7 TH STD TAMIL TERM- 2 UNIT 3 QUESTION & ANSWER

 

7.ஆம் வகுப்பு -தமிழ் வினாவிடைகள்

இரண்டாம் பருவம் இயல் - 3

ஒரு வேண்டுகோள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. மயிலும் மானும் வனத்திற்கு ---------தருகின்றன.

அ) களைப்பு  ஆ) வனப்பு   இ) மலைப்பு   ஈ) உழைப்பு

2. மிளகாய் வற்றலின்----- தும்மலை வரவழைக்கும்.

அ) நெடி ஆ) காட்சி   இ) மணம்   ஈ) ஓசை

3. அன்னை தான் பெற்ற சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்.

அ) தங்கையின் ஆ) தம்பியின்  இ) மழலையின்  ஈ) கணவனின்

4. 'வனப்பில்லை' என்னும் சொல்லைப் பிரித்தெழுதக் கிடைப்பது

அ) வனம் + இல்லை   ஆ) வனப்பு + இல்லை   இ) வனப்பு + யில்லை   ஈ) வனப் + பில்லை

5. 'வார்ப்பு + எனில்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது

அ) வார்ப்எனில்  இ) வார்ப்பெனில்  ஆ) வார்ப்பினில்  ஈ) வார்பு எனில்

நயம் அறிக.

ஒரே எழுத்திலோ ஓசையிலோ முடியும் இயைபுச்சொற்களைப் பாடலில் இருந்து எடுத்து எழுதுக.

விடை:

1. பிரும்மாக்களே  - சேர்ப்பவர்களே

2. உடைப்பவனின்-உழவனின்

3. சிகரங்களா அலைகளா காடுகளா - பள்ளத்தாக்குகளா - தோட்டங்களா

4. வனப்பில்லை -உயிர்ப்பில்லை

குறு வினா

1. தாய்மையின் ஓவியத்தில் நிறைந்திருக்க வேண்டியவை?

விடை:  அன்பும், தாய்மையும்

2. ஒரு கலை எப்பொழுது உயிர்ப்புடையதாக அமையும்?

விடை: ஒரு கலை மானுடப்பண்புடன் உள்ளபொழுது உயிர்ப்புடையதாக அமையும்

சிறு வினா

1. சிற்பங்களும் ஓவியங்களும் எவ்வாறு அமைய வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?

விடை:

ü  நீங்கள் பாறை உடைப்பவரின் சிலையைச் செதுக்கினால், அதில் வியர்வை நாற்றம் வீச வேண்டும்.

ü  உழவரின் உருவ வார்ப்பாக இருந்தால், அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்.

ü  தாயின் மகிழ்ச்சியான ஓவியத்தை வரைந்தால், அவரின் முகத்தில் அன்பும் பாசமும் நிறைந்து இருக்க வேண்டும்.

ü  சிறு குழந்தையின் சித்திரத்தைத் தீட்டினால் அதன் பால் மணம் கமழ வேண்டும்.

ü  ஆனால் அதில் மானுடப்பண்பு கட்டாயம் இருக்க வேண்டும்.

சிந்தனை வினா

1 . நீங்கள் ஒரு கலைஞராக இருந்தால் எத்தகைய படைப்புகளை உருவாக்குவீர்கள்?

    நான் ஒரு ஓவியக்கலைஞராக இருந்தால் உயிரோட்டமுள்ள ஓவியங்களையும் மனித நேயச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையிலும் மக்கள் விழிப்படைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களையும் சமுதாய முன்னேற்றத்திற்கான ஓவியங்களையும்  உருவாக்குவேன்.

கீரைப்பாத்தியும், குதிரையும்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. 'ஏறப் பரியாகுமே' என்னும் தொடரில் 'பரி' என்பதன் பொருள்

அ) யானை  ஆ) குதிரை  இ) மான்  ஈ) மாடு

2. பொருந்தாத ஓசை உடைய சொல்

அ) பாய்கையால்  ஆ) மேன்மையால்  இ) திரும்புகையில்  ஈ) அடிக்கையால்

3. 'வண்கீரை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) வண் + கீரை  ஆ) வண்ணம் + கீரை  இ) வளம் + கீரை  ஈ) வண்மை + கீரை

4. கட்டி + அடித்தல் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) கட்டியிடித்தல்  ஆ) கட்டியடித்தல்  இ) கட்டி அடித்தல்  ஈ) கட்டு அடித்தல்

சிறுவினா

1. கீரைப்பாத்தியும் குதிரையும் எக்காரணங்களால் ஒத்திருக்கின்றன?

கீரைப்பாத்தி

குதிரை

மண்கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.

வண்டிகளில்கட்டி, அடித்து ஓட்டப்படும்.

மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.

கால் மாறி மாறிப் பாய்ந்து செல்லும்.

 

வாய்க்காலில் மாறி மாறி நீர்ப்பாய்ச்சுவர்

எதிரிகளை மறித்துத் தாக்கும்.

நீர் கடைமடையின் இறுதிவரை சென்று மாற்றிவிடத் திரும்பும்.

போக வேண்டிய இடம் முழுதும் சென்று மீண்டும் திரும்பி வரும்.

 சிந்தனை வினா

நீங்கள் எவற்றைக் குதிரையோடு ஒப்பிடுவீர்கள்?

விடை:

    நான் குதிரையையும் ஆற்றையும் ஒப்பிடுவேன். குதிரை மற்றும் ஆறு ஆகிய இரண்டும் ஓடும், சுழி இருக்கும். தாக்கும்.

பேசும் ஓவியங்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. குகை ஓவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று

அ) மண்துகள் ஆ) நீர் வண்ணம் இ) எண்ணெய் வண்ணம் ஈ) கரிக்கோல்

2. நகைச்சுவை உணர்வு வெளிப்படுமாறு வரையப்படும் ஒவியம்

அ) குகை ஓவியம்    ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்

3. 'கோட்டோவியம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கோடு + ஓவியம்   ஆ) கோட்டு + ஓவியம் இ) கோட் + டோவியம் ஈ) கோடி + ஒவியம்

4. 'செப்பேடு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) செப்பு + ஈடு  ஆ) செப்பு + ஓடு   இ) செப்பு + ஏடு ஈ) செப்பு + யேடு

5. எழுத்து + ஆணி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்

அ) எழுத்து ஆணி ஆ) எழுத்தாணி   இ) எழுத்துதாணி   ஈ) எழுதாணி

கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. கருத்துப்படங்களை அறிமுகப்படுத்தியவர் - பாரதியார்

2. கலம்காரி ஓவியம் என்றுஅழைக்கப்படுவதுதுணி ஓவியம்

3. மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும். செப்பேடுகளில்  மீது பொறித்துப் பாதுகாத்தனர்

குறு வினா

1. ஓவியங்களின் வகைகள் யாவை?

விடை: 

v  குகை ஓவியம்

v  சுவர் ஓவியம்

v  துணி ஓவியம்

v  ஓலைச்சுவடி ஓவியம்

v  செப்பேட்டு ஓவியம்

v  தந்த ஓவியம்

v  கண்ணாடி ஓவியம்

v  தாள் ஓவியம்

v   கருத்துப்பட ஒவியம்

v  நவீன ஓவியம்

2. குகை ஓவியங்களில் இருந்து நாம் அறியும் செய்திகள் யாவை?

விடை:   குகை ஓவியங்களில் இருந்து செய்திகளை மற்றவர்களுக்குத் தெரிவிப்பதற்காக குகைகளில் ஓவியம் வரைந்ததையும் பழந்தமிழர் வாழ்க்கை முறைகளையும் அறியலாம்.

3. தாள் ஓவியங்களை எவற்றைக் கொண்டு வரைவர்?

விடை: கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைக் கொண்டு தாள் ஓவியங்களை வரைவர்.

4. சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களைக் கூறுக.

விடை: அரண்மனைகள், மண்டபங்கள், கோவில்கள் ஆகியவற்றின் மேற்கூரைகளிலும் சுவர்களிலும் சுவர் ஓவியங்கள் காணப்படும் இடங்களாகும்.

5. செப்பேட்டு ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் யாவை?

விடை: நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குகள், குறியீடுகள் ஆகியன செப்பேட்டு

ஓவியங்களில் காணப்படும் காட்சிகள் ஆகும்.

சிறு வினா

1. கேலிச்சித்திரம் என்றால் என்ன?

விடை: மனித உருவங்களை விந்தையான தோற்றங்களில் நகைச்சுவை தோன்றும் படி வரைவதைக் கேலிச்சித்திரம் என்பர்.

2. ஓலைச்சுவடி ஓவியங்கள் குறித்து நீங்கள் அறிந்து கொண்டவற்றை எழுதுக.

ü  ஓலைச்சுவடிகள் மீது எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும் வண்ணப்பூச்சு ஓவியமாக வரைவர்.

ü  இவை பெரும்பாலும் புராண, இதிகாசக் காட்சிகளைக் கொண்டு இருக்கும்.

ü  இவை தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் மட்டுமே காணப்படுகின்றது.

சிந்தனை வினா

1. தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுவது ஏன்?

விடை:

ü  கேரளாவில் யானைகள் மிகுதியாகக் காணப்படுகின்றன. வயது முதிர்ந்த யானைகளும், தந்தங்களும் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

ü  எனவே, தந்த ஓவியங்கள் கேரளாவில் அதிகம் காணப்படுகின்றது.

தமிழ் ஒளிர் இடங்கள்

நீங்கள் சுற்றுலா வழிகாட்டியாக இருந்தால். சுற்றுலாக் கையேடு என்னும் பகுதியில் உள்ள இடங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு எவ்வாறு விளக்கிக் கூறுவீர்கள்?

விடை:

சரசுவதி மகால் நூலகம்

   தஞ்சை சரசுவதி மகால் நூலகம் இந்தியாவில் உள்ள பழமையான நூலகம் இது. கி.பி.1122 ஆம் ஆண்டு முதல் இந்த நூலகம் இயங்கி வருகின்றது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஓலைச் சவடிகள் கையெழுத்துப் படிகள் இங்கு உள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகம்

    தமிழ்ப் பல்கலைக்கழகம் இது. 1981ல் தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகம். வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என்ற பெயர் தெரியும் படி கட்டடங்கள் இருக்கின்றன. 5 புலங்களும் 25 துறைகளும் இங்கு உள்ளன.

உ.வே.சா. நூலகம்

   இது உ.வே.சா. நூலகம். இங்கு 2128 ஓலைச் சுவடிகள் மற்றும் 2041 தமிழ்நூல்களும் உள்ளன.அடுத்தது கன்னிமாரா நூலகம் 1896 ல் இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மைய நூலகம் இது. 2 இலட்சத்திற்கும்  மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.

வள்ளுவர் கோட்டம்

  இது தான் சென்னை வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.

திருவள்ளுவர் சிலை

    இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உரத்தில் உள்ளது. சிலையின் எடை ஏழாயிரம் டன் எடை கொண்டது. தமிழரின் அடையாளம் இது.

பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்

    இது அதான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலை நகரம். இக் கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இடம்பெற்றுள்ளது. 

தொழிற்பெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற் பெயர் எது?

அ) எழுது  ஆ) பாடு  இ) படித்தல்  ஈ) நடி

2. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற் பெயர் எது?

அ) ஊறு  ஆ) நடு   இ) விழு  ஈ) எழுதல்

பொருத்துக.

விடை :

1. ஒட்டகம் - விகுதி பெற்ற தொழிற்பெயர்

2. பிடி - முதனிலைத் தொழிற்பெயர்

3. சூடு -  முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்

சிறு வினா

1. வளர்தல், பேசுதல் இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.

விடை:

   வளர்தல், பேசுதல் - இவை விகுதி பெற்ற தொழிற் பெயர்கள். 'தல்' என்ற தொழிற்பெயர் விகுதி பெற்று வருவதால் இஃது விகுதி பெற்ற தொழிற் பெயர்கள் ஆயிற்று.

2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

விடை:

முதனிலைத் திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் ஆகும்.

 சான்று : விடு - வீடு

கவிதையை  நிறைவு செய்க.

வானும் நிலவும் அழகு

வயலும் நீரும் அழகு

கடலும் அலையும் அழகு

காற்றும் குளிரும் அழகு

ஒன்று கூடி மகிழ்வோம்

இயற்கைக்குக் காவலாவோம்

பசுமையை நேசிப்போம்

இயற்கையைப் போற்றுவோம்

இன்பமாய் வாழ்ந்திடுவோம்

 

படம் உணர்த்தும் கருத்தைஐந்து வரிகளில் எழுதுக.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக.         (ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள்)

(எ.கா.) ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. நுண்கலைகளுள் ஒன்று ஒவியக்கலை.

1. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. எங்கும் தமிழ் இசை.

2. கட்டடக்கலையில் தமிழர் சிறந்திருந்தனர். சிறந்த கலை கட்டடக்கலை.

3. வண்ணங்கள் தீட்டி ஓவியம் வரைவோம். மயில் தோகையில் எண்ணற்ற வண்ணங்கள்.

இடைச்சொல் '' சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக.

(எ.கா.) வீடு கட்டினான் - வீடு + ஐ + கட்டினான்  = வீட்டைக் கட்டினான்

1. கடல் பார்த்தான் - கடல் + ஐ + பார்த்தான்  = கடலைப் பார்த்தான்

2. புல் தின்றது  - புல் + ஐ + தின்றது  = புல்லைத் தின்றது

3. கதவு தட்டும் ஓசை - கதவு + ஐ + தட்டும் + ஓசை = கதவைத் தட்டும் ஓசை

4. பாடல் பாடினாள் - பாடல் + ஐ + பாடினாள் = பாடலைப் பாடினாள்

5. அறம் கூறினார் - அறம் + ஐ + கூறினார் = அறத்தைக் கூறினார்.

கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

தலைப்பு : எங்கள் ஊர்

   முன்னுரை - அமைவிடம் பெயர்க்காரணம் திருவிழாக்கள் - மக்கள் ஒற்றுமை - முடிவுரை தொழில்கள் - சிறப்பு மிகு இடங்கள்

முன்னுரை :

     அழகான நகரம், அமைதியான நகரம் எங்கள் ஈரோடு ஆகும். எண்ணற்ற வளங்கள் பொங்கும் இடம் ஈரோடு. மனிதநேயம் தவழும் நகர் எங்கள் ஈரோடு. அச்சிறப்புமிகு நகர் பற்றிக் காண்போம்.

அமைவிடம்:

    கரூர், சேலம், கோவை ஆகியற்றுக் கிடையே ஈரோடு நகர் அமைந்துள்ளது. காடுகளும் வயல்களும் சூழ்ந்து நடுவினில் இயற்கை அழகு தவழும் வண்ணம் ஈரோடு அமைந்துள்ளது. காவிரி ஆறு பாயும் புண்ணிய பூமி ஈரோடு ஆகும்.

பெயர்க்காரணம்:

    இரண்டு ஓடைகள் ஓடுவதால் ஈரோடை எனப்பெயர் பெற்றது.இதுவே காலப்போக்கில் மருவி ஈரோடு என்று ஆனது. பிரம்மா ஐந்தாவது தலையைத் துண்டித்த போது அந்த மண்டையோடு சிவபெருமானோடு ஒட்டிக்கொண்டு பிரம்ம தோசம் பிடித்தது. அவர் தோசம் போக இந்தியா முழுவதும் நீராடினார். ஈரோட்டில் வந்து நீராடிய போது மண்டை ஓடு மூன்றாகப் பிரிந்து மூன்று இடத்தில் விழுந்தது. ஈர் (இறுதி) ஓடு விழுந்த இடம் ஈரோடு  ஆயிற்று என்பர்.

தொழில்கள்:

    வேளாண்மை, கைத்தறி, ஜமக்காளம், ஆடை ஆயத்தம் ஆகிய தொழில்கள் ஈரோட்டில் சிறந்து விளங்கிவருகின்றது.

சிறப்புமிகு இடங்கள் :

    பெரியார் - அண்ணா நினைவகம், திண்டல் முருகன் கோயில், பிரப் தேவாலயம், பள்ளிபாளையம் தர்கா, பண்ணாரி அம்மன் கோவில், வ.உ.சி.பூங்கா ஆகியன ஈரேட்டில் சிறப்புமிகு இடங்கள் ஆகும்.

திருவிழாக்கள்:

    மாரியம்மன், பண்ணாரி அம்மன், பாரியூர் அம்மன், அறச்சாலை அம்மன் ஆகிய கோயில்களின் திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும். திரளான பக்தர்கள் இதில்  கலந்து கொள்வர்.

மக்கள் ஒற்றுமை:

      இந்து, இஸ்லாம், கிறித்துவம் ஆகிய சமயங்கள் எங்கள் நகரில் இருந்த போதும் மக்கள் அனைவரும் ஒரு தாய் பிள்ளை போல ஒற்றுமையாகவே இருந்துவருகின்றோம். ஒரே பகுதியில் கோயில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகிய மூன்றும் அமைந்து எங்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்துகின்றது.

முடிவுரை :

       நம் நகரின் அருமை பெருமைகளை அறிந்து, நகரைக் காத்து வளப்படுத்துவது நமது கடமையாகும்.

மொழியோடு விளையாடு

கீழ்க்காணும் புதிரைப்படித்து விடையைக் கண்டறிக.

1. நான் இனிமை தரும் இசைக் கருவி.

எனது பெயர் ஆறு எழுத்துகளை உடையது.

அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஒரு உலோகத்தைக் குறிக்கும்.

முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு பெயர் கிடைக்கும்.

நான் யார்?

விடை : மிருதங்கம்

2. நான் ஒரு காற்றுக் கருவி.

நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன்.

எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது.

முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும்.    நான் யார்?

விடை: புல்லாங்குழல்

பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க.

1. சாலையின் எந்தப்பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?

விடை: சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்.

2. விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக்குறிக்கும்?

விடை:  இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.

3. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?

விடை:  இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள்கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.

4. ஒருவழிப் பாகை எனப்படுவது யாது?

விடை: போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஒரே சாலையில் இரு கூறாகப் பிரிக்காமல், வாகனங்கள் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மைக்கப்பட்டுள்ளவை ஒருவழிப்பாதை ஆகும்.

5. வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக்கூறு.

விடை:   வாகனத்தைப் பின்தொடரும்போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக்கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.

திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. -----தீமை உண்டாக்கும்.

அ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்வதால்  ஆ) செய்யத் தகாத செயல்களைச் செய்யாமல் இருப்பதால்

இ) செய்யத் தகுந்த செயல்களைச் செய்யாமல் இருப்பதால்   ஈ) எதுவும் செய்யாமல் இருப்பதால்

2. தன் குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புவரிடம் -----இருக்கக் கூடாது.

அ) சோம்பல்  ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை  ஈ) செல்வம்

3. 'எழுத்தென்ப' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

அ) எழுத்து + தென்ப  ஆ) எழுத்து + என்ப  இ) எழுத்து + இன்ப   ஈ) எழுத் + தென்ப

4. 'கரைந்துண்ணும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) கரைந்து + இன்னும் ஆ) கரை + துண்ணும்  இ) கரைந்து + உண்ணும்  ஈ) கரை + உண்ணும்

5. கற்றனைத்து + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைப்பது---

அ) கற்றனைத்தூறும் ஆ) கற்றனைதூறும் இ) கற்றனைத்தீரும் ஈ) கற்றனைத்தோறும்

பொருத்துக.

விடை:

1. கற்கும் முறை - பிழையில்லாமல் கற்றல்

2. உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்

3. விழுச்செல்வம் -  கல்வி

4. எண்ணித் துணிக  - செயல்

5. கரவா கரைந்துண்ணும் - காகம்

குறுவினா

1. 'நன்மை செய்வதிலும் தீமை உண்டாகும்' எப்போது?

விடை:   நாம் ஒருவருடைய பண்பை அறிந்த அவருக்கு நன்மை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நன்மை செய்தாலும் தீமை வந்து சேரும்.

2. தீமை உண்டாக்கும் இரண்டு செயல்கள் யாவை?

விடை:   செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும் செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.

3. துன்பத்தில் துன்பம் உண்டாக்குபவர் யார்?

விடை:  துன்பம் வந்த போது வருந்திக் கலங்காதவர்,அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதனை வென்று விடுவர்.

பாடப்பகுதியிலிருந்து படங்களுக்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

PDF வடிவில் பதிவிறக்க


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை