10 TH STD TAMIL MODEL NOTES OF LESSONS -JULY WEEK 1 (2023-24)

               10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு 

நாள்        : 10-07-23 முதல் 14-07-2023        

மாதம்         ஜூலை

வாரம்     :  முதல் வாரம்                                               

வகுப்பு  :   பத்தாம் வகுப்பு          

 பாடம்    :           தமிழ்                                                         

பாடத்தலைப்பு     :   1. தொகைநிலைத் தொடர்கள்

                                             2. விருந்து போற்றுதும்

1.கற்றல் நோக்கங்கள்   :

       @ தொகைநிலைத் தொடர்களின் தன்மைகளைப் புரிந்துகொண்டு பயன்படுத்துதல்.

      Ø நம் பண்பாட்டுக்கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை அறிந்து பெருமிதத்துடன் பின்பற்றுதல்.

2..கற்பித்தல் துணைக்கருவிகள்:

         வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்

(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)

3.அறிமுகம் (ஆர்வமூட்டல்)   :

       Ø  தமிழின் சிறப்பை உணர்த்தும் இனியப் பாடல் பாடி அறிமுகம் செய்தல்

      Ø  அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் தொடர்களை கரும்பலகையில் எழுத வைத்தல்.

4.பாடச் சுருக்கம்  :                                                                                                                                                                       

      Ø  அறவுணர்வும் தமிழர் மரபும்

       @ தனித்து உண்ணார்

      @ இன்மையிலும் விருந்தோம்பல்

       @ விருண்ட் அன்றும் இன்றும்

        Ø  சொற்றொடர் அறிதல்

        Ø  தொகைநிலைத் தொடர்களின் 6 வகைகளை அறிதல்

§  வேற்றுமைத் தொகை

§  வினைத்தொகை

§  பண்புத் தொகை

§  உவமைத் தொகை

§  உம்மைத் தொகை

§  அன்மொழித்தொகை

5.ஆசிரியர் செயல்பாடு              :

        Ø  வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.

         Ø இலக்கியங்கள் காட்டும் பண்டைய தமிழரின் விருந்தோம்பல் பண்பினை தெளிவாக விளக்குதல்

         Ø  தொகை நிலைத் தொடர் என்பது யாது என்பதன கூறல்

         Ø  அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய சொற்களைக் கொண்டு தொகைநிலைத் தொடர் வகைகளை  கூறல்

         Ø  உருபு, சொல் மறைந்து வருவது தொகை நிலைத் தொடர் என உணர்த்துதல்

        Ø  தொகை நிலைத் தொடர்களின் ஆறு வகைகளையும் அன்றாடம் நாம் பயன்படுத்தும் தொடர்களைக் கொண்டு எளிய முறையில் விளக்குதல்


6.கருத்துரு வரைபடம்:

தொகைநிலைத்தொடர்கள்


விருந்து போற்றுதும்

7.மாணவர் செயல்பாடு:

         Ø  உரைநடைப் பகுதியை பிழையின்றி வாசித்தல்
        Ø தமிழரின் விருந்தோம்பல் அன்றும்,இன்றும் என்ற நோக்கில் கருத்துகளைப்புரிந்து கொள்ளுதல்
        Ø  சொல் அட்டைகள் கொண்டு தொடர் உருவாக்குதல்
        Ø  தொகை நிலையின் ஆறு உறுப்புகள் மட்டுமல்லாது உருபு பயனும் உடன் தொக்க தொகை பற்றி அறிதல்
       Ø  இரு பெயரொட்டு பண்புத் தொகைப் பற்றி அறிதல்

9.மதிப்பீடு:

எளிய நிலைச்சிந்தனைத் திறன் (LOT) :
     Ø  விருந்து என்பதை வரையறுக்கும் நூல் யது?
இடைநிலைச்சிந்தனைத் திறன் (MOT)
     Ø  சொற்றொடர் எனபது யாது?

உயர்நிலைச் சிந்தனைத் திறன் (HOT) :
     Ø  தொகை நிலைத் தொடரின் வகையைக் காண்க : அண்ணன்,தம்பி 
10.குறைதீர் கற்றல்:

         மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.

11.தொடர்பணி

பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.

12.கற்றல் விளைவு

     1010 மொழியில் பொருள் வெளிப்பாட்டிற்கேற்பப் பயன்படுத்தப்பபடும் தொகைநிலைகளின் தன்மைகளை அறிந்து எழுதுதல்.

Ø         @  1011 வாழ்வியலுடன் இணைந்துள்ள மொழியின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பினை உணர்நது பின்பற்றுதல், பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து ஒப்பிட்டு பேசவும், கலந்துரையாடவும் திறன் பெறுதல்.

10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்துக்கான கற்றல் விளைவுகளைப் பதிவிறக்க


9.ஆம் வகுப்பு தமிழ் பாடக்குறிப்புகளைப் பெற 👇👇








 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை