SECOND MIDTERM TAMIL QUESTION PAPER AND ANSWER KEY- 9 TH STD

 

(இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களுக்கு ஒரே வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது)

இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்

வினாத்தாளைப் பதிவிறக்க👇

9.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்

                                                                பகுதி-1                                                     8X1=8

வினா எண்

விடைக்குறிப்புகள்

மதிப்பெண்

1.      

. என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

1

2.     

. எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

1

3.     

அ. மாமல்லபுரம்

1

4.     

ஈ. கெடுதல்

1

5.     

. ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

1

6.    

அ. பாரதிதாசன்

1

                                                                    பகுதி-2                                                    3X2=6

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

7

இத்தொடரின் பொருளாவது, நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

2

8

   பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது

2

9

விஜய நகர மன்னர் காலத்தில் அமைக்கப்பட்டவை.

2

10

பந்தலின் கீழ் முத்துகளையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தது

2

11

உலகிற்கு அச்சாணியாக விளங்குபவர் உழுபவரே ஆவார். மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால் அவ்வாறு அழைக்கப்படுகிறார்.

 

2

 

                                                                   பகுதி-3                                                        3X3=9

எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க

12

  ஔவையார்,  நக்கண்ணையார்,  ஒக்கூர் மாசாத்தியார், காக்கைப்பாடினியார்,  ஆதிமந்தியார்,வெள்ளிவீதியார்,  வெண்ணிக்குயத்தியார்,  நப்பசலையார்,  பொன்முடியார்,  காவற்பெண்டு, அள்ளூர் நன்முல்லையார் ஆகியோர் ஆவார்.

3

13

ü  1886-ல் பிறந்த முத்துலெட்சுமி அவர்கள் பல சாதனைகளுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.

ü  தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

ü  இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும், சென்னை மாநகராட்சியின் முதல் துணை

ü  மேயராகவும், சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் ஆவார்.

ü  அடையாற்றில் 1930-ல் அவ்வை இல்லம், 1952ல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.

ü  தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், இருதாரத்தடைச்சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்துள்ளார்.

3

14

  • கழனியிலே பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.
  • தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.
  • அதைப்போலவே, அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.
    விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
    உரையாமை செல்லும் உணர்வு.”

3

15

முழு உருவச் சிற்பம்:   உருவத்தின் முன் பகுதியும், பின் பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் முழு  உருவத்துடன் அமைந்து இருக்கும்.

புடைப்புச் சிற்பம்:      புடைப்புச் சிற்பத்தில் முன்பகுதி மட்டுமே தெரியும் படி அமைந்து இருக்கும்.

 

3

16

  • சதிராடும் இளம்பெண்கள், தம் கைகளில் கதிரவன் போன்ற ஒளியையுடைய விளக்கையும் கலசத்தையும் ஏந்தியவாறு வந்து எதிர் கொண்டு அழைக்கிறார்கள்.
  • மதுராபுரியை ஆளும் மன்னனாம் கண்ணன், பாதங்களில் பாதுகை அணிந்து கொண்டு புவி அதிர மகிழ்ச்சியுடன் நடந்து வருகிறான்.
  • மத்தளம் முழங்க, வரி சங்கம் ஊத, முத்துக்களையுடைய மாலைகள் தொங்கவிடப்பட்ட பந்தலின் கீழ் என்னைத் திருமணம் செய்து கொள்கிறான் என்று ஆண்டாள் கனவு கண்டதாகக் கூறுகிறாள்

3

 

                                                             பகுதி-4                                                       1X3=3

அடிமாறாமல் எழுதுக

17

பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,

மூவாது மூத்தவர், நூல் வல்லார்;

தாவா, விதையாமை நாறுவ வித்துஉள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு

 

கல்லிடைப் பிறந்த ஆறும்

   கரைபொரு குளனும் தோயும்

முல்லைஅம் புறவில் தோன்று

      முருகுகான் யாறு பாயும்

நெல்லினைக் கரும்பு காக்கும்

     நீரினைக் கால்வாய் தேக்கும்

மல்லல்அம் செறுவில் காஞ்சி

     வஞ்சியும் மருதம் பூக்கும்

3

 

                                                             பகுதி-5                                                      4X3=12

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்

18

காட்சிக்குப் பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக

3

19.

அ) அரிசி   ஆ) மாலைகள், கைத்தறி ஆடைகள்,வாழ்த்துமடல்கள்

3

20

அ. Strengthen the body. : உடலினை உறுதி செய்
ஆ. Love your food : ஊண் மிக விரும்பு

இ. Union is strength : ஒற்றுமை வலிமை

3

21.

1.அலுவலர் வந்தார் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

விடை : அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

2 சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.

விடை: சுடர்க்கொடியும் மாலனும் பாடினார்கள்.

3. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.

விடை : பழனிமலையைவிட இமயமலைதான் மிகவும் பெரியது.

3

22.

அ. சமூக சீர்திருத்தவாதி  ஆ. தன்ன்னர்வலர் இ. குடைவரைக்கோவில்

3

 

                                                                 பகுதி-6                                                       1X7=7

விரிவான விடையளிக்க:

23

) பதிப்பகத்தாருக்குக் கடிதம்

தணிகைப்போளூர்,                                                                                                                                            27.09.21.

அனுப்புநர்

         . இளவேந்தன்

        மாணவச்செயலர்,

        12ஆம் வகுப்புபிரிவு,

        அரசினர் மேனிலைப்பள்ளி,

        தணிகைப்போளூர்,

பெறுநர்

        மேலாளர்,

        நெய்தல் பதிப்பகம்,

        சென்னை-600 001.

பெருந்தகையீர்,

         வணக்கம். உலகிலேயே பழம்பெருமை வாய்ந்த மொழிகளுள் முதல்  மொழியாகவும்,   முதன்மை மொழியாகவும், செம்மொழியாகவும் விளங்குவது  தமிழ்மொழியே. கல்தோன்றி  மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவரும்  தமிழ்மொழியில் உள்ள அருஞ்சொற்களின் பொருளை அறிய உங்கள் பதிப்பகத்தில் வெளியிட்டுள்ள தமிழ்- தமிழ்-ஆங்கிலம் அகராதியின் பத்துபடிகளை எங்கள் பள்ளி நூலகத்திற்கு பதிவஞ்சலில் அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.

                                                                                                                 தங்கள் உண்மையுள்ள,

 .இளவேந்தன்,

                                                                                                                       (மாணவச் செயலர்)

உறைமேல்  முகவரி:

மேலாளர்,

நெய்தல் பதிப்பகம்,

சென்னை-600 001.

 

ஆ) முன்னுரை:
    மனிதனின் சிந்தனையைத் தூண்டுவது நூல்களே. இசையைப் போல மனதைப் பண்படுத்துவதும் நூல்களே எனில் மிகையாகாது. “வீட்டிற்கோர் புத்தகசாலைஎன்னும் அண்ணாவின் வானொலி உரை மூலம், நூலகம், நூல்கள் குறித்து வெளிப்படும் கருத்துகள் குறித்து பார்ப்போம்.

நூலகம்:
     ஒரு நாட்டின் நிலை, உலக நிலைக்கேற்ப வளரவேண்டும் எனில் வீட்டு நிலை மாற வேண்டும். வீட்டிற்கோர் புத்தகசாலை [நூலகம்] வேண்டும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே ஆகும். நல்ல மனவளம் தருவது நூலகமே .

     வீட்டிற்கோர் புத்தகசாலைஎன்ற இலக்கினை நடைமுறைப்படுத்தினால் நமது சந்ததி நல்ல மனவளம் பெறுவர். நாடும் நலமும் வளமும் பெறும்.  வீட்டில் அலங்காரப் பொருட்களுக்கு போகப் பொருள்களுக்கு முக்கியத்துவம் தரும் நிலை மாறவேண்டும். ஒவ்வொரு வீடுகளிலும் புத்தகசாலைக்கு இடம் தரப்பட வேண்டும். உணவும் உடையும் எவ்வாறு அடிப்படைத் தேவையோ அதைப் போலவே, நூலகமும் அடிப்படைத் தேவையாகும்.

நூல்கள் :
      நாட்டை அறிய, உலகை அறிய, ஏன் ஒருவன் தன்னை அறிய ஏடுகள் (நூல்) வேண்டும். நிபுணத்துவம் தரும் ஏடுகள்தான் என்பதன்று, அடிப்படை அறிவை, உண்மையை உணர்த்தும் நூ ல்களையாவது கற்க முனையுங்கள்.

     பூகோள, சரித ஏடுகள் இருத்தல் வேண்டும். வீட்டிற்கோர்திருக்குறள்கட்டாயம் வேண்டும்.
சங்க இலக்கியங்களின் சாரத்தைத் தீட்டித்தரும் நூல்களும் இருக்க வேண்டும். கற்க வேண்டும்.
விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் பற்றிய முக்கியமான தரவுகளைத் தரும் நூல்கள் படித்திடல் வேண்டும்.

  • நாட்டு விடுதலைக்கு உழைத்தவர்கள்
  • மக்களின் மனமாசு துடைத்தவர்கள்
  • தொலைதேசங்களைக் கண்டவர்கள்
  • வீரர்கள், விவேகிகள் வாழ்க்கை

ஆகிய நூல்கள் இருத்தல் வேண்டும் என்கிறார் பேரறிஞர் அண்ணா .

முடிவுரை :
     கேட்டினை நீக்கிட வீட்டிலே புத்தகசாலை அமைப்போம்.

                    புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டில்
                    புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்

என்ற பாவேந்தர் கூற்றுப்படி புத்தகசாலை அமைப்போம், புத்தகம் வாசித்துப் புதுவாழ்வு பெறுவோம்.

7

 

                                                                 பகுதி-7                                                       1X7=7

விரிவான விடையளிக்க:

23

முன்னுரை:
     நிலைத்த புகழுடைய கல்வியாலும் சாதனைகளாலும், பல தடைகளைத் தாண்டிப் பல பெண்மணிகள் சாதனை புரிந்து அழியாப் புகழ் பெற்றுள்ளனர். அவர்களுள் சிலரைப் பற்றி அறிந்து கொள்வோம்.

பண்டித ரமாபாய்:
    1858 -ஆம் ஆண்டு முதல் 1922 – ஆம் ஆண்டு வரை வாழ்ந்த இவர் சமூகத் தன்னார்வலர். பல தடைகளை மீறிக் கல்வி கற்றுப் பண்டிதராகியவர். பெண்களின் உயர்வுக்குத் துணை நின்றவர், “பெண்மை என்றால் உயர்வுஎன்பதற்குச் சான்றாவார்.

ஐடாஸ் சோபியா:
    1870 முதல் 1960 வரை வாழ்ந்தவர். பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் மருத்துவம் கற்றதோடு, தமிழகத்திற்கு வந்து மருத்துவராகி வேலூர் கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையை நிறுவியவர்.

மூவலூர் இராமாமிர்தம் :
    1883 முதல் 1962 வரை வாழ்ந்த இவர், தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற துணைநின்றவர். இவரைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மகளிர் திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கி வருகிறது.

சாவித்திரிபாய் பூலே :
     1831 முதல் 1897 வாழ்ந்தவர். 1848 ம் ஆண்டு பெண்களுக்கென தொடங்கப்பட்ட பள்ளியில், ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரே நாட்டின் முதல் பெண் ஆசிரியர் ஆவார்.

மலாலா :
      பாகிஸ்தானில் ஒடுக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு, பெண் கல்வி வேண்டுமெனப் பன்னிரண்டு வயதிலே போராட்டக்களத்தில் இறங்கிய வீரமங்கை ஆவார்.

முடிவுரை :
     இன்று பல்துறைகளிலும் சிறப்புற்று விளங்க, முன்பே வழிகாட்டிய இவர்கள் அனைவருமே சாதனைப் பெண்மணிகளே

             புவி வளம் பெறவே புதிய உலகம் நலம்பெறவே வாழியவே பெண்மை வாழியவே

ஆ) முன்னுரை:

    கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன்; சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினாள், உணர்வுகளையும், நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் சிற்பங்கள் வரலாற்றின் வாயில்களாகவும், கலைநயம் மிக்கனவாகவும் காணப்படுகின்றன.

சிற்பங்களின் கலைநயம்:

     "கற்கவிஞர்கள்" என்று சிறப்பிக்கப்படும் சிற்பிகள் வடித்த சிற்பங்கள் ஒவ்வொன்றும்

கலைநயம் மிக்கலையாய் மிளிர்கின்றன. சிற்பங்களை கோவில்களின் கட்டடங்கள், கற்றுளர்கள், கற்றுச்சுவர்கள் நுழைவு வாயில்கள் என அனைத்து இடங்களிலும் கலைநயம் மிளிரச் செதுக்கினர்

       புதுக்கோட்டைமாவட்டம்நார்த்தாமலையில் உள்ள சிற்பம் நடனக்கலையின் முத்திரைகளுடன் அமைக்கப்பட்டிருக்கும் பாங்கு கலை நயத்துக்கோர் சான்றாகும். கடவுளின் உருவங்களும், மனித உருவங்களும் மிகுந்த கலை நுடபத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. திருவரங்கக் கோவிலினுள் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களில்   வெளிப்படும் முக பாவனைகள் சிற்பக்கலை நுட்பத்திற்கு தனி சான்றாய்த் திகழ்கிறது.

     கோவில் கோபுரங்களில் கதைகளாலான சிற்பங்கள் மிகுதியாக உள்ளன. அவற்றுள் ஆடை அணிகலன்கள் அரிந்த நிலையில் உள்ள உருவங்கள் சிற்பங்களாயின. அவையும் சிற்பக் கலைநுட்பம் வாய்ந்தவை. உருவங்கள் விழியோட்டம், புருவ நெளிவு. நகஅமைப்பு என மிக மிக நுட்பமாக கலை நயத்துடன் படைக்கப்பட்டுள்ளன.

     கிருஷ்ணாபுரம் வேங்கடாசலபதி கோவிலில் உள்ள குறவன், குறத்தி, இரதிதேவி சிலைகள் காண்போரை ஈர்க்கும் கலைநயம் வாய்ந்தவை,

சிற்பங்கள் வரலாற்றுப் பதிவுகள்:

     சிற்பக் கலையைப் பற்றிக் கூற முற்படுகின்ற பொழுது. பல்லவர் காலச் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பங்கள், சோழர் காலச் சிற்பங்கள் ,விஜய நகர மன்னர் காலச் சிற்பங்கள், நாயக்கர் காலச் சிற்பங்கள் என்றே வகைப்படுத்துகிறோம். எனவே சிற்பக்கலை வரலாற்றுப் பதிவாகவும் திகழ்கிறது. என்பதை மறுக்க இயலாது.

     மாமல்லபுரம், காஞ்சிபுரம், திருச்சி மலைக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள சிற்பங்கள் மூ லம் பல்லவர் கால வரலாற்றை உணரலாம். திருமயம் பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம், கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்கள் பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றுகளாகும்.

     கங்கை கொண்ட சோழபுரம், தாராகரம், திரிபுவனம், தஞ்சை பெருவுடையார் கோவில்களில் உள்ள சிற்பங்கள் மூலம், இராசஇராசசோழன், குலோத்துங்க சோழன், இராசேந்திர சோழன், இரண்டாம் இராசராசன் போன்ற மன்னர்களின் வரலாறுகளையும், அவர்கள் கலை வளர்த்தப் பாங்கினையும் அறியலாம்.

    விஜயநகர மன்னர்கள் கோவில்களில் மிக உயர்ந்த கோபுரங்கள் அமைக்கும் பணியைச் செவ்வனே செய்தது, அவற்றில் கதைகளாலான சிற்பங்களை அமைக்கச் செய்தனர், சோழர் காலத்தை செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று சிறப்பிக்கின்றனர்.

     நாயக்க மன்னர்களின் காலத்தில் ஆயிரங்கால் மண்டபம் அமைக்கப்பட்ட வரலாற்றை அறிவிக்கிறது.மதுரை மீனாட்சியம்மன் கோயில் தூண்களில் உள்ள சிற்பங்கள் கண்ணப்பர், சந்திரமதி, அரிச்சந்திரன் வரலாற்றை எடுத்துக் கூறுகிறது.

முடிவுரை:

    'சிற்பங்கள் என்பன தெய்வங்களாகப் போற்றி வணங்குவதற்கும். என்னய உருவங்கமைக் கண்டு களிப்பதற்கும் மட்டுமல்ல, அவை கலைநயத்தின் சான்றாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும், அறியில் முதிர்ச்சிக்கு ஓர் அடையாளமாகவும் இருப்பதால் சிற்பக்கலையைப் போற்றி பேணுவது நம் கடமையாகும்.

7

 

விடைக்குறிப்புகளைப் பதிவிறக்க👇

 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை