுங்கு எம்மொழிக்குடும்பத்தைச்சார்ந்தது??

தொடர்பணி:

·       பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை