SIRAPPU THIRUPPUTHAL THERVU-2 IYAL 7,8,9

 

சிறப்பு திருப்புதல் தேர்வு 3 – இயல் 7,8,9

 10.ஆம் வகுப்பு                தமிழ்              மதிப்பெண்கள்: 100        நேரம்: 3 மணி நேரம்

பகுதி-1 (மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                                                                                                

1)சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடு

அ)உழவு, மண், ஏர், மாடு ஆ)மண், மாடு, ஏர், உழவு

இ)உழவு, ஏர், மண், மாடு ஈ)ஏர்,உழவு,மாடு,மண் 

2)”மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும்மாலவன் குன்றமும் வேலவன்  குன்றமும் குறிப்பது முறையே

அ)திருப்பதியும், திருத்தணியும் ஆ)திருத்தணியும், திருப்பதியும்                                               

இ)திருப்பதியும், திருச்செந்தூரும் ஈ)திருப்பரங்குன்றமும், பழனியும் 

3)”தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயுமாக இருந்த அரசன்என்னும் மெய்க்கீர்த்தி தொடர் உணர்த்தும் பொருள்

அ)மேம்பட்ட நிர்வாகத் திறன் பெற்றவர்  ஆ) மிகுந்த செல்வம் உடையவர்                                         

இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்  ஈ)நெறியோடு நின்று காவல் காப்பவர் 

4)இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போடுவதன் காரணம்------

அ) நாட்டை கைப்பற்றல் ஆ) ஆநிரை கவர்தல இ) வலிமையை நிலைநாட்டல் ஈ) கோட்டையை முற்றுகையிடல்

5) மேன்மை தரும் அறம் என்பது-----------

அ)கைம்மாறு கருதாமல் அறம் செய்வது  ஆ) மறுபிறப்பில் பயன்பெறலாம் என்ற நோக்கில் அறம்செய்வது 

இ) புகழ் கருவி அறம் செய்வது   ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம்செய்வது

6) உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக்கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்

அ) உதியன், சேரலாதன் ஆ) அதியன்,பெருஞ்சாத்தன் இ)பேகன்,கிள்ளிவளவன் ஈ) நெடுஞ்செழியன்,திருமுடிக்காரி

7) காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற  தொடர்-------

அ)இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது   ஆ)என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ)இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்  ஈ)என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்

8) சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா  ஆ) வெண்பா  இ) வஞ்சிப்பா  ஈ) கலிப்பா 

9) சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும்,சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ)அரசின் நலத் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ)அறிவியல் முன்னேற்றம்

இ)பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல் ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 

10) பூக்கையைக் குவித்துப்பூவே புரிவொடு காக்க என்று----,---வேண்டினார்.

அ) கருணையன் எலிசபெத்துக்காக ஆ) எலிசபெத் தமக்காக  

இ) கருணையன் பூக்களுக்காக  ஈ) எலிசபெத் பூமிக்காக

11) வாய்மையே மழைநீராகி -  இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை  ஆ) தற்குறிப்பேற்றம்  இ) உருவகம்  ஈ) தீவகம்                                                                         

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

கண்ணுள் வினைஞரும் மண்ணீட்டு ஆளரும்

பொன்செய் கொல்லரும் நன்கலம் தருநரும்

துன்னகாரரும் தோலின் துன்னரும்

கிழியினும் கிடையினும் தொழில்பல பெருக்கிப்

12) கண்ணுள் வினைஞர் யார்?

) ஓவியர்) சிற்பி  ) வணிகர்  ) கண் மருத்துவர்

13) நன்கலம் என்பதன் இலக்கணக்குறிப்பு      

) உம்மைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) விளித்தொடர் ஈ) அடுக்குத்தொடர்

14) இப்பாடல் இடம்பெற்ற நூல் யாது?


) பரிபாடல்  ) சிலப்பதிகாரம்   ) முத்துக்குமாரசாமிப் பிள்ளைத்தமிழ் 


) பெருமாள் திருமொழி

15) இயைபு நயத்தைத் தேர்ந்தெடு

) கண் – பொன்  ) ஆளரும் – தருநரும்  

) கம்பி - கட்டிய  ) கிழியினும் - கிடையினும்

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                              பிரிவு-1                                                           4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க: (21 கட்டாயவினா)

16) பாசவர், வாசவர், பல்நிண விலைஞர், உமணர் - சிலப்பதிகாரம் காட் டும் இவ்வணிகர்கள் யாவர்?                                                                                                                              

17) மெய்க்கீர்த்தி பாடப்ப டுவதன் நோக்கம் யாது?                                                                             

18) வறுமையிலும் படிப்பின்மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று.தருக

19) குறிப்பு வரைக - அவையம்.                                                                                                                      

 20) காலக் கழுதை கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?                                                          

21) ’செயற்கை’ னத்தொடங்கும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.

                                                               பிரிவு-2                                                             5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) புறத்திணைகளில் எதிரெதிர்த் திணைகளை அட்டவணைப்படுத்துக.

23) பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.                                     

    பழங்காலத்திலே பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட

 சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு

 ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப்

 போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன் - ம.பொ.சி

24) வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு

 உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக                                                                                                                                                           

25) உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.                                                                

     . தாமரை இலை நீர்போல ஆ. மழைமுகம் காணாப் பயிர்போல.

26) ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

      அ. புதுக்கோட்டை ஆ. திருச்சிராப்பள்ளி இ. உதகமண்டலம்  ஈ. கோயம்புத்தூர்

27) சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

      அ. கானடை ஆ. வருந்தாமரை

28) கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க :  1. Guild  2.  Renaissance

பகுதி-3 (மதிப்பெண்:18)

                                                               பிரிவு-1                                                               2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) .“தலையைக்கொடுத்தேனும் தலைநகரைக்காப்போம்”இடம் சுட்டிப்பொருள் விளக்குக.                                                                                                         

30) சங்க இலக்கிய அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.                                                                                                                                

 31) பத்தியைப் படித்து விடை எழுதுக

     1953–54ஆம் ஆண்டுகளில் தெற்கெல்லைப் பகுதிகளைக் கேரள(திருவிதாங்கூர்) முடியாட்சியிலிருந்து மீட்கவும் போராடினோம். தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்தது தமிழரசுக் கழகம்தான் என்றாலும் அதனை நடத்துகின்ற பொறுப்பை எல்லைப்பகுதி மக்களிடமே விட்டு வைத்திருந்தேன். அவர்களுள் பி.எஸ். மணி, . சங்கரலிங்கம், நாஞ்சில் மணிவர்மன், பி.ஜே.பொன்னையா ஆகியோர் முதன்மையானவர்கள்.

1. தமிழக வடக்குதெற்கு எல்லைக் கிளர்ச்சிகளைத் தமிழகம் தழுவிய அளவில் தொடங்கிவைத்த அமைப்பு யாது?  

2. தெற்கெல்லைப் பகுதிகளைத் தனவசம் வைத்திருந்த அரசு எது ?

3. இப்பத்திக்குப் பொருந்திய தலைப்பொன்று தருக.             

                                                                பிரிவு-2                                                             2X3=6                                                 

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)

32) ‘முதல்மழை விழுந்ததும்என்னவெல்லாம் நிகழ்வதாக கு..ரா. கவிபாடுகிறார்?

33) எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?.

34) அ. மாற்றம்….. எனத்தொடங்கும் காலக்கணிதப் பாடலை அடிமாறாமல் எழுதுக

(அல்லது)

      ஆ. நவமணி …. எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

                                                                பிரிவு-3                                                             2X3=6                                                  

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:                               

           இகழ்ந்தெள்ளா  தீவாரைக்  காணின்  மகிழ்ந்துள்ளம்

           உள்ளுள்  உவப்ப  துடைத்து.

36)  அவந்தி நாட்டு மன்னன்,மருதநாட்டு மன்னனுடன் போர்புரிந்து அந்நாட்டைக் கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக.                                                                    

37) நிரல்நிரை  அணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  5X5=25

38) ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

(அல்லது)

 ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க .

39) ) நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் 'உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.    

(அல்லது)

    ) உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக

40) ) மொழிபெயர்க்க

     Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils..

(அல்லது)

    ) மாணவ நிலையில்நாம் பின்பற்றவேண்டிய அறங்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக

41) மேல்நிலைவகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                  3X8=24

43) ) நாட்டுவிழாக்கள்-விடுதலைப்போராட்ட வரலாறு-நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு - குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும்’ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.                                         

(அல்லது)

 ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.

44) ) 'அழகிரிசாமியின் ‘ஒருவன் இருக்கிறான் ’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதைமாந்தர் குறித்து எழுதுக.                                      

(அல்லது)

  ) குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் நாடகம் எழுதுக.

    மாணவன் – கொக்கைப் போல,கோழியைப் போல – உப்பைப் போல – இருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் – குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத் தெரியாவிட்டா லும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர் விளக்கம் - மாணவன் மகிழ்ச்சி.

45) ) பள்ளி வளாகத்தில் நடைபெற்ற'மரம் நடுவிழாவுக்கு' வந்திருந்தசிறப்பு விருந்தினருக்கும் பெற்றோருக்கும் பள்ளியின்'பசுமைப்பாதுகாப்புப்படை' சார்பாக நன்றியுரைஎழுதுக.

(அல்லது)

   ) உங்கள் ஊரில் கடினஉழைப்பாளர் - சிறப்புமிக்கவர் - போற்றத்தக்கவர்என்ற நிலைகளில் நீங்கள்    

      கருதுகின்ற பெண்கள் தொடர்பான செய்திகளைத் தொகுத்து வழங்குக.

 

மேல்நிலை வகுப்புசேர்க்கை விண்ணப்பப் படிவம் 

சேர்க்கை எண்: --------   நாள்: ----------  வகுப்பும் பிரிவும்: ------------------    

1.   மாணவரின் பெயர்                                         :      

2.  பிறந்த நாள்                                                    :      

3.  தேசிய இனம்                                                 :      

4.  பெற்றோர் / பாதுகாவலர் பெயர்                        :      

5.  வீட்டு முகவரி                                                 :      

6.  இறுதியாகப் படித்த வகுப்பு                               :      

7.  பயின்ற மொழி                                               :      

8.  இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி              :      

9.  பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள்              :      

தேர்வின் பெயர்

பதிவு எண் - ஆண்டு

பாடம்

மதிப்பெண் (100)

 

 

தமிழ்

 

ஆங்கிலம்

 

கணிதம்

 

அறிவியல்

 

சமூக அறிவியல்

 

மொத்தம்

 

 

9.  மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா?              :   

10. தாய்மொழி                                                             :   

11.  சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று மொழியும்            :   

 

மாணவர் கையெழுத்து

TO DOWNLOAD PDF CLICK HERE

 

 

1 கருத்துகள்

நன்றி

  1. தங்கள் கல்விச்சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் நண்பரே

    பதிலளிநீக்கு
புதியது பழையவை