8 TH STD TAMIL MODEL LESSON PLAN -AUGUST 4 TH WEEK

  8. ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 22-08-2022 முதல் 26-08-2022        

மாதம்          ஆகஸ்டு          

வாரம்     :   நான்காம் வாரம்                                               

வகுப்பு  :   எட்டாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :  1.தலைக்குள் ஓர் உலகம்

                                           2. எச்சம்

1.கற்றல் நோக்கங்கள்   :

       Ø மூளையின் செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழ்தல்

      # எச்சச்சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

         Ø மனித மூளையினைப் பற்றி சில வியப்பூட்டும் உண்மைகளைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

          #  பேச்சு வழக்கில் எச்சங்கள் பயன்படும் சில இடங்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.

4.பாடச் சுருக்கம்  :             

  • மூளையின் அமைப்பு

  • மூளையின் உணவு

  • மூளையின் வலதும் இடதும்

  •  மூளையும் அன்றாட நிகழ்வுகளும்.

  • பொருள் முடிவு பெறாமல் எஞ்சி இருக்கும் சொல் எச்சம் எனப்படும்.

  • எச்சம் பெயரெச்சம் ,வினையெச்சம் என இருவகைப்படும்.

  • பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இருவகைப்படும். 

  •  வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்

5.ஆசிரியர் செயல்பாடு              :

    Ø  மூளை பற்றிய செய்திகளை காணொளிகள் மற்றும் விளக்கப்படங்கள் மூலம் விளக்குதல்

   Ø நூல்வெளி பகுதியைத் தெளிவாக விளக்குதல் விளக்குதல்.

   Ø  எச்சத்தின் வரையறையைத் தெளிவாகக் கூறுதல்

    Ø  எச்சத்தின் வகைகளைத் தக்க சான்றுகளுடன் விளக்குதல்

6.கருத்துரு வரைபடம்:


தலைக்குள் ஓர் உலகம்



இலக்கணம்- எச்சம்

7.மாணவர் செயல்பாடு:

      Ø  மூளையின் அமைப்பினப் பற்றி அறிதல்
     Ø  மூளையின் செயல்பாடுகளைப்பற்றி அறிதல்
     Ø  எச்சத்தின் வரையறையைப் படித்துத் தெரிந்துகொள்ளுதல்.
     Ø எச்சத்தின் வகைகளைப் புரிந்துகொள்ளுதல்.

8.வலுவூட்டல்:

     விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :

1.மூளைக்குத்தேவைப்படும் காற்று எது?
2.எச்சம் எத்தனை வகைப்படும்?

இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)

1.எச்சம்-வரையறு
2.மூளையின் அமைப்பு யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :

1.மூளையின் அன்றாட நிகழ்வுகள் யாவை?

10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு:

Ø மூளையின் செயல்பாடுகள் பற்றிய புதுமையான செய்திகளை அறிந்து மகிழ்தல்

      # எச்சச்சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.


       

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை