இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2023 இராணிப்பேட்டை மாவட்டம்
வினாத்தாளைப் பதிவிறக்க👇
8.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
அ |
1. சுற்றம்(உறவினர்) 2. முழங்கும் |
2 |
ஆ. |
1. கனகம்+சுனை 2. பாடு+அறிந்து |
2 |
இ |
1. முறையெனப்படுவது 2. என்றாய்ந்து |
2 |
ஈ |
1. குற்றமற்ற ஆட்சி 2. வேழங்கள்(யானைகள்) |
2 |
உ |
1. அ. அகழ்வாரை 2.ஆ. வித்துகள் |
2 |
ஊ |
1. பெயரெச்சத்தொடர்-
எழுதிய பாடல் 2. வினைமுற்றுத்தொடர்
– வென்றான் சோழன் 3. எழுவாய்த்தொடர்
– கார்குழலி படித்தாள் 4. வினையெச்சத்தொடர்
- பாடி முடித்தாள் |
14 |
II . அகரவரிசைப்படுத்துக |
||
|
உடுக்கை, உறுமி , கணப்பறை , தவண்டை, தவில், நாகசுரம்,
படகம்,பேரியாழ், பிடில் மகுடி |
2 |
III எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
1 |
புல்லாங்குழல் , முழவு |
2 |
2 |
ü பண்பு
எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். ü அன்பு
எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல் |
2 |
3 |
அன்றாடப்
பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலையைக்
கைவினைக்கலை எனலாம் |
2 |
4 |
ஒருவர்
செய்தகுற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது
அரசனின் கடமையாகும். |
2 |
5 |
பயிர்கள்
வாட்டமின்றிக் கிளைத்து வளரத்தேவையானது மழை |
2 |
IV. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை எழுதுக |
||
1 |
உழவர்கள் போரினை அடித்து நெல்லினை
அறுவடை செய்யும் காலத்தில் ஆரவார ஒலி எழுப்புவர். |
2 |
2. |
விசிறி, தொப்பி, கிலுகிலுப்பை, ஓலைப்பாய்' போன்றவை. பனையோலையால் உருவாக்கப்படும்
பொருள்கள் ஆகும் |
2 |
3. |
மழை இல்லாததால்
உழவுத் தொழில் செய்ய முடியவில்லை. எனவே மக்கள் ஊரை விட்டு வெளியேறுகின்றனர். |
2 |
V. எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும் |
||
1 |
ü
இல்வாழ்வு
என்பது வறியவர்களுக்கு உதவி செய்தல். ü
பாதுகாத்தல்
என்பது அன்புடையோரைப் பிரியாது வாழ்தல். ü
பண்பு
எனப்படுவது சான்றோர் காட்டிய வழியில் நடத்தல். ü
அன்பு
எனப்படுவது உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். ü
அறிவு
எனப்படுவது அறிவற்றவர் கூறும் சொற்களைப் பொறுத்தல். ü
செறிவு
எனப்படுவது முன் சொன்ன வாக்கை மறுக்காமல் காப்பாற்றுதல். ü
நிறைஎனப்படுவது மறைபொருளைப் பிறர் அறியாமல்
காத்தல். ü
நீதிமுறைஎனப்படுவது குற்றம் செய்தவருக்கு உரிய
தண்டனைவழங்குதல். ü
பொறுமைஎனப்படுவது
தம்மை இகழ்வாரையும் பொறுத்தல். |
3 |
2 |
ü மூங்கிலைக் கொண்டு பலவகையான கைவினைப் பொருள்களைச் செய்யலாம்.
ü மட்டக்கூடை தட்டுக்கூடை, கொட்டுக்கூடை, முறம், ஏணி, சதுரத்தட்டி,தெருக்கூட்டும் துடைப்பம், பூக்கூடை, கட்டில் புல்லாங்குழல்,கூரைத்தட்டி போன்றவை மூங்கிலால் செய்யப்படும்
பொருள்கள் ஆகும். ü பிறந்த குழந்தைக்குத் தொட்டில் முதல், இறந்தவரை சுமந்து செல்லும் பாடை
பயன்படுத்தப்படுகிறது. |
3 |
3 |
தொகைநிலைத்தொடர் 1. வேற்றுமைத்தொகை 2. வினைத்தொகை 3. பண்புத்தொகை 4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை 6. அன்மொழித்தொகைஎன
ஆறுவகைப்படும். |
3 |
VI . |
||
அ |
1 மற்றும் 2 வினாக்களுக்குப்
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
1 |
ஆ |
1.
கொம்பு
2. புல்லாங்குழல் |
1 |
VII .அடிமாறாமல் எழுதுக. |
||
1 |
கேட்டார்ப்
பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். |
2 |
2. |
ஆற்றுதல் என்பது ஒன்று
அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது
புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது
பாடறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன்கிளை
செறாஅமை அறிவு எனப்படுவது
பேதையார் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது
கூறியது மறாஅமை நிறை எனப்படுவது மறை
பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ஓடாது
உயிர் வௌவல் பொறை எனப்படுவது
போற்றாரைப் பொறுத்தல் |
4 |
VIII . எவையேனும் மூன்றனுக்கு மட்டும் விடையளிக்கவும் |
||
1 |
v அன்றாடப் பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில் முறையில்
உருவாக்கும்.கலையைக் கைவினைக்கலை என்று அழைப்பர். v தமிழகத்தில் பழங்காலந் தொட்டே இக்கலை வளர்ந்திருக்கிறது.
கைவினைக்கலைக்கு சான்றாக இருப்பது,
மண்பாண்டங்கள் ஆகும். v சிந்துசமவெளி,
ஆதிச்சநல்லூர் செம்பியன் கண்டியூர்; கீழடி போன்ற பகுதிகளில் செய்த
அகழ்வாய்வில் மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. v களிமண்ணால் உருவாக்கப்படும் மண்பாண்டங்கள், சுடுமண் சிற்பங்கள் போன்றவை
முதன்முதலில் செய்யப்பட்ட கைவினைப் பொருள்கள் ஆகும். v மூங்கிலால் செய்யப்படும் பொருட்கள், கோரைகளால் செய்யப்படும் பொருட்கள், பிரம்பால் செய்யப்படும் பொருட்கள், பனையோலையால் செய்யப்படும் பொருட்கள்
இவையனைத்தும் கைவினைப் பொருட்கள் ஆகும்.இதனால் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும்
நிகழாது. v மரப்பொம்மைகள்,சந்தனமாலைகள்சங்கு,இதுமட்டுமல்லாது. கிளிஞ்சல்களால் செய்யப்படும் காகிதப்பொம்மைகள், பொருட்கள் அத்தனையும் கைவினைப்
பொருட்கள் ஆகும், v அரசு கைவினைக் கலைஞர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது.
கைவினைக் கலைஞர்களுக்கான சிறுதொழில் கடன் வசதியும் அளித்து வருகிறது. v அரசு அழகும்,
நலமும் வாய்ந்த இயற்கைப்
பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களை வாங்குவோம்! கைவினைக்
கலைக்கு உயிர் தருவோம்! |
6 |
2. |
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
எழுதுக. அனுப்புநர் சே.வெண்மதி, த/பெ
சேரன், 562 திருவள்ளுவர் தெரு, வளர்புரம் அஞ்சல், அரக்கோணம் வட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. பெறுநர் உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. ஐயா, பொருள்:இருப்பிடச்சான்று வழங்கக் கோருதல் சார்பு. வணக்கம் . நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன்.எனது மேற்படிப்புச் சேர்க்கைக்காக இருப்பிடச்சான்று தேவைப்படுகிறது.நான் அவ்விடத்தில் வசிப்பதற்கான சான்றுகளாக குடும்ப அட்டை நகலையும்,
ஆதார் அட்டை நகலையும் இணைத்துள்ளேன்.எனவே எனக்கான
இருப்பிடச்சான்று வழங்க விரைந்து
நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
இப்படிக்கு, தங்கள் பணிவுடைய,
சே.வெண்மதி. இடம்:அரக்கோணம், நாள்: 12-03-2022. உறைமேல் முகவரி: உயர்திரு.வட்டாட்சியர் அவர்கள், வட்டாட்சியர் அலுவலகம், அரக்கோணம், இராணிப்பேட்டை மாவட்டம்-631003. |
6 |
விடைக்குறிப்புகளைப் பதிவிறக்க👇