10 TH STD TAMIL QUESTION AND ANSWERS IYAL-5

10.ஆம் வகுப்பு - தமிழ்

வினாவிடைகள் இயல்-5


ஒருமதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 1 முதல் 15)

1) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்என்னும் சின்னமனூர்ச் செப்பேடு உணர்த்தும் செய்தி

அ) சங்க காலத்தில் மொழி பெயர்ப்பு இருந்தது       ஆ) காப்பிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது     

இ) பக்தி இலக்கியக்காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது  ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

2) அருந்துணை என்பதைப் பிரித்தால்- -------------என வரும்

அ)அரு+துணை  ஆ)அருமை +துணை   இ)அருமை+இணை   ஈ)அரு+இணை

3) ’இங்கு நகரப்பேருந்து நிற்குமா?’ இன்று வழிப்போக்கர் கேட்பது----------வினா.

   ‘அதோ அங்கு நிற்கும்என்று மற்றொருவர் கூறியது--------------விடை

அ)ஐய வினா, வினா எதிர் வினாதல் ஆ) அறியா வினா, மறை விடை

இ)அறியா வினா, சுட்டு விடை   ஈ)கொளல் வினா, இனமொழி விடை

4) “அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

      மருளை யகற்றி மதிக்கும்  தெருளை” -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது

அ) தமிழ்    ஆ) அறிவியல்    இ) கல்வி     ஈ) இலக்கியம்

5)  இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்----இடைக்காடனாரிடம் அன்புவைத்தவர்---

அ) அமைச்சர், மன்னன் ஆ)அமைச்சர்,இறைவன் இ) இறைவன், மன்னன் ஈ)மன்னன், இறைவன்

6) ஒரு மொழியில் உணர்த்தப்பட்டதை  வேறொரு மொழியில் வெளியிடுவது மொழிபெயர்ப்பு என்றவர்

அ) அகத்தியலிங்கம்  ஆ)மணவை முஸ்தபா    இ) கால்டுவெல்   ஈ) மா பொ சி 

7) ’மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரி சங்கம் வைத்தும்’ என்னும் குறிப்பு எந்த செப்பேட்டில் உள்ளது

அ)உத்திரமேரூர் செப்பேடு  ஆ) ஆதிச்சநல்லூர் செப்பேடு  இ) சின்னமனூர் செப்பேடு 

8) ஒரே நேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடை அளிப்பது--

அ) தசாவதானம்   ஆ) சதாவதானம்  இ) பதின்மம்   ஈ) பதின் கவனம் 

9)செய்குத்தம்பி பாவலர்----------என  அழைக்கப்படுகிறார்

அ) நாஞ்சில் கவிஞர்  ஆ) மக்கள் கவிஞர்  இ) சதாவதானி  ஈ) தசாவதானி 

10)வினா----------  வகைப்படும்.                                                                                               

அ)ஆறு   ஆ)ஏழு   இ)எட்டு  ஈ)ஒன்பது                                                                                                                   

11)விடை----------- வகைப்படும்                                                                                          

அ)ஆறு   ஆ)ஏழு   இ)எட்டு  ஈ)ஒன்பது                                                                                                                    

12)பொருள்கோள்------------ வகைப்படும்                                                                                          

அ)ஆ)6    இ)ஈ)8

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடையளிக்க.

"ஓங்கு தண் பணைசூழ் நீப வனத்தை நீத்து ஒரு போதேனும்

நீங்குவம் அல்லேம் கண்டாய் ஆயினும் நீயும் வேறு

தீங்கு உளை அல்லை காடன் செய்யுளை இகழ்தலாலே

ஆங்கு அவன் இடத்தில் யாம் வைத்த அருளினால் வந்தேம் என்னா."

1. பாடல் இடம் பெற்ற நூல்-

அ) பெரியபுராணம்  ஆ) திருவிளையாடற்புராணம்  இ) கந்தபுராணம்  ஈ) பரிபாடல்

2. பாடலின் ஆசிரியர்

அ) பரஞ்சோதி முனிவர்  ஆ) கம்பர்   இ) சேக்கிழார்  ஈ) குலசேகராழ்வார்

3. பாடலில் பயின்று வந்துள்ள அடி எதுகைகளைத் தேர்க.

அ) ஓங்கு – பனை  ஆ) நீங்குவம் –அல்லோம்  இ) ஓங்கு -  நீங்குவம்  ஈ) நீத்து - நீயும்

4. நீபவனம் என்ற சொல்லின் பொருளைத் தேர்க.

அ) ஆலவனம்   ஆ) இடும்பவனம்  இ) முல்லை வனம்  ஈ) கடம்பவனம்

இரண்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 16 முதல் 28)   

1. “கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன்பால் பொழிந்த

பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென் சொல்“

-இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார் ? காதல்மிகு கேண்மை யினான் யார் ?

விடை: குசேலபாண்டியன்,இடைக்காடனார்

2. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

விடை: அருளைப்பெருக்க கல்வி கற்போம்,அறிவைத்திருத்த கல்வி கற்போம்

3. அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.

விடைஅமர்+த்(ந்)+த்+ஆன்

      அமர்-பகுதி, த்-சந்திந்-விகாரம், த்-இறந்தகால இடைநிலை , ஆன் - ஆண்பால் விகுதி

4. இந்த அறை இருட்டா க இருக்கிறது. மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது?

இதோ ... இருக்கிறதே ! சொடுக்கியைப் போட்டா லும் வெளிச்சம் வரவில்லையே ! மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

விடை:

   # மின்விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? -அறியா வினா

   # மின்சாரம் இருக்கிறதா , இல்லையா? - ஐய வினா

5. வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை:    வினா 6 வகைப்படும். அவை:

1.     அறி வினா

2.    அறியா வினா

3.    ஐய வினா

4.    கொளல் வினா

5.    கொடை வினா

6.    ஏவல் வினா

6. விடை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

விடை:   விடை 8 வகைப்படும். அவை:

1.     சுட்டு விடை

2.    மறை விடை

3.    நேர் விடை

4.    வினா எதிர் வினாதல் விடை

5.    உற்றது உரைத்தல் விடை

6.    உறுவது கூறல் விடை

7.    ஏவல் விடை

8.    இனமொழி விடை

7. சதாவதானம் என்றால் என்ன?

விடை:  ஒரேநேரத்தில் நிகழ்த்தப்படும் நூறு செயல்களையும் நினைவில் கொண்டு விடையளித்தலேசதாவதானம்.

8.வினா வகையையும் விடை வகையையும் சுட்டுக.

1. "காமராசர் நகர் எங்கே இருக்கிறது?"  - அறியா வினா.

    "இந்த வழியாகச் செல்லுங்கள்" என்று விடை  அளிப்பது – கட்டுவிடை

2.  "எனக்கு எழுதித் தருகிறாயா?” – ஏவல் வினா

     “உனக்கு எழுதித் தராமல் இருப்பேனா?" என்று விடையளிப்பது - வினாவெதிர்வினாதல் விடை

9. உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக் கண்டு எழுதுக.

பாமகள் :  வணக்கம் ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே? (அறியா வினா)

ஆதிரை : ஆமாம்! கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். (நேர்விடை)

பாமகள் அப்படியா! என்ன தலைப்பு? (அறியா வினா)

ஆதிரை : கல்வியில் சிறக்கும் தமிழர்! (நேர்விடை) நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர் களோ?  

                மாட்டீர்களோ? (ஐயவினா)

பாமகள்:  'ஏன் வராமல்?' (வினாவெதிர்வினாதல் விடை)

10. ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுக:-

யாழிசை

It’s like new lute music

அறைக்குள் யாழிசை

ஏதென்று சென்று

எட்டிப் பார்த்தேன்

பேத்தி,

நெட்டுருப் பண்ணினாள்

நீதிநூல் திரட்டையே.

              - பாரதிதாசன்

Wondering at the lute music

Coming from the chamber

Entered I to look up to in still

My grand – daughter

Learning by rote the verses

Of a didactic compilation

Translated by Kavingar Desini

விடை:

Lute music

யாழிசை

Grand - daughter

பேத்தி

chamber

அறை

rote

நெட்டுரு

To look up

பார்த்தல்

Didactic compilation

நீதிநூல் திரட்டு

11. அட்டவணையில் விடுபட்டதை எழுதுக.

வேர்ச்

சொல்

எழுவாய்த் தொடர்

பெயரெச்சத் தொடர்

வினையெச்சத் தொடர்

விளித் தொடர்

வேற்றுமைத் தொடர்

ஓடு

அருணா ஓடினாள்

ஓடிய அருணா

ஓடி வந்தாள்

அருணா ஓடாதே!

அருணாவிற்காக ஓடினாள்

சொல்

அம்மா சொன்னார்

சொன்ன அம்மா

சொல்லிச் சென்றார்

அம்மா சொல்லாதே!

கதையைச் சொன்னார்

தா

அரசர் தந்தார்

தந்த அரசர்

தந்து சென்றார்

அரசே தருக!

புலவருக்குத் தந்தார்

பார்

துளிர் பார்த்தாள்

பார்த்த துளிர்

பார்த்துச் சிரித்தாள்

துளிரே பார்க்காதே

துளிருடன் பார்த்தேன்

வா

குழந்தை வந்தது

வந்த குழந்தை

வந்து பார்த்தது

குழந்தையே வா

குழந்தைக்காக வந்தாள்

12. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

விடை: அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்

2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

விடை: நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

3. வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

விடை: இன்பத் துன்பம் நிறைந்த வாழ்க்கைப்பயணமே வேறுபட்ட பாடங்களைக் கற்றுத் தருகிறது.

4. கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

விடை: சிறந்த கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்.

5. குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்.

விடை: சுட்டிக் குழந்தைகள் தனித்தனியே எழுதித் தர வேண்டும்

13. தொழிற்பெயர்களின் பொருளைப் புரிந்துகொண்டு தொடர்களை முழுமை செய்க.

1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும்--- யாவும், அரசுக்கே சொந்தம், நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் -----நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல், புதைத்தல்)

விடை : புதையல், புதைத்தல்

2. காட்டு விலங்குகளைச் ---உதவுகிறது. (கட்டல், சுடுதல்) தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச்---- திருந்த  உதவுகிறது

விடை : கடுதல், சுட்டல்

3. காற்றின் மெல்லிய----- பூக்களைத் தலையாட்ட வைக்கிறது. கைகளின் நேர்த்தியான -----பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், நொடுதல்)

விடை: தொடுதல், தொடுத்தல்

4.பசுமையான ---- ஐக்------ கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)

விடை காட்சி, காணுதல்

5. பொதுவாழ்வில் ------ கூடாது.-----இல்  அவரை மிஞ்ச, ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)

விடை : நடித்தல், நடிப்பு

14. அகராதியில் காண்க.

1.     மன்றல் -  திருமணம்

2.    அடிச்சுவடு -  காலடியின் அடையாளம்

3.    அகராதி - அகரமுதலி

4.    தூவல் -  மழை, இறகு, பேனா, ஓவியம்

5.    மருள் -  மயக்கம், வியப்பு

15. கலைச்சொல் தருக           

1.     Emblem - சின்னம்

2.    Intellectual - அறிவாளர்

3.    Thesis - ஆய்வேடு

4.    Symbolism – குறியீட்டியல்

மூன்று மதிப்பெண் வினா விடைகள் (வினா எண்: 29 முதல் 37)

1. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

விடை:

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

2. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள் ? விடை:

ü  கல்வியே இவ்வுலகில் மிகச்சிறந்த செல்வமாகும்.

ü  கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

ü  கல்லாதவரின் கண்கள் புண்களாகக் கருதப்படும்.

ü  கல்வியே வாழ்க்கையைச் செம்மையாக்கும்.

3. ஐக்கிய நா டுகள் அவையில் மொழிபெயர்ப்பு

      ஐ.நாஅவையில் ஒருவர் பேசினால் அவரவர் மொழிகளில் புரிந்துகொள்வதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. மொழிபெயர்ப்பு (translation) என்பது எழுதப்பட்டதை மொழிபெயர்ப்பது; ஆனா ல் ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது விளக்குவது( I n t e r p r e t i n g ) எ ன்றே சொல்லப்படுகிறது. ஐ.நா.அவையில் ஒருவர் பேசுவதை மொழிபெஅவயர்க்கும் மொழிபெயர்ப்பாளர் பார்வையாளர்களுக்குத் தெரியாதபடி வேறு இடத்தில் இருப்பார் . ஒருவர் பேசுவதைக் காதணி கேட்பியில் (Headphone) கேட்டபடிசில நொடிகளில் மொழிபெயர்த்து ஒலிவாங்கி வழியே பேசுவார் .அவையில் உள்ள பார்வையாளர் தம்முன் உள்ள காதணி கேட்பியை எடுத்துப் பொருத்திக் கொண்டு அவரது மொழியில் புரிந்து கொள்வார் .

இப்பகுதியிலிருந்து ஐந்து வினாக்களை உருவாக்குக.

விடை:

1)     மொழிபெயர்ப்பு என்பது யாது?

2)    I n t e r p r e t i n g என்பதன் தமிழாக்கம் என்ன?

3)    மொழிபெயர்ப்பாளர்கள் எங்கு அமர்ந்திருப்பார்கள்?

4)    ஒருவர் பேசும்போதே மொழிபெயர்ப்பது----என்று சொல்லப்படுகிறது.

5)    அவைப்பேச்சாளர்கள் உரையைப் பார்வையாளர்கள் எப்படிப்புரிந்து கொள்வர்?

4. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும்.

இக்குறட்பா வில் அமைந் துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

விடை: ஆற்றுநீர்ப் பொருள்கோள்தொடக்கம் முதல் இறுதிவரை ஆற்றின் நீரோட்டம் போல ஒரே சீராகச் செல்வது.

ஐந்து மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண் 38 முதல் 42)

1. இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.  (வினா எண்:38)

விடை:

ü  குசேல பாண்டியன் இடைக்காடனாரின் பாடலைக் கேட்காமல் அவமதித்தான்.

ü  இடைக்காடனார் இறைவனிடம் முறையிட்டார்

ü  இறைவன் கடம்பவனத்தைவிட்டு வையையின் தென்கரையில் தங்கினார்.

ü  குசேல பாண்டியன் பதற்றத்துடன் இறைவனைக் காணச்சென்றார்.

ü  இறைவன் குசேல பாண்டியனின் தவறைச் சுட்டிக்காட்டினான்

ü  தன் தவற்றை உணர்ந்த மன்னன் இடைக்காடனாருக்குச் சிறப்பு செய்தான்

2)காட்சியைக்கண்டு கவினுற எழுதுக. (வினா எண்:40)

சிந்திக்கத் தூண்டும் காட்சி!

சிந்தையில் நின்ற காட்சி!

எதிர்காலத்தேவை இக்காட்சி!

உண்மையை உணர்த்தும் காட்சி!

மனதில் வைத்தால் நமக்கு

நன்மையை அளிக்கும் காட்சி!

என் கவிதைக்கு இரையான காட்சி!



 

4) நிற்க அதற்குத் தக   (வினா எண்:42)

பள்ளியிலும், வீட்டிலும் நீ நடந்து கொள்ளும் விதம் குறித்து பட்டியலிடுக.

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்..

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துக்கொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன். ..

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

 

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்

 5. நூலக உறுப்பினர் படிவம்.   (வினா எண்:41)

   விழுப்புரம் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

விடை: (பயிற்சி செய்க)

நூலக உறுப்பினர்  படிவம்

----------மாவட்ட நூலக ஆணைக்குழு

மைய / கிளை / ஊர்ப்புற நூலகம் --------

 

அட்டை எண்:                                                                           உறுப்பினர் எண்:                                    

1.    பெயர்                                                         :          

2.   தந்தை பெயர்                                             :          

3.   பிறந்த நாள்                                                :          

4.   வயது                                                         :          

5.   படிப்பு                                                         :          

6.   தொலைபேசி / அலைபேசி எண்              :          

7.   முகவரி                                                      :          

      (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)                           

                 நான் --------- நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன் காப்புத்தொகை ரூ. ------ சந்தா தொகை ரூ. ----- ஆக மொத்தம் ரூ. ----- செலுத்துகிறேன். நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.

 

இடம்:  

நாள்:                                                                                                                                                                                

                                                                                                    தங்கள் உண்மையுள்ள

     

திரு / திருமதி / செல்வி / செல்வன் ----------------- அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.

        

                                                                                              பிணையாளர் கையொப்பம்        

அலுவலக முத்திரை                                                                     

(பதவி மற்றும் அலுவலகம்)

எட்டு மதிப்பெண் வினா விடைகள் ( வினா எண்: 43 முதல் 45)

1. தமிழின் இலக்கிய வளம் - கல்விமொழி - பிறமொழிகளில் உள்ள இலக்கிய வளங்கள் -அறிவியல் கருத்துகள் - பிறதுறைக் கருத்துகள் - தமிழுக்குச் செழுமை.

      மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு ' செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை ' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றுக்கு நடுப்பக்கக் கட்டுரை எழுதுக.    ( வினா எண்: 43)

விடை:

                      செம்மொழித் தமிழுக்கு வளம் சேர்க்கும் மொழிபெயர்ப்புக் கலை

முன்னுரை:
   
மொழிகளுக்கு இடையேயான வேற்றுமைகளை வேற்றுமைகளாகவே நீடிக்க விடாமல் ஒற்றுமைப்படுத்த உதவுவது மொழிபெயர்ப்பு.
தமிழில் இலக்கிய வளம்:
   
சங்க காலத்திலேயே தமிழில் மொழிபெயர்ப்பு இருந்ததைச் சின்னமனூர் செப்பேடு குறிப்பிடுகிறது. வடமொழியில் வழங்கிவந்த இராமாயண மகாபாரத தொன்மச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன.
கல்வி மொழி:
    
மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும் நமக்கு வேண்டியதை நாமே உருவாக்கிக்கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும்.
பிறமொழி இலக்கிய வளங்கள்:
      
பிற மொழி இலக்கியங்களை அறிந்துகொள்ளவும் அவை போன்ற புதிய படைப்புகள் உருவாகவும் மொழிபெயர்ப்பு அவசியமாகிறது.
அறிவியல் கருத்துக்கள்:
        
இன்றைய வளரும் நாடுகளில் அறிவியலை உருவாக்கவும் மொழிபெயர்ப்பு உதவுகிறது. உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் அறிவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
தமிழுக்குச் செழுமை:
    
மொழிபெயர்ப்புக் கல்வியை ஊக்குவித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் நமது தமிழ்மொழி இன்னும் செழுமை அடையும்.
முடிவுரை:
         ”
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்         

          செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்

   என்று பாரதி கூறுவதை தமிழகம் செயல்படுத்தவேண்டும் மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையை நாம் உணர வேண்டும்.

 2. ’கற்கை நன்றே கற்கை நன்றே

     பிச்சை புகினும் கற்கை நன்றே ’ என்கிறது வெற்றிவேற்கை . மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கை யில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க .

( வினா எண்: 44)

விடை:

ü  அறிவும் பண்பும் இறைவன் நமக்கு கொடுத்த வரம் ஆகும் இவ்வறிவால. கல்விகற்று மேலும் மனிதனுக்குரிய பண்புடன் திகழ்தல் வேண்டும்.

ü   கல்விக்கு இனமோ மதமோ சாதியோ ஒரு தடையில்லை ஒவ்வொருவரின் உரிமையும் கடமையும் கல்வி கற்பதே ஆகும்.

ü  வெள்ளை இனத்தவர், கறுப்பினத்தவர் என்ற பாகுபாடு இருந்ததை இச்சிறுகதை வாயிலாக அறிய முடிகிறது.

ü  மேரி ஜான் எனும் சிறுமி 5 மைல் தூரம் நடந்து சென்று அலுப்புத் தட்டாமல் எழுதவும் படிக்கவும் தெரிந்தவர் என்ற  பட்டம் பெறும்போது அவள் பெற்ற உவகையை வார்த்தையில் கூற இயலாது.

ü  கல்வியறிவு மனிதனுக்கு மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து இருந்தாள் சிறுமி மேரி ஜேன்.நாமும் தன்மான உணர்வோடு கல்வியைக் கற்று கல்லாதவருக்கும் கல்வியை அளித்து உலகை ஒளிரச் செய்வோம்.

3.மதிப்புரை எழுதுதல்

பள்ளி ஆண்டுவிழா மலருக்காக நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக.

குறிப்புச்சட்டகம்

நூலின் தலைப்பு

நூலின் மையப் பொருள்

மொழிநடை

வெளிப்படுத்தும் கருத்து

நூலின் நயம்

நூல் கட்டமைப்பு

சிறப்புக்கூறு

  நூல் ஆசிரியர்

நூலின் தலைப்பு:

                        பரமார்த்தகுரு கதை

நூலின் மையப் பொருள்:

                        சீடர்கள் குருவிடம் கொண்டுள்ள பக்தியும்,விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பது நூலின் மையப் பொருள்.

மொழிநடை:

    நகைச்சுவையுடன் யாவருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது.

வெளிப்படுத்தும் கருத்து:

                        பகுத்தறிவுடன் செயலபட வேண்டும் என ஒவ்வொரு கதையிலும் வெளிப்பட்டு இருக்கிறது.

நூலின் நயம்:

                        விழிப்புணர்வுடனும் நகைச்சுவையுடனும் எழுதப்பட்டுள்ளது.

நூல் கட்டமைப்பு:

                        சிறுவர்கள் ஆர்வமுடன் படிக்கும் வகையில் நூலின் கட்டமைப்பு உள்ளது.

சிறப்புக்கூறு:

                        ஒவ்வொரு கதையும் பகுத்தறியும் திறனை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஆசிரியர்:   வீரமாமுனிவர்.

PDF வடிவில் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்




You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை